Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்


என் இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்

2009

Tuesday, December 30, 2008

உன் மேல் கோபம்


நீ சாய்வதற்கு வைத்திருக்கும்
என் தோள்களில் யார் யாரோ
தூங்கி சாய்கிறார்கள்
என் வாழ்க்கை என்னும்
பயணத்தில்..
என் விழிகள் உந்தன்
வருகைக்காக மட்டும்
காத்திருக்கிறது..

உனக்காக காத்திருக்கும்
அத்தருணம் உன்மேல் கோபம்
கொள்ளதுண்டும்..
கொஞ்ச நேரம் கழித்து
ஏன் என தோன்றும்..
அப்போதெல்லாம்
உன்மேல் இருக்கும் அன்பு
இன்னும் அதிகமாகும்..
இல்லையில்லை..
என்னை உன் வருகைக்காக
தவிக்க விடு..
அன்பு அதிகரித்துக் கொண்டே
இருக்கும்..

வாழ்கிறேன்..


சின்ன வயதில்
தோல்வியை விரும்பியதில்லை..
போட்டிகளை விரும்பினேன்..
இப்போது போட்டிகளை
விரும்புவதில்லை..
ஆனால் தோல்விகளை
விரும்புகிறேன்..
அதுவும் உன்னிடம்
மட்டும் தோற்பதில்
மிகவும் ஆனந்தமாக இருக்கிறது..
என் தோல்வியை விட என்னை
தோற்க்கடிதவள் தான்
நான் நேசிப்பவள்..

நான் உன் மடியில்
படுத்துக்கொள்கிற
நேரங்களை விட..
உன்னை என் மடியில்
படுக்க வைத்துக்கொள்கிற
நேரங்களுக்காக
நான் வாழ்கிறேன்..

Monday, December 29, 2008

நம்பிக்கை துரோகி


என் நிழலாக வராதே!
நான் சாகும் வரை
துணையாக வருவேன் என்றாய்..
உன் வார்தைகளை என் உயிருக்கும்
மேலாக நம்பினேன்..
நினைப்பது நான் தான்
நீயில்லை..
மறந்தது நீ தான்
நானில்லை..
எத்தனை ஜென்மங்கள்
எடுத்தாலும் உன்னை போன்ற
ஒரு நம்பிக்கை துரோகியை
நான் சந்திக்க கூடாது,
என தினம் தினம் இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்..

Sunday, December 28, 2008

நீ தந்த முத்தம்..நீ தந்த முத்தம்
நித்தம்
நித்தம்..
இனிக்குதடி.
என் ஆயுள் வரை
நான் மறந்தாலும்
என் இதழ்கள் மறக்காதடி
பெண்ணே
!
இது
உண்மையோ பொய்யோ
ரசிப்பேன் நீ எதை செய்தாலும்..
சிற்பிகள் செதுக்கிய ஓவியமடி
நீ!

Saturday, December 27, 2008

அப்பா


என் அன்புள்ள
அப்பா..
உங்களின்
தியாகங்கள்
யாவும் சொல்லில்
அடங்காது
..
நான்
பிறந்ததிலிருந்து
இன்று
வரை கஷ்டம்
என்றால்
என்வென்று
எனக்கு
தெரியாமல் வளர்த்தவர்..
என்னை பாசத்துடன்
அரவணைத்து
நாட்கள்
இன்னும் என் நினைவில் இருக்கிறது..
நான்
செய்த
என்னை வெறுக்க ஆரம்பித்தார்..
இன்று நான்
செய்த
தவறை உணர்தேன் ..
ஆனால் !
அவர்
என்னை மனிக்கவில்லை..
காரணம் அவர் இந்த உலகில் இல்லை
தந்தையின் அருமையை உணர்தேன்..
அவரின்
பாசத்தை அறிந்தேன்..

நீ


உன்னோடு நான் கழித்த
ஒவ்வொரு நிமிடமும்
மரண படுக்கையுளும்
மறக்க முடியாதடா
என் கண்ணா..
ஆனால் அதையும்
மீறி உந்தன் அன்பும்,பாசமும்
யாரும் வெல்ல முடியாது.
ஒவ்வொரு நாளும் வினாடியும்
உனக்காக காத்திருப்பேன்..
இந்த காதலுடன்..

