Wednesday, April 29, 2009

காதல் தந்த பரிசு 5

திவ்யாவின் தந்தை சொன்ன விஷயத்தை நினைத்து சர்வின் தன்னை தானே நொந்துக் கொண்டான். திவ்யா போன்ற பெண்ணுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை? " திவ்யா தன் மகள் அல்ல,அவளை ஒரு அனாதை இல்லத்தில் இருந்து எடுத்து வளர்க்கிறேன்.இதனை தங்களிடம் சொல்ல காரணம் வருங்காலத்தில் உங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் வர கூடாது என்ற நோக்கத்துடனே" என திவ்யாவின் தந்தை கூறியது சர்வினின் நினைவுகளின் வந்து சென்றது. இதற்கு மேல் அவர் வேறு எதுவும் சொல்லவில்லை, இதை சொல்லும் பொழுதே அவரின் கண்களில் கண்ணீர் அருவி போல் வழிந்தோடியது. இதனை திவ்யாவிடம் கேட்கலாமா? இல்லை வேண்டாமா? மனதினுள் இன்னொரு குழப்பம்.

திடீர் என்று கைத்தொலைபேசி அலறியது. வேறு யாரும் இல்லை திவ்யா தான். அவளின் குரலை கேட்டவுடன் மனதினுள் ஒரு அமைதி தோன்றியது. இவ்வளவு சோகமும் வேதனையும் மனதினுள் வைத்துக் கொண்டு வெளியில் சிரித்து பேசும் அவளது குணம் மீண்டும் மீண்டும் சர்வினுக்கு காதலை திவ்யாவின் மீது காதலை வர வைத்தது. அவளின் தந்தை சொன்ன விஷயத்தை திவ்யாவிடம் கேட்க வேண்டாம் என்று முடிவுக்கு வந்தான். 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல' மேலும் அவளின் மனதில் வேதனையை சேர்க்க வேண்டாம் என்று எண்ணினான். இன்று மாலை சந்திக்க வருவதாக வாக்குறுதி கொடுத்து இருந்தான். நான்கு நாட்களாக அவளை சந்திக்கவில்லை. சரியாக பேசவும் இல்லை. என்ன நினைத்துக் கொண்டலோ? என்று புலம்பிக் கொண்டே காரில் ஏறி காரை பூக்கடையை நோக்கி செலுத்தினான். அங்கு சென்று அவளுக்கு பிடித்த ரோஜா மலரை வாங்கி கொண்டு கிளம்பினான்.

" வாங்க சார், 15 நிமிடம் தாமதம். இந்த ஆண்களுக்கு பெண்களை காத்திருக்க வைப்பதில் என்ன தான் சந்தோசம் என்றே தெரியவில்லை" என்றே மௌன சிரிப்பு சிரித்தாள்.
" என்ன? ஆண்கள் பெண்களை காக்க வைப்பதா? கடவுளே அனுமதிக்காத பொய்" என்றான்.
பிறகு அவன் வாங்கி வந்த ரோஜா மலரை கையில் கொடுத்து "Sorry, நான்கு நாட்களாக ரொம்ப அதிகமான வேலை அதனால் தான் பார்க்கவோ, சரியாக பேசவோ முடியவில்லை. என் மேல் கோபமா" என்று கொஞ்சலுடன் கேட்டான்.
" அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. i can understand your situation dear" என்று அவனின் கொஞ்சலுக்கு இணங்க பாசத்துடன் பதிலை கூறினாள்.

*********************************************
இரவில் சர்வினுக்கு தூக்கம் வரவில்லை. ஜன்னலை திறந்து பார்த்தான். சில்லென்று காற்று அவனை வந்து தழுவியது, அழகான வானம், நிலவுக்கு துணையாக இருக்கும் நட்ச்சதிரங்கள் இவையாவும் அவனுக்கு தான் காதல் தேவதையின் யாபகங்களை கொண்டு வந்தது. நேரத்தை பார்த்தான் நள்ளிரவு மணி 2.30 காட்டியது. இந்நேரம் அவனின் தேவதை உறங்கிக் கொண்டு இருப்பாள். அவளை நினைக்கும் பொழுது அவனின் மனதில் பட்டாம்பூச்சி சிறக்கடித்து பறக்கும். ஏன் என்று காரணமே தெரியாது? அவனது டைரியை எடுத்து கவிதை எழுதினான்.

