
உன்னை கண்ணும் வரையில்
என் பிறப்பின் ஆழத்தை நான்
உணரவில்லை..அறியவில்லை..
உன்னை கண்ட பின்
வாழ்வில் முழுமையை
அடைந்தேன்..
ஏதோ ஒரு பார்வையில்
உன்னதை என்னை நான்
காண்கிறேன்..
உன் கண்கள் காணும்
பார்வையில் நானாக
நானில்லை அன்பே..!
தனிமை என்னை கொல்லும்
நேரம் இனிமையை இனித்தது..!
என் உயிரில் பாதி,
உன் உணர்வில் கலந்தது..!
உன் உணர்வில் பாதி,
என் நினைவில் கலந்தது..!
சில நாட்களுக்கு
பிறகு கண் விழித்து பார்த்தேன்.
கனவுகள் யாவும் கலைந்தது..
கனவில் மிஞ்சியது
கண்ணீர் மட்டுமே !
தொடரும் நினைவுகளுடன்,