
நான் அழுகிறேன் இன்று
உன் நினைவுகளினால்..
இதனால் உறக்கம் எனக்கு
பிரிவு கடிதம் அனுப்பி இருந்தது..
எந்நேரம் அவனின் நினைவுகள்
எனக்கு அழைப்பிதழ் கொடுத்தது..
உனக்காக பிறந்தவள் நான்
என்று நினைக்கும் போது இனித்தது..!
சோதனையும் வேதனையும்
சேர்ந்ததா காதல்..?
என் கேள்விக்கு அவனின்
பதில் கண்ணீர்..
ஆனால் நீ என்னை உயிருக்கு
உயிரை நேசிக்கிறாய் என்று
நான் அறிவேன்..!
உன் கண்களில் இருந்து பாய்ந்த
உன் பாசக் கதிர்களினால் பாதிக்கபட்டது
என் இதயமாட..புரிந்துக் கொள்..!
தவிக்கும் என் இதயத்தை..!
தொடரும் நினைவுகளுடன்,