என் ஆருயிர் காதலியே,
உன் புன்னகை என்னில் மலைச்சாரல்
உன் கடைக்கண் பார்வைக்காக
நான் ஏங்கிய நாட்கள்..
நீ அறியாமல் பல நாள்..
நீ அறிந்த சில நாள்..

இன்று உன் பார்வை
என் மீது மட்டுமே..!
உன் உதடுகளின் சிரிப்பில்
உள்ளங்கள் கடத்துகிறாய்..!
என் மனதையும் கடத்தி விட்டாய்,
உன் ஒரே மௌன
சிரிப்பினால்..!

உன்னை படைத்த
அந்த பிரம்மன் கஞ்சனடி..
எல்லா அழகையும் உன்னிடமே
கொடுத்து என்னை வதைப்பது
கொடுமையடி என் தேவதையே..!

தனது கவிதையை எழுதி முடித்துவிட்டு புத்தகத்தை மூடினான். என்றாவது ஒரு நாள் தான் எழுதிய கவிதைகளை திவ்யாவிடம் காட்ட மிகுந்த ஆசை சர்வினுக்கு.
காலை எழுத்தவுடன் திவ்யாவுக்கு காலை வணக்கம் என்று குறுந்தகவல் அனுப்பினான். அதற்க்கு பதில் "Good morning and have a nice day" என்று எழுதிருந்தாள். சுருக்கமாக சொல்ல போனால் திவ்யாவின் குறுந்தகவல் தான் சர்வினுக்கு உற்சாகம். மதிய உணவுக்கு திவியவுக்கு போன் செய்தான்.
" Hai, what are you doing? ஏன் குரல் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு" என்றான் சர்வின்.
" உடம்பு சரியில்லை. காய்ச்சல் அடிக்குது." என்றாள்.
" ஏன் என்னிடம் சொல்லவில்லை. Did you have go for hospital."
" Not yet."திவ்யா.
" கிளம்பி நில் டியர். நான் வாறேன். i will take you go to hospital."
இப்படி தான் அவளுக்கு ஒன்று என்றால் துடி துடித்து போவான். அவனது பாசத்திற்கு மட்டும் அளவே இல்லாமல் போய்விட்டது.

நாட்கள் பல உருண்டோடியது. ஒரு நாள் சர்வினுடன் வெளியில் சென்ற திவ்யா பார்த்த சம்பவம் அவளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. இது அவள் சிறிதும் எதிர்பாரத ஒன்று. ஒரு நிமிடம் தலையே சுற்றியது. அவள் கண்ணை அவளே நம்ப முடியவில்லை.

தொடரும்....


Saturday, April 25, 2009

அன்புள்ள டைரி ..!

அன்புள்ள டைரி,
என் இன்பத்தையும் துன்பத்தையும் உன்னுடன் மட்டுமே நான் பகிர்ந்துக் கொள்வேன். இன்றும் உன்னுடன் தான் என் பயணம். அனைத்தையும் எல்லோரிடமும் சொல்ல முடிவதில்லை. உன்னிடம் சொல்வதில் மனதில் ஓர் ஆறுதல். நான் கடந்து வந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் மறக்க இயலாத நாட்கள் தான்.

பாசத்திற்காக நான் எத்தனை முறை கீழே விழுந்திருக்கிறேன் என்ற உண்மை நீ மட்டுமே அறிந்த ஒன்று. இதனால் வரை என்னுடன் இருந்த குடும்பம் இன்று காரணமே இல்லாமல் என்னை வெறுக்கின்றன. குடும்ப உறுப்பினர் மட்டுமில்லை, உடன் பழகிய நண்பர்களும் தான். உடன் பிறந்த சகோதரா சகோதிரிகளே எதிரியாகி பார்த்ததுண்டா? என் வாழ்வில் நடந்த ஒன்று. அனைவரும் இருந்தும் அனாதையாக வாழும் நான். இன்று என்னை வெறுக்கும் நெஞ்சங்கள் யாவும் அன்று என்னை நேசித்த நெஞ்சங்களே. இதை தான் சில நேரத்தில்;சில மனிதர்கள் என்பரோ. காதல் எல்லோருடைய வாழ்விலும் மறக்க முடியாத ஒரு சம்பவம். ஆனால் என் வாழ்கையில் நான் மறக்க நினைக்கும் சம்பவம். ஏன் தெரியுமா? பாசம் என்னும் போர்வையில் என்னை ஏமாற்ற வந்த நாரி இந்த காதல். இந்த காதலினால் நான் அனுபவித்த வேதனையை மரண படுக்கையிலும் மறவேன்.