Wednesday, December 24, 2008

பேசாமல்..


நான் பேசிய
பொழுது காதல்
உமையாக
இருந்தது..
இன்று
நான்
உமையாகும்
பொழுது

என்
காதல் பேசுகிறது.
பரவாயில்லை,
என்
காதல் உமையகவே
தொடர்ந்தது
அப்படியே
முடிவு
பெரும்..

Thursday, December 18, 2008

மறையாத பாசம்


ஆயிரம் உறவுகள்
நான் கண்டேன்..
அத்தனையும் உன்
உறவுக்கு இடகது..
புரிந்து கொள் நான்
நேசிப்பது உன்னை
மட்டும் தான்!
கடல் நீர் குடிநீர் இன்றி
வற்றி போனாலும்,
சூரியன் உதிக்க
மறந்தாலும்,
உலகமே அழிந்தாலும்,
என் காதல் என்றுமே
அழியாது..
நான் உன் மேல் கொண்ட
பாசம் மறையாது..

மழை


இயற்கையை படைத்தவன்
எவ்வளவு அழகாக
படைதிருக்கின்றன்

அடடா
பிரமன் கச்சனடி..
சற்றே நிமிர்தேன்
தலைசுற்றி போனேன்..
ஆஹா
! என்ன அழகு
இந்த வானம்..
உன் தோழி வந்தாலே
அனைவருக்கும் மகிழ்ச்சி தான்..
வருகையாலே
பிறரை கவருவாள்..
மழை என்றாலே மகிழ்ச்சி தானே!
இதுவரை உன்னை போன்ற
அழகி
மண்ணில் இல்லை
என்
மழையே..
நீயே நீயே என்
பொறாமைக்கு
காரணமடி!

இடைவெளி


காலம் என்னும்
பேனா
நாம்
இருவரையும்

காதல் கூட்டுக்குள்
அடைத்தது..ஆனால்
அதற்க்கு நாம்
தந்த பரிசு
பிரிவு
.

மீண்டும் உன்னை
நான் சந்திக்க
வேண்டும்
வார்த்தைகள் உமையாகும்
பொழுது..
கண்ணீர் துளிகள்
வார்த்தைகளாகும்..
அன்று தான்
உனக்கு புரியும்
இந்த பிரிவின் இடைவெளி..

Tuesday, December 16, 2008

தேடல்


அழகுக்கு அழகு சேர்க்க
காலையில் பூக்கும் பூவின்
தேடல் சூரியனை தேடி...

வளைந்து வளைந்து
களைத்து போகாத நதி
செல்வது கடலை தேடி...

அலைந்து அலைந்து
நானிலம் நனைந்து
அலையின் தேடல்
கரையை தேடி...

நிறைய பணமும் புகளும்
இருந்து மனிதனின் தேடல்
இன்பத்தையும் நிம்மதியும் தேடி...

சுற்றிலும் உறவுகள் வட்டம்
இருந்தாலும் எனது தேடல்
என் அழகான நிமைதியான
வாழ்கையை தேடி...

முத்தம்


ஓசை இன்றி பேசும்
மொழியை உன்
இதழ்கள்
எனக்கு
கற்று
தந்தது.. நான் படித்ததில்
ருசித்தது
உன்
முத்த
வரிகள்
மட்டுமே...

காதலிக்கிறேன்..


காலம் கடந்த பின்பு வருந்துகிறேன்
உன்
காதலையும்.. உன்னையும் எண்ணி..
குறைகள் தானே மனிதனின் வாழ்க்கை..
அதனால் நிறைகள் இனி
என்னக்கு
தேவையில்லை..
உனக்குத் தெரியுமா?
நிலாவை
ரசித்தேன்,
இரவில் எனக்கு துணையாக இருப்பதால்..
மழையை பிடிக்கும்,
நான் அழுகையில் என்னுடன் அழுவதால்..
கால்கள்
இன்றி ஓடும்
நதியின்
கொலுசு சத்ததை ரசிப்பேன்
அது
எனக்கு இசை என்பதால்..
உன்னையும் எனக்கு பிடிக்கும்,
காதலிக்கிறேன்
.. காரணம் தெரியவில்லை..

