Wednesday, April 29, 2009

காதல் தந்த பரிசு 5

திவ்யாவின் தந்தை சொன்ன விஷயத்தை நினைத்து சர்வின் தன்னை தானே நொந்துக் கொண்டான். திவ்யா போன்ற பெண்ணுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை? " திவ்யா தன் மகள் அல்ல,அவளை ஒரு அனாதை இல்லத்தில் இருந்து எடுத்து வளர்க்கிறேன்.இதனை தங்களிடம் சொல்ல காரணம் வருங்காலத்தில் உங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் வர கூடாது என்ற நோக்கத்துடனே" என திவ்யாவின் தந்தை கூறியது சர்வினின் நினைவுகளின் வந்து சென்றது. இதற்கு மேல் அவர் வேறு எதுவும் சொல்லவில்லை, இதை சொல்லும் பொழுதே அவரின் கண்களில் கண்ணீர் அருவி போல் வழிந்தோடியது. இதனை திவ்யாவிடம் கேட்கலாமா? இல்லை வேண்டாமா? மனதினுள் இன்னொரு குழப்பம்.

திடீர் என்று கைத்தொலைபேசி அலறியது. வேறு யாரும் இல்லை திவ்யா தான். அவளின் குரலை கேட்டவுடன் மனதினுள் ஒரு அமைதி தோன்றியது. இவ்வளவு சோகமும் வேதனையும் மனதினுள் வைத்துக் கொண்டு வெளியில் சிரித்து பேசும் அவளது குணம் மீண்டும் மீண்டும் சர்வினுக்கு காதலை திவ்யாவின் மீது காதலை வர வைத்தது. அவளின் தந்தை சொன்ன விஷயத்தை திவ்யாவிடம் கேட்க வேண்டாம் என்று முடிவுக்கு வந்தான். 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல' மேலும் அவளின் மனதில் வேதனையை சேர்க்க வேண்டாம் என்று எண்ணினான். இன்று மாலை சந்திக்க வருவதாக வாக்குறுதி கொடுத்து இருந்தான். நான்கு நாட்களாக அவளை சந்திக்கவில்லை. சரியாக பேசவும் இல்லை. என்ன நினைத்துக் கொண்டலோ? என்று புலம்பிக் கொண்டே காரில் ஏறி காரை பூக்கடையை நோக்கி செலுத்தினான். அங்கு சென்று அவளுக்கு பிடித்த ரோஜா மலரை வாங்கி கொண்டு கிளம்பினான்.

" வாங்க சார், 15 நிமிடம் தாமதம். இந்த ஆண்களுக்கு பெண்களை காத்திருக்க வைப்பதில் என்ன தான் சந்தோசம் என்றே தெரியவில்லை" என்றே மௌன சிரிப்பு சிரித்தாள்.
" என்ன? ஆண்கள் பெண்களை காக்க வைப்பதா? கடவுளே அனுமதிக்காத பொய்" என்றான்.
பிறகு அவன் வாங்கி வந்த ரோஜா மலரை கையில் கொடுத்து "Sorry, நான்கு நாட்களாக ரொம்ப அதிகமான வேலை அதனால் தான் பார்க்கவோ, சரியாக பேசவோ முடியவில்லை. என் மேல் கோபமா" என்று கொஞ்சலுடன் கேட்டான்.
" அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. i can understand your situation dear" என்று அவனின் கொஞ்சலுக்கு இணங்க பாசத்துடன் பதிலை கூறினாள்.

*********************************************
இரவில் சர்வினுக்கு தூக்கம் வரவில்லை. ஜன்னலை திறந்து பார்த்தான். சில்லென்று காற்று அவனை வந்து தழுவியது, அழகான வானம், நிலவுக்கு துணையாக இருக்கும் நட்ச்சதிரங்கள் இவையாவும் அவனுக்கு தான் காதல் தேவதையின் யாபகங்களை கொண்டு வந்தது. நேரத்தை பார்த்தான் நள்ளிரவு மணி 2.30 காட்டியது. இந்நேரம் அவனின் தேவதை உறங்கிக் கொண்டு இருப்பாள். அவளை நினைக்கும் பொழுது அவனின் மனதில் பட்டாம்பூச்சி சிறக்கடித்து பறக்கும். ஏன் என்று காரணமே தெரியாது? அவனது டைரியை எடுத்து கவிதை எழுதினான்.

என் ஆருயிர் காதலியே,
உன் புன்னகை என்னில் மலைச்சாரல்
உன் கடைக்கண் பார்வைக்காக
நான் ஏங்கிய நாட்கள்..
நீ அறியாமல் பல நாள்..
நீ அறிந்த சில நாள்..

