Tuesday, June 7, 2011

உன்னுடன் வாழ்கிறேன்..

அவனது கண்கள்
நடைப்பழகாத இரு குழந்தைகள்
என்னை காணாத
அந்த ஒரு நிமிடம்..

என்னுள் இருக்கும்
உன்னோடு சேர்ந்து மிதந்து
போகிறேன் மேகமாய்..

என்னுடன் நான் உணர்த்த
மாற்றங்கள் உன்னால் அன்பே..
உன்னுடன் என் இதயம்..
உன் உறவு எனக்கு உயிர்
உன் உறவு பிரிந்தால்
என் உயிர் பிரியும் உன் மடியில்..

Wednesday, February 2, 2011

பெண்ணே..


காவிய பெண்ணே..
புரிந்துக்
கொள் என்
காதலை
ஒரு முறை..

உறவுகள் சொல்ல பலர்
இருந்தாலும்
என் உணர்வை
புரிந்துக் கொள்ள
நீ
மட்டுமே இன்று..!

Saturday, January 1, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த புத்தாண்டில் உங்களை சந்திக்கிறேன்..
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..இவ்வாண்டில் உங்கள் கனவுகள் யாவும் நிஜமாக வாழ்த்துக்கள்..

Sunday, June 13, 2010

நினைவெல்லாம் நீ..!

மறக்க
முயலும் போதுதான்
உயிர்ப்பிக்கின்றன
உன் நினைவுகள்...

புதைக்க நினக்கும் போதுதான்
கீறித்துளிர்க்கின்றன
உந்தன் ஞாபகங்கள்...

அழிக்க
எண்ணும் போதுதான்
கண்முன் தெரிகின்றன
உந்தன் பிம்பங்கள்...

என்ன செய்ய
உன்னை நினைத்து விட்ட
குற்றத்திற்காக நான்
செத்து விடவா முடியும்?

இன்றுவரை கூட
மறந்து விடத் தோன்றவில்லை
நேற்றின் பிரதிபலிப்பால்
மனசின் வேதனை எளிதில் ஆறாது...

முகம் மறக்கும் முன்பே
முகவரியை தொலைத்து நிற்கிறது
என் வாழ்க்கை...

நீர்ச்சுழலில் சிக்கிய சருகாய்
நிறைவேறாத ஆசைகளின் அலையிலே
சுழலுகின்ற மனசு
மீண்டும் வருமென்ற நம்பிக்கை
சிறிதும் எனக்கில்லை....

வாழவேண்டும் என்ற
நிர்ப்பந்தத்தால்
எத்தனை வேதனைகளைத்தான்
விருதுகளாய் பெறுவது
காலம் கேள்வி கேட்க
பதில் சொல்ல மறுக்கிறது மனது...

இனியவளே!
புரட்டியது புத்தகத்தை
என்றாலும் அதில்
புதைந்திருப்பது
உன் புகைப்படம்...

வாழ்க்கையின்
முதல் படியேறி
வழுக்கி விழுந்தவன் நான்
எனக்கு வழிகாட்டியாய்
வந்தவள் நீ...

காவிய பெண்ணே
நடந்து பார்க்கலாம்
வாழ்க்கையை நோக்கி
நமக்கு
வழி தெரியும் வரை...

வாழ்க்கை பாதையில்
நான் பயணித்த போது
வழுக்கி விழுந்தது
பள்ளம் அல்ல
அது உன் உள்ளம்...


தொடரும் நினைவுகளுடன்

Saturday, May 1, 2010

தவிக்கும் இதயம்..!


நான் அழுகிறேன் இன்று
உன் நினைவுகளினால்..
இதனால் உறக்கம் எனக்கு
பிரிவு கடிதம் அனுப்பி இருந்தது..

எந்நேரம் அவனின் நினைவுகள்
எனக்கு அழைப்பிதழ் கொடுத்தது..
உனக்காக பிறந்தவள் நான்
என்று நினைக்கும் போது இனித்தது..!

சோதனையும் வேதனையும்
சேர்ந்ததா காதல்..?
என் கேள்விக்கு அவனின்
பதில் கண்ணீர்..

ஆனால் நீ என்னை உயிருக்கு
உயிரை நேசிக்கிறாய் என்று
நான் அறிவேன்..!

உன் கண்களில் இருந்து பாய்ந்த
உன் பாசக் கதிர்களினால் பாதிக்கபட்டது
என் இதயமாட..புரிந்துக் கொள்..!
தவிக்கும் என் இதயத்தை..!

தொடரும் நினைவுகளுடன்,

Wednesday, February 24, 2010

உன் பார்வை..!உன்னை கண்ணும் வரையில்
என் பிறப்பின் ஆழத்தை நான்
உணரவில்லை..அறியவில்லை..
உன்னை கண்ட பின்
வாழ்வில் முழுமையை
அடைந்தேன்..

ஏதோ ஒரு பார்வையில்
உன்னதை என்னை நான்
காண்கிறேன்..
உன் கண்கள் காணும்
பார்வையில் நானாக
நானில்லை அன்பே..!
தனிமை என்னை கொல்லும்
நேரம் இனிமையை இனித்தது..!

என் உயிரில் பாதி,
உன் உணர்வில் கலந்தது..!
உன் உணர்வில் பாதி,
என் நினைவில் கலந்தது..!

சில நாட்களுக்கு
பிறகு கண் விழித்து பார்த்தேன்.
கனவுகள் யாவும் கலைந்தது..
கனவில் மிஞ்சியது
கண்ணீர் மட்டுமே !

தொடரும் நினைவுகளுடன்,

Monday, December 28, 2009

ஒரு கவிதை மொழி...எல்லா மொழியிலும்
பேசியாகிவிட்டது..
முத்த மொழியோடு பேசுவோமா..
************
உறவுகள் யாவும் பகையானது..
உன் நினைவுகள் எனக்கு
உறவானது..!

உன்னை மறக்க நினைப்பதால்
உன் நினைவுகள் மீண்டும் கொல்கிறது..!