Monday, December 15, 2008

உறவுகள்


வாழ்க்கை ஒரு அழகான
தொடர் கதை..
அதில் உறவுகள் சிறு கதை..
புரியாத இந்த வாழ்கையில்
அறியாத உறவுகள் நிறைய..
புரியாத உறவில் நான் கண்ட
மகிழ்ச்சி ஏறலாம்..
மறக்கவும் முடியாமல்
நினைக்கவும் முடியாமல்
தினம் நான் தவிக்கிறேன்
உன் நினைவால்...
சொல்லாத உறவுக்கு என்ன பெயரோ..
ஆனால்
உனக்கு தெரியும் நாம் கொண்ட
உறவுக்கு என்ன பெயர் என்று..
இத்தனை சொல்ல மறுக்கிறய?
அல்ல மறைகிறைய?

Saturday, December 13, 2008

பிரிவு..


நான் அழுகின்ற போதும்
எனக்கு கவலை இல்லை
என் கண்களை துடைக்க
உன் கைகள் இருந்தது..
நான் சோகத்தில் மூழ்கிய போதும்
வருந்தியது இல்லை
சாய்ந்து கொள்ள உன் தோள்கள் இருந்தது..
ஆனால்
மனதார நேசித்தேன் உன்னை
மறந்துவிட்டாய் நீ என்னை..
மனமுடைந்து போனேன்
நீ சொன்ன வார்த்தையினால்
வீழிகள் அழ தொடங்கியது..
உன்னை பிரியும் போதுதான்
நான் சுவசிப்பதையே
சுமையை நினைக்கிறேன்..


வெற்றி


தோல்வியை கண்டு துவண்டு விடாதே!
நீ
கடந்து வந்த பாதையில் உள்ள
தோல்வி,சோகம்,துன்பம், வேதனை,அவமானம்,
எல்லாம் உன் வெற்றிக்கு படிகட்டுகள்..
மனித!
உன்
வெற்றி உனக்குள் தான் இருக்கிறது..
உன்னுள் இருக்கும் திறமையை சிறகு கொடுத்து பறக்க விடு..
அடுத்த நிமிடம் வெற்றி என்னும்
சிகரம் உன் கைகளில்..

Thursday, December 11, 2008

கனவுகள்

கனவுகள் போல்
அமைவதில்லை எதுவும்..
நித்தம் ஒரு கனவு
அரவணைந்தாலும்
நிழலும் நிச்சமும்
நீ தான்..
நினைப்பதெல்லாம் நடக்கும்
வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை..
ஆனால்
என் வாழ்கையில் நான் நினைத்ததில்
கிடைத்தது உன் உறவு மட்டுமே..

