Saturday, May 1, 2010

தவிக்கும் இதயம்..!


நான் அழுகிறேன் இன்று
உன் நினைவுகளினால்..
இதனால் உறக்கம் எனக்கு
பிரிவு கடிதம் அனுப்பி இருந்தது..

எந்நேரம் அவனின் நினைவுகள்
எனக்கு அழைப்பிதழ் கொடுத்தது..
உனக்காக பிறந்தவள் நான்
என்று நினைக்கும் போது இனித்தது..!

சோதனையும் வேதனையும்
சேர்ந்ததா காதல்..?
என் கேள்விக்கு அவனின்
பதில் கண்ணீர்..

ஆனால் நீ என்னை உயிருக்கு
உயிரை நேசிக்கிறாய் என்று
நான் அறிவேன்..!

உன் கண்களில் இருந்து பாய்ந்த
உன் பாசக் கதிர்களினால் பாதிக்கபட்டது
என் இதயமாட..புரிந்துக் கொள்..!
தவிக்கும் என் இதயத்தை..!

தொடரும் நினைவுகளுடன்,

6 comments:

நட்புடன் ஜமால் said...

உறக்கம் எனக்கு
பிரிவு கடிதம் அனுப்பி இருந்தது..]]

அட - நல்லாயிருக்கே!

----------------

ஆனால் நீ என்னை உயிருக்கு
உயிரை நேசிக்கிறாய் என்று
நான் அறிவேன்..!]]

நல்ல புரிதல் ...

வியா (Viyaa) said...

நன்றி ஜமால்,முதல் வருகையே நீங்கள் தான?
வருகைக்கு மீண்டும் நன்றி..

சத்ரியன் said...

//உனக்காக பிறந்தவள் நான்
என்று நினைக்கும் போது இனித்தது..!

சோதனையும் வேதனையும்
சேர்ந்ததா காதல்..?//

வியா,

காதல் ... எப்போதும் இப்படித்தான்.
வாழ்வும்....இப்படித்தான்.

வியா (Viyaa) said...

அது உண்மை தான் ’மனவிழி’சத்ரியன்..
ஆனால் இந்த உண்மையை புரிந்துக் கொள்ள எனக்கு நிண்ட நாள் எடுத்தது

கிருஷ்ணா said...

காதல்..
உணர்ச்சிகளின் வெளிப்பாடு..
ஹார்மோன்களின் கூப்பாடு..

உணர்ச்சிகள் அடங்கிவிட்டால்
காதல் கசந்துவிடுமோ??

sam.stephan9 said...

Awesome blog! I will for sure drop by it more often!
Create Android Game App