Tuesday, June 30, 2009

அன்பே அன்பே

எத்தனையோ உறவுகளை
கண்டேன்..
உன்னை போல் எந்த உறவும்
என்னை நேசித்ததில்லை..
சில உறவுகளின் பிரிவுக்கு
நான் வருந்தியதில்லை..

ஆனால்,
உன் பிரிவு என்னை
விழவைத்தது.
உன்னை அதிகம் நேசித்தால்
அதை விட இரு மடங்கு
உன்னை வெறுக்கிறேன்..

கண்ணிருடன் வாழும்
காலம் இன்று
இனிமையாக இருக்கிறது..
உன் நினைவோடு
வாழ்வதினால் அன்பே..!

Monday, June 15, 2009

பெண்..!


குழந்தையை சுமப்பவள்
ரத்ததை பாலாக தருபவள்
பெண்..!
ஏட்டிலும் எழுத்திலும்
உயர்ந்து நிற்பவள்..

பெண்களே..
தாயென்றும் தெய்வமென்றும்
சொல்வார்..!
பூமியில் மனிதனை
உருவகியவள் பெண்..

சோகங்களை
மறைத்து வெளியில்
போலி வேஷம்
போடுபவள்..இன்பத்துக்கும்
துன்பத்துக்கும் நடுவே
வாழ்க்கையுடன் தினம்
போராடுபவள்..!

உலகில் விலை
மதிக்க முடியாத
செல்வம் பெண்..
பெண்ணின் பொறுமை
இந்த மண்ணுக்கு
பெருமை..!

Saturday, June 13, 2009

இதயத்தை திருடியவன்..


நொடிக்கொரு தருணம்
இறந்து பிறக்கும்
இந்த இதயத்தின் வலி
உந்தன் வருகையால்
ஏற்பட்டது..!

உன் காதலின்
ஆழத்தை கண்டேன்
மறுகணம் என்
கல்லான நெஞ்சில்
காதல் நீ
பற்றிக் கொண்டது..

பனி மலர்கள் நெஞ்சோடு
அணைத்துக் கொண்டது
போல் இருந்தது..
நீ என்னை அணைக்கும்
பொழுது..!

என்னிதயத்தை
திருடியவனும் நீயே..

Monday, June 8, 2009

உன் பிரிவு..!


இன்று என் கண்களிலிருந்து
கண்ணீர் வழிகிறது
நீ ஏற்படுத்திய காயத்தினால்..
மனம் நிலவில்லாத
வானம்போல் இருண்டு
கிடக்கிறது..

மனதில் காதல்
கவிதையை எழுதிவிட்டு
கூடவே பிரிவெனும்
சோகக்கதையையும் எழுதி
சென்றாய்..

காலங்கள் மாறினாலும்
உன் மீது நான் கொண்ட
காதல் மாறாது..
என் முச்சினில் கலந்திருப்பது
உன் சுவாசம்தான்..

மனதோடு கலந்த
நினைவுகள் வாழ்ந்துக் கொண்டு
தான் இருக்கிறது இன்னும்
இறக்காமல்..

Thursday, June 4, 2009

அன்பு தாயே..!


பத்து மாதம் என்னை
சுமந்து ஈன்றேடுதவள்..
முதல் முதலாக இந்த
மண்ணில் பிறந்து நான்
பார்த்த தேவதை நீ..
எத்தனை நாள் தவம்
கிடந்தேன் உன் முகம்
காண தாயே..!

உன்னால் நான் பிறந்தேன்
இந்த உலகத்தையும்
உன்னால் அறிந்தேன்..
கோடி தவம் நான்
செய்திருக்க வேண்டும்..
உன்னை போல ஒரு
தாயை பெற..!

உன் மடியில் தலை
வைத்து படுத்தல்,
துன்பம் வேகுதுரமாக
தெரியும்..என் கண்களில்
நீர் வழிந்தால் என்னுடன்
சேர்ந்து அவள் கண்களிலும்
கண்ணீர் சிந்தும்..

மீண்டும் ஜென்மம்
எடுத்தல் உனக்கு
நான் தாயாக பிறக்க
வேண்டும்..ஏன் தெரியுமா?
நீ எனக்கு தந்த பாசத்தை
இரண்டு மடங்கு அதிகம்
உனக்கு தர வேண்டும்
என் தாயே..! நீயே என்
கனவு தேவதை அம்மா..

Wednesday, June 3, 2009

உனக்காக ஒரு கவிதை..இதயத்தில் உயிர் எழுதிய
முதல் கவிதை
உந்தன் காதல்..

பூட்டிவைத்த ஆசைகளை
என்னுள் பத்திரமாய்
சேர்த்து வைத்துள்ளேன்..
உன்னிடம் சொல்வதற்கு..
என் கனவில் வந்து நீ
பூன்னகைக்கும் போதெல்லாம்
தினம் உனக்காக
ஒரு கவிதை எழுதிகிறேன்..

உந்தன் பார்வை சொல்லும்
கவிதையை என்னால்
உணர முடிகிறது..

இதற்க்கு பெயர் என்ன?
தனிமையில் என்னை
தொலைத்து தேடும் அந்த
அற்புதமான் நிமிடத்தில்
அறிந்துக் கொண்டேன்..
அதன் பெயர் தான்
காதல் என்று?

Tuesday, June 2, 2009

வாழ்க்கை..!


வெளியில் சிரித்துக் கொண்டு
உள்ளுக்குள் அழுகிறேன்..
எல்லோருக்கும் சில நேரம்
வரும் சோதனை..
ஆனால் எனக்கு வாழ்நாள்
முழுதும் சோதனையே..

என் உணர்வுகளை புரிந்தவர்கள்
உலகில் இல்லை.
ஒவ்வொரு எதிர்பார்புகளும்
ஏமாற்றத்தில் தான்
முடிகிறது..?கனவுகள்
நிஜமாகவும் இல்லை..

காலங்கள் கடந்தாலும்
காயங்கள் இன்னும்
ஆறவில்லை..! வேதனைகள்
சிறிதும் குறையவில்லை..!
ஏன் இந்த வாழ்க்கை ?