கோபம்நீங்கள் மிகவும் கோவக்கரரா? ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வந்தது என்று எண்ணி பார்த்ததுண்டா? (இதோ உங்களுக்கு சில நிமிடங்கள்).. கோபம் என்பது என்ன? கோபம் என்பது சிந்தனை சமைக்கும் நிலை. எதிர்பார்ப்பு நிறைவேறாத பொது வரும் உணர்ச்சி. இத்தனைக்கும் கோபம் என்பது தேவையில்லாத ஒன்று! பிறகு ஏன் கோபம் எனும் உணர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிறது? மனவியல் ரிதியாக ஆராய்ந்தால் கோபம் என்பது ஒரு பழக்கம். ஒரு வேலையில் ஈடுபடும் பொழுது சிலருக்கு சிகரெட் பற்ற வைத்து கொள்ள வேண்டும். இந்த சிகரெட் எந்த விதத்திலும் அவர்கள் செயல்திறனை அதிகரிக்கவோ,வேலை சுமையை குறைக்கவோ உதவாது என்றாலும்,இது ஒரு பழக்கம். இது போல் நாம் எல்லாருக்கும் உள்ளும் கோபம் ஒரு பழக்கமாகி விட்டது. எந்த ஏமாற்றம் வந்தாலும் குழந்தை பருவத்திலிருந்து வளர்ந்து வரும் பழக்கம். ஏமாற்றத்தின் விளைவு சோகம்,கண்ணீர்,அச்சாம்,அவமானம் என்றெல்லாம் வெளிபட்டலும் அடிப்படை கோபம் தான். எல்லா உணர்ச்சிகளையும் போல கோபம் என்பதும் சிந்தனையின் விளைவுதான். சூழ்நிலை நமக்கு சாதகமாக இல்லாதபோது சிந்தனையை நேராக வைத்து கொள்பவர்கள் வெற்றியடைகிறார்கள். கோபம் வரவே கூடாத? உணர்ச்சிகள் யாருக்கும் மழுங்கவே கூடாது. உணர்ச்சி மலுங்கினால் மனம் நோயுற்றதை பொருள். அது வராமல் இருப்பது பயிற்சியினால் மட்டுமே முடியும். கோபப்படுவது பிரச்சனையவதில்லை. கோபத்தின் வெளிபாடு மட்டுமே பிரச்சனைகளை உருவாக்கும். நாம் கோவபடுவதினால் நிறைய பிரச்சனைகளை பார்த்து இருப்போம். பிறகு ஏன் இந்த கோபம். கோபத்தை நாம் திசை திருப்பலாம். அதற்காக நாம் நகைசுவை உணர்வை வளர்த்து கொள்வது,வாய் விட்டு சிரிப்பது,மற்றவர்களை நன்றாக கவனித்து புரிந்து கொள்ள முயல்வது,எல்லா காரியங்களையும் சிந்தித்து பின்னரே செய்வது போன்றே செயல்களை நம்மிடையே ஏற்படுத்தி கொள்ளலாம். கோபம் என்பது மனித குணம்தான். நான் முயன்றால்,நிச்ச்யம் கட்டுபடுத்தலாம்.

Wednesday, December 10, 2008

அம்மா
பத்து மாதம் என்னை சுமந்தால்
என் தாய்.. என்னை சுமை என்று
நினைத்திருந்தால் இந்த நிமிடம்
நான் இங்கு இல்லை..
தாய் நினைக்க வில்லை
என்னை போன்று ஒரு பெண்பிள்ளை
பிறப்பால் என்று..
நான் இந்த உலகத்தை பார்த்த அன்று
என் தாய் சென்றால் உலகத்தையும் என்னையும் விட்டு..
என் பிறந்த நாள் என் தாயுக்கு இறந்த நாள் ஆனது..
எனது பிறப்புக்கு காரணம் அவள்..
அவளின் இறப்புக்கு காரணம் நான்..
என்ன விதியொ இது..
என் அன்புள்ள தாயே..
உன் அன்புமும் தியாகமும் நான் கண்டதில்லை
ஆனால் என் மன அமைதிக்கு காரணம் நீ
நன்றி என்னை இந்த பூவுலகில்
என்னை வாழ வைத்ததற்கு..
நான் இருக்கும் வரை உன்னை மறக்க மாட்டேன் ..

Tuesday, December 9, 2008

காதலனே...


காதலின் நானும் கண்டேன்
உறவுகள் உந்தன் உயிரா?
என் அன்பே..
நீ இன்றி என் வாழ்க்கை
மிகவும் கடினம்
ஏன் தெரியுமா?
சண்டை போட,என் இன்பத்தையும்
துன்பத்தையும் பகிர்ந்து கொள்ள
நீ மட்டுமே வேண்டும்..!
உன் மடியில் நான் இறக்கும்
தருணமாக இருக்க வேண்டும்..
உன் தோள்கள் நான் சாயும்
வீடாக இருக்க வேண்டும்..
என் உயிர் காதலனே...

உரிமை இல்லையா?


சில நாட்கள் தான் நீ எனக்கு கிடைத்த
புது உறவு..
உன்னுடைய பாசத்திற்காக எத்தனை
முறை கிழே விழுந்திருக்கிறேன் தெரியுமா?
மீண்டும் மீண்டும் எழுந்து நின்று
விழவே செய்கிறேன்...
ஏன் ஏன் காதல் தவற?
கல்லுக்குள் ஈரம் இருக்கின்றபோது
என் நெஞ்சுக்குள் நீ இருக்க
உரிமை இல்லையா?

