கருவறை சுகம் தந்த தாயே
மறுமுறை உன் முகம் பார்க்க
என்ன தவம் நான் செய்ய..!
விண்ணுலகில் வாழ
மண்ணுலகை விட்டு சென்றாயே
என்ன பாவம் நான் செய்தேன்..!
பெண்ணிலவு என்னை வயிற்றில்
சுமந்தாயே..
வெண்ணிலவு போல உன்னை
பார்க்கிறேன் தாயே..
என்ன வாதம் இனி நானும்
செய்வேன்..!
உன் உறுப்புகளை புண்ணாக்கி
ஈன்றேடுதாய் பிறப்பை எனக்கு
தந்தாயே..
உன் இறப்பை தாங்க எதையும்
தரவில்லையே..!
உன் நூறு கோடி அணுவில்
என்னை எப்படி கண்தேடுதாய்
உனக்குள் நூறு குறை
நான் வைத்தேன்..
எந்த குறையும் நீ
எனக்கு வைக்கவில்லையே..!
அளவில்லா பாசத்தின்
அன்னையே,
உன்னை தவிர அகிலத்தில்
இனி யாரிடம் நான் போய் பெற..
மறுமுறை உன் கருவறை
தொட்டிலில்,
ஒருமுறை தூங்க யார்
காலில் நான் போய் விழ..!
மறுமுறை உன் முகம் பார்க்க
என்ன தவம் நான் செய்ய..!
விண்ணுலகில் வாழ
மண்ணுலகை விட்டு சென்றாயே
என்ன பாவம் நான் செய்தேன்..!
பெண்ணிலவு என்னை வயிற்றில்
சுமந்தாயே..
வெண்ணிலவு போல உன்னை
பார்க்கிறேன் தாயே..
என்ன வாதம் இனி நானும்
செய்வேன்..!
உன் உறுப்புகளை புண்ணாக்கி
ஈன்றேடுதாய் பிறப்பை எனக்கு
தந்தாயே..
உன் இறப்பை தாங்க எதையும்
தரவில்லையே..!
உன் நூறு கோடி அணுவில்
என்னை எப்படி கண்தேடுதாய்
உனக்குள் நூறு குறை
நான் வைத்தேன்..
எந்த குறையும் நீ
எனக்கு வைக்கவில்லையே..!
அளவில்லா பாசத்தின்
அன்னையே,
உன்னை தவிர அகிலத்தில்
இனி யாரிடம் நான் போய் பெற..
மறுமுறை உன் கருவறை
தொட்டிலில்,
ஒருமுறை தூங்க யார்
காலில் நான் போய் விழ..!