Monday, December 28, 2009

ஒரு கவிதை மொழி...



எல்லா மொழியிலும்
பேசியாகிவிட்டது..
முத்த மொழியோடு பேசுவோமா..
************
உறவுகள் யாவும் பகையானது..
உன் நினைவுகள் எனக்கு
உறவானது..!

உன்னை மறக்க நினைப்பதால்
உன் நினைவுகள் மீண்டும் கொல்கிறது..!


Monday, December 7, 2009

என் உயிர் காதலே


துடிக்காத என் இதயத்தை
துடிக்க வைத்தவனே..
உயிரில்லா என் உடலுக்கு
காதல் உயிர் கொடுத்தவனே..
உன் மீது கொண்ட
காதலை ஜென்மத்திற்கும்
அழிக்க முடியாது..

காத்திருக்கும் ஒவ்வொரு
நிமிடங்களையும் சுகமாய்
உணர்கிறேன்..உனக்காக
காத்திருப்பதால்..!
இமைகளை முடினால்,
கனவில் உன் முகம்..
என் இதயம் கொண்ட
காதலுக்கு கண்ணீர் மட்டும்
துணை..!

ரோஜா மலரை பறிக்கையில்
கைகளில் முட்கள் குத்தியது..
என் கைகளில் இருக்கும் ரோஜா
மலர்தான் தெரிந்தது..
உனக்கும் என் மனதில் இருக்கும்
வேதனை புரியவில்லை..

காத்திருப்பேன்
என் உயிர் காதலே..!


தொடரும் நினைவுகளுடன்,

Friday, December 4, 2009

ஆயிரம் எண்ணங்கள் 12


கோபம்

கோபப்படுவீர்களா? இல்லை என்பது கண்ணாடி முன் சொல்லும் பொய். காந்திக்குக்கூட கோபம் வரும் என்பது சரித்திர சாத்தியம். கோபம் மனித குணம். ஆனால் கோபப்படுவது அவசியமானது அல்ல. கோபம் என்பது என்ன? கோபம் என்பது சிந்தனை சமைக்கும் நிலை. எதிர்பார்ப்பு நிறைவேறாத போது வரும் உணர்ச்சி. கோபம் என்பது நஷ்டம் தரும் உணர்வு; வெளிப்பாடு.

பிறகு ஏன் கோபம் எனும் உணர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிறது? மனவியல் ரீதியாக பார்த்தால் கோபம் என்பது ஒரு பழக்கம். ஒரு வேலையில் ஈடுபடும் பொழுது சிலருக்கு சிகரெட் பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சிகரெட் எந்த விதத்திலும் அவர்கள் செயல் திறனை கூட்டவோ வேலை சுமையை குறைக்கவோ உதவாது என்றாலும், இது ஒரு பழக்கம். இதே போல் தான் நம் சிலரிடம் உள்ளும் கோபம் ஒரு பழக்கமாகி விட்டது. எந்த ஏமாற்றம் வந்தாலும் கோபம் வருவது குழந்தை பருவத்திலிருந்தே வளர்ந்து வரும் பழக்கம்.
ஏமாற்றத்தின் விளைவு சோகம்,கண்ணீர்,அச்சம்,அவமானம் என்றெல்லாம் வெளிப்பட்டாலும், அடிப்படை கோபம்தான்.

கோபம் வரவே கூடாதா? உணர்ச்சிகள் யாருக்கும் மழுங்கவே கூடாது. உணர்ச்சி மழுங்கினால் மனம் நோயுற்றதாய் பொருள். கோபம் என்பது ஓர் உணர்ச்சி. அது வராமல் இருப்பது பயிற்சியினால் மட்டுமே. கோபப்படுவது பிரச்சனையாவதில்லை. கோபத்தின் வெளிப்பாடு மட்டுமே பிரச்சனைகளை உருவாக்கும். நாம் எப்படி கோபத்தை கட்டுபடுத்தலாம் என்று பார்க்கலாமே! நாம் கோபித்து கொள்ளும் எதிர் நபரும் மனிதர்தான். ஒரு புன்னகை எப்படி எளிதாய் எதிர் புன்னகை ஏற்படுத்துமோ அதே போலத்தான் கோபமும். ஏன் நாமது வாழ்க்கையை புன்னகையால் அலங்கரிக்ககூடாது? புன்னகை ஒருவரின் கோபத்தையும் தணிக்கும் என்பதை நாமில் சிலர் உணர மறுக்கிறோம்.

மற்றவர்களை புரிந்துகொள்ளுதல் என்பது மிகவும் எளிதாய் நாம் கற்றுக்கொள்ளும் ஒரு விஷயம். முடிதளவு நாம் பிறரின் உணர்ச்சிகளையும் புரித்துக் கொண்டால் கோபம் என்பது சற்று தள்ளியே போகும். கோபம் பிறரின் மனதை காயபடுத்துவது மட்டுமில்லை; உடலையும் மனதையும் பாதிக்கும் ஒரு உணர்ச்சி. இதய துடிப்பு அதிகரிப்பதும்,கோபத்தினால் கவனமும் சிதறுகிறது. நிம்மதியும் குலைகிறது. கோபத்தை திசை திருப்புவதும் அவசியம். நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்வதும்,வாய்விட்டு சிரிப்பது, மற்றவர்களை நன்றாக கவனித்து புரிந்துக் கொள்ள முயல்வது, எல்லா காரியங்களையும் சிந்தித்தே செயல்வது போன்றவை கோபத்தை குறைத்துக்கொள்ள உதவும்.

எனவே கோபத்தை கட்டுப்படுத்த முயல்வோம்.


தொடரும் நினைவுகளுடன்,