Saturday, September 19, 2009

தேவதையே வா.. வா


எனக்கு இந்த தேவதையை அனுப்பியவர் பிரிவையும் நேசிப்பவள் காயத்திரி. இத்தருணத்தில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேவதையிடம் வரம் கேட்க நான் ரெடி.

முதல் வரம் : இன்று போல் என்றும் நான் வாழக் கூடாது.

இரண்டாம் வரம் : இந்த உலகத்தில் வாழும் எல்லா ஜீவராசிகளும் நோய் நொடி இல்லாமல்,சந்தோசமாக வாழ வேண்டும்.

மூன்றாம் வரம் : என்னவனின் நினைவுகள் அடுத்த ஜென்மத்திலும் தொடர வேண்டும்.(இந்த தொடரும் நினைவுகள் போல )

நான்காம் வரம் : பலரின் மனதை நான் காயப்படுத்தி உள்ளேன். அவர்களின் அன்பை மீண்டும் பெற ஒரு வரம் வேண்டும்.

ஐந்தாம் வரம் : அழகான அந்த பள்ளிக்கூட வாழ்க்கை மீண்டும் ஒரு முறை அனுபவிக்க வேண்டும்.

ஆறாம் வரம் : இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும்.

எழாம் வரம் : நான் இழந்த ஒவ்வொரு உறவுகளையும் மீண்டும் ஒரே முறை சந்திக்க வேண்டும்.

எட்டாம் வரம் : இன்னும் நிறைய கவிதைகள் நான் எழுத,அதை என்னவன் ஆசையாக படிக்க வேண்டும்.

ஒன்பதாம் வரம் : என்னால் முடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.

பத்தாம் வரம் : இந்த ஜென்மத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கை போதும், அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் என்னவனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்.

என் வரத்தை கேட்டு முடித்து விட்டேன். தேவதையிடம் பிறரும் வரத்தை கேட்டு நினைவேற எனது வாழ்த்துக்கள். என்னிடம் வந்த தேவதையை நான் இவர்களுக்கு தான் அனுப்ப போகிறேன்..

*விக்கி
*மகா
*அன்பு
*நட்புடன் ஜமால்
*வால் பையன்
தொடரும் நினைவுகளுடன் உங்கள்

Sunday, September 6, 2009

மறக்க நினைக்கும் தருணம்..


அன்புள்ள டைரி,

இந்நாளை என் வாழ்க்கையெனும் டைரியிலிருந்து மறக்க நினைக்கும் நாள். இருப்பினும் மறக்க முடியவில்லை. ஏன்? எல்லாம் உன் காதல் செய்த விளையாட்டு. உன்னிடம் என் மனதை பரிக்கொடுத்த நாள். நினைத்து பார்க்கையில் இன்னும் நெஞ்சினில் தேனாக தித்திக்கும் தருணம். உன் காதலை என்னிடம் சொன்ன நாள் தான் இன்று.

என் உள்ளதையும் உணர்வையும் புரிந்துக் கொண்டவன் நீ. உன் காதலை என்னிடம் சொன்ன பொழுது ஒரு கணம் நான் வானத்தில் பறவையை பறந்து வந்த நொடி..ஏதோ ஒரு பார்வையில் நெஞ்சம் தடுமாறியது. என் தாயிடம் நான் உணராத பாசத்தை உன்னிடம் கண்டேன். உன் கனவுகளை கவிதையாக வரைந்து நீ காதலை சொன்ன விதம் உன் மீது காதல் தீயை பரவவைத்தது. காதலுக்கு கண்கள் இல்லை என்பார்கள்,அது முற்றிலும் பொய். ஏன் தெரியுமா? நான் உன் கண்களை பார்த்த பிறகு தான் காதலிக்க தொடங்கினேன். முதல் முறையாக நான் வைரமுத்துவின் கவிதை ரசித்த நாளும் இந்நாள் தான்.

"உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்,கண்ணிரண்டும் மொழிக்கொள்ளும்,
காதலித்துப் பார்..தலையணையை அணைப்பை,தினமும் மூன்று முறை பல் துலக்குவாய்,காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்,வந்து விட்டால் வருஷங்கள் நிமிஷம் என்பாய்"
நான் ரசித்த வைரமுத்துவின் கவிதை வரிகள். உன்னை காதலித்த பிறகு நான் மட்டும் உணர்ந்த ரகசியங்கள் இவை.

உன் காதலினால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.பாசத்தின் மறுபகுதியை உணர வைத்தவனும் நீ.நான் காய்ச்சல் இருந்த பொழுது என்னக்கா நீ உன் நேரத்தை ஓதுக்கிய பொழுது, என்னை ஒரு குழந்தை போல் கவனித்துக் கொண்ட பொழுதும் நீயே என் உலகம் என்று அறிந்தேன்.ஏனோ என் சந்தோசம் நீண்ட நாள் நிடிக்கவில்லை.

உன் கண்கள் காதலின் ஆழத்தை சொன்னது.ஆனால் உன் உதடுகள் மட்டும் பொய்களை சொல்லி பிரிந்து சென்றாய். உன்னோடு நான் இருந்த 170 நாட்கள் மரண படுக்கையிலும் மறக்க மாட்டேன். அந்த ஒவ்வொரு நாளும் நான் என்னையும் என் என் காதலையும் அறிந்துக் கொண்ட நாள். மிக மிக அழகான நாட்கள்,வார்த்தைகளால் சொல்ல முடியாதடா..உனக்காக ஒரு கவிதை:

எனக்கு தெரியும் உன் காதல்
எனக்கு மட்டும் தான் என்று..
பிறகு என் இந்த பிரிவு..

பூக்கள் பறிபதற்கு அல்ல..
என் இதயங்கள் எரிப்பதற்கு
அல்ல கள்வனே..!
மீண்டும் ஒரு முறை வாழ
வரம் வேண்டும்..உன்னோடு
நான் வாழ்ந்து பார்க்க..
வெண்மதியை தூது அனுப்புகிறேன்..
என் பிரிவின் சோகத்தை
உன்னிடம் சொல்ல..!

தொடரும் நினைவுகளுடன் உங்கள்..