Friday, February 27, 2009

ஆறாத மனம்

கருவறை சுகம் தந்த தாயே
மறுமுறை உன் முகம் பார்க்க
என்ன தவம் நான் செய்ய..!

விண்ணுலகில் வாழ
மண்ணுலகை விட்டு சென்றாயே
என்ன பாவம் நான் செய்தேன்..!

பெண்ணிலவு என்னை வயிற்றில்
சுமந்தாயே..
வெண்ணிலவு போல உன்னை
பார்க்கிறேன் தாயே..
என்ன வாதம் இனி நானும்
செய்வேன்..!

உன் உறுப்புகளை புண்ணாக்கி
ஈன்றேடுதாய் பிறப்பை எனக்கு
தந்தாயே..
உன் இறப்பை தாங்க எதையும்
தரவில்லையே..!

உன் நூறு கோடி அணுவில்
என்னை எப்படி கண்தேடுதாய்
உனக்குள் நூறு குறை
நான் வைத்தேன்..
எந்த குறையும் நீ
எனக்கு வைக்கவில்லையே..!

அளவில்லா பாசத்தின்
அன்னையே,
உன்னை தவிர அகிலத்தில்
இனி யாரிடம் நான் போய் பெற..
மறுமுறை உன் கருவறை
தொட்டிலில்,
ஒருமுறை தூங்க யார்
காலில் நான் போய் விழ..!

Saturday, February 21, 2009

என்னவளே


என்னவளே இனியவளே
என் நெஞ்சுக்குள் புகுந்தவளே
கனிந்த உள்ளம் கொண்டவளே
கண் இமைபோல் என்னைகப்பவளே..

நேசத்தை தந்தவளே
என் உயிரில் கலந்தவளே
உனக்காக ஓர் உயில்
எழுதுகிறேன்..
அது காதலெனும் உணர்வோடு..

என்னவளே,
சொல்ல நினைத்த வார்த்தைகள்..
எனக்குள்ளே புதைத்து போனதால்
என் வலியும் எனக்கே உறவானது
என் காதலும் என்னிடமே
இறந்து போனது..

Tuesday, February 17, 2009

கற்பனையில் கவிதை

காதல்..
உணரவில்லை உன்னை
காதலிக்கும் வரை!
வலி..
உன்னை காதலிக்கும் போது
ஏற்பட்ட மனக்காயம்!
எதிர்பார்ப்பு..
உன் தரிசனம் எனக்கு
கிடைக்காத என்று!
தவிப்பு..
உனக்கு வேறு உறவு
இருக்குமோ என எண்ணி!
சஞ்சலம்..
நீ மற்றவர்களோடு
பேசும் போது!
சுயநலம்..
நீ எனக்கு மட்டும்
என்று நினைக்கும் போது!
காத்திருப்பேன்..
நீ என்னிடம் வந்து
சேரும் வரையில்!

Saturday, February 14, 2009

நான் பாடும் மௌன ராகம்

வாழ்க்கையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதில்லை இது தான் வாழ்க்கையின் நிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இன்று எனக்குள் ஒளிந்திருக்கும் வேதனையை, கவிதையாக எழுதிருக்கிறேன். திடீர் என்று தான் எழுதினேன்.
இதோ அந்த கவிதையை உங்களுடன் சில நிமிடம்.

என்ன தான் வாழ்க்கையோ!
துன்பங்களுக்கும்,பல
வேதனைக்கும் நடுவில்
புன்னகை ஒன்று தான்
முகம்முடியோ..

மனிதனின் வாழ்க்கையை
முழுமையாக அறிந்தவர்
உலகில் இல்லை..
புரிந்தது இந்த
வாழ்க்கை பயணம்..
காத்திருந்தேன் உன்
சொந்தங்களை நாடி..
அனுபவித்தேன் அதில்
ஒரு உணர்வை.
அறிந்தேன் உறவுகளின்
அருமையை..

