
பல மாற்றங்கள் கண்டு
வந்தேன்..அன்பே
உன் பெயரச் சொன்னாலே..
உன்னை காணும் நேரம்
என் கண்கள் ஏங்குகிறது..
நீ வேறு நான் வேறு
என்று சொன்ன மறுகணமே
நான் உயிர் இழந்தேன்..
இரண்டுகள் பழகியும்
இறுதியில் இரு மனம்
பிரிந்தது..
சின்னதொரு காரணத்தால்
பறவைப் போல்
சிறகடித்து சென்று விட்டாய்..
தினம் தினம் என்னை
தடுமாற வைக்கிறது
உன் நினைவு..
உனக்காக உயிர் வாழ்வேன்
உனக்கேன் தெரியவில்லை..
உனக்காக அழுகிறேன்
அதை நீ உணரவில்லை..!
11 comments:
தினம் தினம் என்னை
தடுமாற வைக்கிறது
உன் நினைவு..
\\
தடம் மாறும் வரை
இருக்கும்
தடுமாற்றம் ...
உண்மையாக தான் ஜமால்..
தடுமாற்றம் என்றும் தொடரும்
காதலின் வலிகள் இங்கும்...
வலிகள் இல்லையென்றால் இங்கே காதல் இல்லை போலும்...
அன்புமணி வலிகள் இல்லாமல் கண்டிப்பாக காதல் இல்லை..
வலியும் சுகமும் சேர்ந்து இருப்பது தான் காதல்..
உனக்காக உயிர் வாழ்வேன்
உனக்கேன் தெரியவில்லை..
உனக்காக அழுகிறேன்
அதை நீ உணரவில்லை..!
வலியுடன் கூடிய வரிகள்
ஏன் வியா இப்பொழுது இது போன்ற
கவிதைகள் அதிகம் படைக்கின்றீர்கள்....
//இரண்டுகள் பழகியும்//
ஈராண்டுகளா?
மனசு சரியில்லை சக்தி..
கவிதைகளை எழுதி மனதை ஆறுதல் படுத்திக் கொண்டு வருகிறேன்..
சில நினைவுகள் என்னை தூங்க விடுவதில்லை..
ஏன் வால் இப்படி ஒரு அதிர்ச்சி..!
புரியவில்லையே?
உண்மையிலேயே புரியாம தான் கேட்கிறேன்!
ஏனென்றால் காதலில் எனக்கு அனுபவம் இல்லை!
அனுபவம் இல்லையா?நம்ப முடியவில்லையே?
பொய்யெல்லாம் சொல்ல கூடாது வால்..
//அனுபவம் இல்லையா?நம்ப முடியவில்லையே?
பொய்யெல்லாம் சொல்ல கூடாது வால்.. //
இருந்தாத்தான் நானும் கவிதையா எழுதி தள்ளியிருப்பேனே!
Post a Comment