இன்று எந்த உறவுகளும் உடன் இல்லை. கண்ட கனவு அடுத்த வினாடியே நமக்கு சொந்தமில்லை,உடன் இருக்கும் உறவுகளும் அப்படி தான் போல. மிகவும் எதிர்பார்புடன் நான் தொடங்கிய உறவுகள், இன்று எதிர்பாராமலே முடிவடைகிறது. அன்புள்ள டைரியே, இன்றே நான் உனக்கு எழுவது கடைசி. இந்த உறவுகளின் மத்தியில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. உமக்கு நேரம் இருந்தால் நான் அனுபவித்த சோகத்தையும் வேதனையையும் இந்த அன்பு நெஞ்சங்களுக்கு எடுத்துச் சொல்.
அன்புடன்,
.......................

இது 50% கற்பனையே..

பட்டாம்பூச்சி.. பட்டாம்பூச்சி

இந்த பட்டாம்பூச்சி விருது எனக்கு கிடைத்தவுடன் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு கணம் வானத்தில் பறக்கும் பறவையைப் போல் சுற்றி திரிந்தேன் என்றால் பாருங்களேன். என் மகிழ்ச்சிக்கும் விருதுக்கும் காரணம் காயத்திரி அக்கா தான். எனக்கு இந்த விருதை தந்து கௌரவித்தவரும் அவரே தான். இவரின் கவிதைகள் யாவும் அருமை. http://pirivaiumnesippaval.blogspot.com நீங்களும் கொஞ்சம் படித்து பாருங்கள். இத்தருணத்தில் காயத்திரி அக்கா அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல இயலாது. என்னிடம் இருக்கும் பட்டாம்பூச்சி விருதை வேறு யாருக்கு தரலாம் என்று யோசித்த பொழுது இவர்களே என் நினைவுக்கு வந்தனர்.

1. விக்னேஷ்வரன் இவரது படைப்புகள் யாவும் மிகவும் அருமையாக இருக்கும். http://vaazkaipayanam.blogspot.com. இவர் எழுதும் அனைத்து பதிவுகளும் பயனுள்ளதகவும் இருக்கும். இவருக்கு எனது வாழ்த்துக்கள்.

2. மகா இவரின் படைப்புகளும் அருமையோ அருமை. http://mahawebsite.blogspot.com. அட இவரும் கதை எழுத ஆரம்பிச்சி இருகாங்க. காதல் கதை இல்ல, திகில் நிறைத்த பேய் கதை. தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.

Thursday, April 16, 2009

காதல் தந்த பரிசு 4

திவ்யா எதிர்பார்த்ததை விட சர்வின் அவள் மேல் மிகுந்த பாசத்துடன் இருந்தான். இது அல்லவா காதல் என பார்பவர்களின் மனதில் பொறாமையை துண்டியது. திவ்யாவுக்கு தாயில்லாத ஏக்கம் இப்பொழுது சிறிதும் தோன்றுவதில்லை. சுருக்கமாக சொல்ல போனால் சர்வின் அவளுக்கு ஒரு தாயை போல பார்த்துக் கொள்கிறான். தாயிடம் இருக்கும் பாசம்,அக்கறை, கண்டிப்பு என அனைத்தையும் அவனிடம் கண்டாள். அன்று இரவு தான் தாயை பார்க்க அழைத்து போவதாக சொல்லி இருந்தான்.
" Dear,are you ready?"
" Ya,i am ready,can we go."

இருவரும் காரில் ஏறி புறப்பட்டனர். திவ்யாவும் பேசிக் கொண்டே வந்தாள். அவள் பேசுவதை கேட்க அவனுக்கு மிகவும் பிடிக்கும். காரணமே தெரியாது. சர்வினின் வீடும் வந்தது. திவ்யாவும் பய உணர்வோடு விட்டினுள் சென்றாள். அங்கு இவர்களின் வருகைக்காக காத்திருந்தார் திருமதி பார்வதி. கணவனை சிறு வயதிலையே இழந்து, சர்வினை மிகவும் அன்போடு வளத்தவர்.
" வாம்மா ஏன் இவ்வளவு நேரம்."
" கொஞ்சம் லேட் ஆச்சு ஆன்டி."என்றாள்.
" பரவாயில்லை" என்றார் பார்வதி.
இரவு உணவும் அங்கேயே முடிந்தது. பேசிக் கொண்டே நேரம் போனதே தெரியவில்லை. நேரமும் 9 ஆனது. இருவரையும் வழி அனுப்பிவைத்தார்.
" சர்வின் என் மருமகளை பார்த்து அழைத்து செல், வேகமாக போக வேண்டாம்" என்று மகனுக்கு செல்ல அறிவுரையை கூறினார்.
" சரி அம்மா." என்று இருவரும் கிளம்பினார்கள்.
************************************************