என்னை நானே
ஏமாற்றுகிறேன்..இருந்தும்
வெளியில் சிரிக்கிறேன்..
உணர்வுகளை புரிந்தவர்
யாரும் இல்லை..
எதிர்பார்ப்புகள் ஏமாற்றம்
ஆகின..

என்னுள்ளே பொய்
வேஷம் போடுகிறேன்..
இது என்னில் நானே
கண்ட வேதம்..

காதலை சொல்ல வந்தேன்


நான் படித்ததில்
எனக்கு பிடித்து
உன் இதழ்களின்
வரி மட்டுமே..

எத்தனையோ
நாட்கள் உன்னிடம்
சொல்ல வந்தேன் என்
காதலை..

புரியாமல்
பார்க்கிறாய்..
உன்னிடம் எப்படி
சொல்வேன் என் காதலை?

இன்று
சொல்கிறேன் என் காதலை
மூன்று ரோஜா மலருடன்
நான் உன்னை காதலிக்கேறேன்..
நீ இன்றி என் வாழ்கையும்
இல்லை..

அனைவருக்கும் என் காதலர் தின வாழ்த்துக்கள்

Tuesday, February 10, 2009

துடிக்கும் இதயம்

உன்னை பார்த்த பின்பு
இப்பொழுது பொய்கள்
கூட எனக்கு
பொழுது போக்காக
ஆகிவிட்டது..

காதலியே!
அனைத்தையும் மறக்கும்
என் இதயம் உன்னை
மட்டும் மறக்க
முடியவில்லை..
வார்த்தைகள் கூட
இதயத்தை உடைக்கும்
என்று உன்னால் நான்
அறிந்துக்கொண்டேன்.

மிக்க நன்றி
இந்த காதலின் வலியையும்
வேதனையையும்
உன் நினைவாக என்னிடம்
விட்டு சென்றதற்கு..
இந்த உலகமே
அழிந்தாலும் என் காதல்
அழியாது..ஆருயிரே!

யாரிடம் சொல்வது?

பறவை போல் வானில்
பறக்க ஆசைப்பட்டேன்..
கொட்டும் மழையில்
அழ நினைத்தேன்..
பட்டம்பூச்சை
வாழ இருந்தேன்..

இன்று..!
கண் இமைகளின்
அசைவில் இருள்
சூழ்ந்தது..
மனதில் உள்ள
சோகத்தை மௌனம்
தாக்கியது..
அர்த்தமில்ல என்
வாழ்கையில் நிம்மதி
பறிபோனது..

இவை அனைத்தையும்
யாரிடம் சொல்வது..?

Saturday, February 7, 2009

என் ஜீவனே


கனவில் உன்னை நான்
காதலிக்க
பிறக்கவில்லை,
ஆனால்

நிஜ
வாழ்கையில்
உயிர் உள்ள
வரை
காதலிப்பேன்..

உன் காதலை
நினைக்கும்
போதெல்லாம்
கைகள்
கண்களை மூடுது..
உன்
பிரிவினால்
என் கண்ணீர் துளிகள்
அதன் வேலையை
சரியாக
செய்கிறது..

உன் மதிப்பில்லா
அன்பையும்,
எல்லையில்லா

பாசத்தையும் என் உயிர்
பிரிந்தாலும்
மறவேனே,
என் ஜீவனே!

Friday, February 6, 2009

வாழ்க்கை


வாழ்க்கை ஒரு புதிர்
அதற்கு விடை காணு..
வாழ்க்கை
ஒரு பாடல்
அதை
பாடி விடு..
வாழ்க்கை
ஒரு வாய்ப்பு
அதை
பயன் படுத்தி விடு..
வாழ்க்கை ஒரு பரிசு
அதை
பெற்றுக்கொள்..
வாழ்க்கை ஒரு சோகம்
அதை
துடைத்து விடு..
வாழ்க்கை
ஒரு காதல்
அதை அனுபவி..
வாழ்க்கை
ஒரு வனப்பு
அதன் புகழ் பாடு..
வாழ்க்கை
ஒரு தெய்வீகம்
அதை புரிந்துக் கொள்..