
சர்வினை ஒரு வருடமாக தெரியும். ஏனோ தெரியவில்லை முதல் சந்திப்பிலையே அவனுக்கு என் மீது காதல் மலர்ந்தது. அதை என்னிடம் சொல்லிய பொழுது எனக்கு அப்படி எந்த உணர்வும் உன்னிடம் தோன்றவில்லை என்று சொல்லி சர்வினின் காதலை மறுத்தேன். இருவரின் உறவும் நட்பாக தொடர்ந்தது. கடந்த ஒரு வருடத்தில் சர்வினின் பேச்சும்,செயல்களும் அவன் என்னிடம் கட்டிய அன்பு,பாசம்,காதல் இவையெல்லாம் என்னை அறியாமலே அவனை காதலிக்க செய்தது. என் காதலை முழுமையாக இந்த அந்தி சாயும் வேளையில் உணர்ந்தேன். யாரோ தோள்களில் கை வைத்தனர்.
"என்ன திவ்யா,ஒரே யோசனை. யோசனையா இல்லை கற்பனையா" என்று கிண்டல் அடித்தான்."அது எல்லாம் ஒன்றுமில்லை"மறுமொழி அளித்தேன்.
"அப்படினா can we go,it too late"என்றான்.
"ஒ போகலாமே".
தொடரும் ...