நாட்கள்..சோகங்களை எல்லாம் சொல்லி அழுது
முடித்து இந்த கண்
என்னை அழைக்கிறது அந்த மண்..
இன்பத்தை கொடுத்த நீ தான்
இன்று
துன்பத்தையும் கொடுக்கிறாய் ..
ஏன் இவை எல்லாம்?
நான் உறங்கிய நாட்களை விட
உன்னை நேசித்த நாட்களே அதிகம்..!

உன்னால்காதல் என்பது எனக்கு
வலியும் வேதனையும்
தந்தது என எண்ணினேன்..
உந்தன் வருகையால் அது
இன்று சுக்குனுரக உடைந்தது
ஒரு பாசமான உறவை தந்தது..
எத்தனை அர்த்தங்களும் மகத்துவமும்
நிறைத்து என்று அறிந்தேன்
ஆனால் இன்னும் வாழ்கையில்
புரியாத புதிர் நிறைய உள்ளது..

Monday, December 8, 2008

பயணம்
இன்றுடோடு என் வாழ்க்கை பயணம்
முடிகிறது ..
காதல் என்னும் தொடர் கதைக்கு
முற்று புள்ளி வைக்கிறேன்..
என் காதலுக்கு மட்டும் தான்
உனக்கு இல்லை..
உன்னை விட்டு பிரிகிறேன் நிரதரமாக..
ஏன் என்றால் நீ இன்றி என் வாழ்க்கை
வெள்ளை காகிதம்..
உன்னால் எழுதிய கதை..
இன்று உன்னால் தான் அது
இன்று மிண்டும் ஒரு வெள்ளை
காகிதம் ஆகிறது..
ஆனால்
இறந்த காலம் மிண்டும் வந்தால்
பிரிந்த உன்னை மிட்டு கொள்வேன்..
இது நிச்ச்யம்..

Sunday, December 7, 2008

வேதனை
உள்ளுக்குள் அழுகிறேன்
உன் காதல் தந்த வேதனையால்
வெளியில் சிரிக்கிறேன்
என்னை சுற்றி இருக்கும் உறவுகளுக்காக..
உன்னுடன் சில காலம்..
உன் நினைவுகளுடன் சில நாள் ..
இவை அனைத்தையும் மறக்க
நினைக்கிறேன் ஒரு கானம்
மறு கானம் வேண்டாம் என்கிறது
என் மனம்..

நட்புபாசம்
என்னும் அகராதியை என்னுள் திறக்க வைத்த என் அன்பு தோழனே! வருக! வருக! உன் வருகைக்கு பின்னால் தான் பாசத்தின் ஆழத்தை அறிந்தேன்.. நட்பின் வட்டத்தை கண்டேன்.. என்னோ தெரியவில்லை உன்னுடன் பழக்கும் பொது மட்டும் நான் உணர்தேன் நட்பு என்பது இது தான என்று.. இவை அனைத்துக்கும் அர்த்தம் சொன்ன நீ பிரிவு என்ற வார்த்தைக்கு அகராதியை திறக்காமலே அர்த்தத்தை சொல்லி சென்றாய்.. என் உயிர் உள்ள வரை மாறையது நாம் துய்மையான நட்பு..


கண்ணிருடன் வாழும் காலம்
இன்றும் இனிமையாக இருக்கிறது..
உன் நினைவோடு வாழ்வதினால்
உறவுகள் அனைத்தும் பகையானது
ஆனால்
உன் நினைவுகள் இன்று எனக்கு
உறவானது...

காதல்கண்களில் தொடங்கி
உடலில் முடிவதற்கு
பெயர்தான் காதலா?
நான்கு கண்களில்
பேசிய பொது பாசத்தின்
அடிப்படையிலா அல்லது
காமத்தின் அடிப்படையிலா ?
இப்பொழுது சிலர்ருக்கு காதல்
கண்ணாமுச்சி விளையாட்டாகி விட்டது ...
சிலர்ருக்கு பொழுது போக்கு
இன்னும் சிலர்ருக்கு காமத்தின் மறுமொழி
ஆனால் எனக்கு காதல் என்பது
அம்மா...!
தாயின் புனிதமும்,பாசமும் கொண்டதே
காதல்...!
உங்களுக்கு காதல் என்றால் என்ன தோன்றும் ?