
மறுமுறை உன் முகம் பார்க்க
என்ன தவம் நான் செய்ய..!
விண்ணுலகில் வாழ
மண்ணுலகை விட்டு சென்றாயே
என்ன பாவம் நான் செய்தேன்..!
பெண்ணிலவு என்னை வயிற்றில்
சுமந்தாயே..
வெண்ணிலவு போல உன்னை
பார்க்கிறேன் தாயே..
என்ன வாதம் இனி நானும்
செய்வேன்..!
உன் உறுப்புகளை புண்ணாக்கி
ஈன்றேடுதாய் பிறப்பை எனக்கு
தந்தாயே..
உன் இறப்பை தாங்க எதையும்
தரவில்லையே..!
உன் நூறு கோடி அணுவில்
என்னை எப்படி கண்தேடுதாய்
உனக்குள் நூறு குறை
நான் வைத்தேன்..
எந்த குறையும் நீ
எனக்கு வைக்கவில்லையே..!
அளவில்லா பாசத்தின்
அன்னையே,
உன்னை தவிர அகிலத்தில்
இனி யாரிடம் நான் போய் பெற..
மறுமுறை உன் கருவறை
தொட்டிலில்,
ஒருமுறை தூங்க யார்
காலில் நான் போய் விழ..!
9 comments:
//மறுமுறை உன் கருவறை
தொட்டிலில்,
ஒருமுறை தூங்க யார்
காலில் நான் போய் விழ..!
//
தாய்மையை போற்றும் கவிதை மிக அருமை...
அருமை
தாய்பாசம் தன்னிகரற்றது. தங்கள் கவிதைகளில் துள்ளிக்குதிக்குது. வாழ்த்துகள்!
புதியவன் நன்றி..
என் கவிதையின் வரிகள் யாவும் உண்மைதானே?
மறுமுறை நாம் தாயின் வயிற்றில் பிறக்க முடியுமா?
திகழ்மிளிர் நன்றி..!
அன்புமணி கவிதை துள்ளிகுதிக்குத?
நன்றி உங்களின் கருத்துக்கு..
தொடர்ந்து கருத்துக்கள் சொல்ல மறக்க வேண்டாம்..
உன் உறுப்புகளை புண்ணாக்கி
ஈன்றேடுதாய் பிறப்பை எனக்கு
தந்தாயே..
உன் இறப்பை தாங்க எதையும்
தரவில்லையே..!
உன் நூறு கோடி அணுவில்
என்னை எப்படி கண்தேடுதாய்
உனக்குள் நூறு குறை
நான் வைத்தேன்..
எந்த குறையும் நீ
எனக்கு வைக்கவில்லையே..!
-----------------------
அம்மா எந்தக்குறையையும் தரமாட்டாள். பிள்ளைகள் நாங்கள் தான் எத்தனையோ குறைகளை அம்மாவுக்குக் கொடுத்திருப்போம்.
நல்ல கவிதை பாராட்டுக்கள்.
சாந்ி
hai .. tnis is bala from tamil nadu.. i like to join as frend with u..
haii via... i saw ur lovely posts.. all r impressed me lot... like to join as frend with u....
Post a Comment