இன்று உன் பார்வை
என் மீது மட்டுமே..!
உன் உதடுகளின் சிரிப்பில்
உள்ளங்கள் கடத்துகிறாய்..!
என் மனதையும் கடத்தி விட்டாய்,
உன் ஒரே மௌன
சிரிப்பினால்..!

உன்னை படைத்த
அந்த பிரம்மன் கஞ்சனடி..
எல்லா அழகையும் உன்னிடமே
கொடுத்து என்னை வதைப்பது
கொடுமையடி என் தேவதையே..!

தனது கவிதையை எழுதி முடித்துவிட்டு புத்தகத்தை மூடினான். என்றாவது ஒரு நாள் தான் எழுதிய கவிதைகளை திவ்யாவிடம் காட்ட மிகுந்த ஆசை சர்வினுக்கு.
காலை எழுத்தவுடன் திவ்யாவுக்கு காலை வணக்கம் என்று குறுந்தகவல் அனுப்பினான். அதற்க்கு பதில் "Good morning and have a nice day" என்று எழுதிருந்தாள். சுருக்கமாக சொல்ல போனால் திவ்யாவின் குறுந்தகவல் தான் சர்வினுக்கு உற்சாகம். மதிய உணவுக்கு திவியவுக்கு போன் செய்தான்.
" Hai, what are you doing? ஏன் குரல் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு" என்றான் சர்வின்.
" உடம்பு சரியில்லை. காய்ச்சல் அடிக்குது." என்றாள்.
" ஏன் என்னிடம் சொல்லவில்லை. Did you have go for hospital."
" Not yet."திவ்யா.
" கிளம்பி நில் டியர். நான் வாறேன். i will take you go to hospital."
இப்படி தான் அவளுக்கு ஒன்று என்றால் துடி துடித்து போவான். அவனது பாசத்திற்கு மட்டும் அளவே இல்லாமல் போய்விட்டது.

நாட்கள் பல உருண்டோடியது. ஒரு நாள் சர்வினுடன் வெளியில் சென்ற திவ்யா பார்த்த சம்பவம் அவளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. இது அவள் சிறிதும் எதிர்பாரத ஒன்று. ஒரு நிமிடம் தலையே சுற்றியது. அவள் கண்ணை அவளே நம்ப முடியவில்லை.

தொடரும்....


13 comments:

புதியவன் said...

கதை தெளிந்த நீரோடை போல் செல்கிறது...

//இன்று உன் பார்வை
என் மீது மட்டுமே..!
உன் உதடுகளின் சிரிப்பில்
உள்ளங்கள் கடத்துகிறாய்..!
என் மனதையும் கடத்தி விட்டாய்,
உன் ஒரே மௌன
சிரிப்பினால்..!//

கதையின் நடுவில் கவிதை சேர்த்திருப்பது...கதைக்கு மேலும் மெருகூட்டுகிறது...வாழ்த்துக்கள் வியா..

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்..
கதை எப்படி இருக்கிறது..?

S.A. நவாஸுதீன் said...

எழுத்தில் முன்னேற்றம் தெரிகிறது. அதேசமயம் கூடுதல் வேகம் தெரிகிறது. கொஞ்சம் குறைத்துக்கொள்ளவும். இடைச்சொருகல் கவிதை அருமை

புதியவன் said...

//வியா (Viyaa) said...
நன்றி புதியவன்..
கதை எப்படி இருக்கிறது..?//

ம்...நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கள்...
முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளை
தமிழில் எழுதுங்கள் "Sorry" Like "ஸாரி”...

வியா (Viyaa) said...

நவாஸ் நன்றி..
கருத்துகளுக்கு மீண்டும் நன்றி..
கண்டிப்பாக நிங்கள் சொன்னதை கடைப்பிடிக்க முயல்கிறேன்

வியா (Viyaa) said...

கண்டிப்பாக புதியவன்..
அடுத்த பகுதியில் நிங்கள் சொன்னதை பின்பற்றுகிறேன் :)

gayathri said...

hey kathaila nalla munetram theruthuda

next part sekaram podu ok

sakthi said...

உன்னை படைத்த
அந்த பிரம்மன் கஞ்சனடி..
எல்லா அழகையும் உன்னிடமே
கொடுத்து என்னை வதைப்பது
கொடுமையடி என் தேவதையே..!


kavithai alagu kathai athai vida alagu

superb viyaa keep it up

வியா (Viyaa) said...

nandri gayathiri akka..
next part vegu viraivil..

வியா (Viyaa) said...

நன்றி சக்தி..
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி..
உங்களின் பிளாக்கர் பார்த்தேன்..மிக அருமை

VIKNESHWARAN said...

கதை விறுவிறுப்பாக நகர்கிறது. :)

வியா (Viyaa) said...

நன்றி விக்கி : )

Riyas ENG said...

it is very interesting to rear ur article.i really like it.