காரில் இருவரும் ஒன்றும் பேசவில்லை. திவ்யா பாடலில் முழ்கி விட்டாள். சார்வினும் தான். அவளின் வீடும் வந்தது.
"So shall we go back now" திவ்யா.
" Hey, why you go back so early."
" Hello,sharvin time is already 9.30pm."
" Just chit-chat for a while baby."
" Hmmmm ok"

திவ்யா அவள் நண்பர்களை பற்றி கூறிக் கொண்டு இருந்தாள். சர்வின் அவள் பேசுவதையே ரசித்து கொண்டு இருந்தான். படபடவென பேசும் அவளின் குணம் அவன் மிகவும் ரசித்த ஒன்று என்று சொன்னால் மிகையாகது.
"சர்வின் நான் பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்ன பண்ணுற."
" நான் என் காதலியை ரசித்துக் கொண்டு இருக்கேன்."
" ம்ம்ம்ம் போ உனக்கு வேறு வேலையே இல்லை" என்று கதவை திறக்க சென்றாள்.

ஆனால் சர்வின் இதழோடு இதழ் முத்தம் கொடுத்தான். இதழோடு இதழ் சேர்ந்த நேரம் வார்த்தைகள் உமையானது. கண்கள் மட்டும் கோர்த்துக் கொண்டது. வெட்கம் கண்களில் தெரிந்தது. உடனே கதவை திறந்து ஓடினாள் திவ்யா. சிறு தூரம் சென்ற பிறகு சர்வினை திரும்பி பார்த்து சிரித்துக் கொண்டே விட்டினுள் சென்றாள்.

******************************************************

மறுநாள் திவ்யாவின் வீட்டிற்கு சர்வின் சென்றான். அப்பொழுது சர்வின் முதல் முதலாக அவளின் அப்பாவை சந்தித்தான்.
" வாப்பா சர்வின். உள்ளே வா" என்றார்"
சர்வின் வியப்புடன் உள்ளே சென்றான். என் பெயர் எல்லாம் எப்படி தெரியும்?
" திவ்யா உன்னை பற்றி நிறைய சொல்லி இருக்காள். நீ வருவேனு சொல்லி இருந்தாள். she just go out with her brother,don't worry she will come back in 10min."
" it ok uncle i'll wait for her"என்றான் சர்வின்.

இருவரும்
பேசிக் கொண்டே இருக்கையில் திவ்யாவின் அப்பா அவனை அதிர்ச்சி தரும் வகையில் ஒரு விஷயத்தை சொன்னார். அவர் சொன்ன அந்த விஷயம் ஒரு கணம் அவனின் கண்களில் கண்ணீர் வர செய்தது. இவ்வளவு நாள் திவியாவுடன் பழகி ஏன் இந்த விஷயத்தை என்னிடம் சொல்லவில்லை. என்னை முழுதாக நம்பவில்லையோ? என்று மனதினில் சிறு குழப்பம் எழுந்தது. திவ்யாவும் அவள் அண்ணன் தேவாவும் வந்தனர்.
" வந்து ரொம்ப நேரம் ஆகுதா"என்றாள்.
" இல்லை இப்போ தான் வந்தேன் அப்பாவுடன் பேசிக் கொண்டு இருந்தேன்."என்றான்.
" ஏன் முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு."
" nothing" என்றான். இருந்தாலும் மனதினில் குழப்பம் தோன்றிக் கொண்டே இருந்தது. அவளிடம் கேட்கலாமா இல்லை வேண்டாமா? என்று இன்னும் ஒரு குழப்பம். அவளின் சோகத்தை மீண்டும் நினைவுக்கூற வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தான்.

ஆனாலும் அவனால் அதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. சிரித்துக் கொண்டு சிறகடித்து பறக்கும் பறவைக்குள் இப்படி ஒரு சோகமா? எப்போதும் சந்தோசமாக இருக்கும், பிறரின் மனதை நோகாமல் பார்த்துக் கொள்ளும் அவளுக்கா அப்படி ஒரு வேதனை. அவனால் துளியும் நம்ப முடியவில்லை. அவனிடம் ஏன் சொல்லவில்லை இதுவும் புரியவில்லை.

தொடரும்....