Friday, January 30, 2009

விதி


நான் ஆசைபட்ட அனைத்தும்
எனக்கு
கிடைத்தது
இல்லை
.. கிடைத்தது
அனைத்தும் ஆசைப்பட்டதில்லை..
இது தான் என்
வாழ்க்கையின் விதி
என்பதா?
மனிதனின் சதி என்பதா?

கலங்காதே!
பெண்ணே
..
விதியும்
ஒரு
நாள் சரியும்
உன்
பாசத்தை கண்டு..

நிழலை கண்டேன்..


நிலாவாக நான் விளையாடி
கொண்டிருந்தேன்..
வானமாக

துணைக்கு
வந்தாய்..!
அலையாக
இருந்தேன்
நதியாக தொடர்ந்தாய்..!
உன் விழியில் என்
நிழலை கண்டேன்..

Sunday, January 25, 2009

இன்னும் என்னுள் தொடரும் நினைவுகள்


என்ன எழுதுறதுன்னு தெரியலை? அதனால் எனது சில தொடரும் நினைவுகள் உங்களுடன்..

மனித வாழ்கையில் மறக்க முடியாத பல விஷயங்கள் இருக்கும். சிலரின் மனதில் அந்த நட்பு,காதல்,இனிமையான உறவுகள்,சோகம்,கண்ணீர்,மகிழ்ச்சி என இன்னும் அழிக்கமுடியாத,என்றும் தொடரும் நினைவுகள் ஏராளம். என் இனிய வாழ்கையில் இதே மாற்றி நிறைய நினைவுகள்.

குறிப்பாக நான் கடந்து வந்த பள்ளிக்கூட நினைவுகள் மறக்க முடியாத சமர்ப்பணம். எனக்கு மட்டும் இல்லை,இன்னும் நிறைய பேருக்கு அது ஒரு கன காலம். உங்களுக்கு எப்படி? நண்பர்களுடன் அடித்த லுட்டி, ஊர் சுற்றியது, ஒன்றாக படித்து என நிறைய உண்டு. பள்ளியின் இறுதி நாள் என் வாழ்வில் இன்னும் ஒரு மறக்க முடியாத நாளாகும். அந்த பிரிவு என்னை அழ வைத்தது. மிகவும் வேதனையான நாள். திரும்பவும் நினைத்து பார்க்க கூட முடியாது அந்த நாள். கடவுளிடம் வாரம் கேட்டலும் கிடைக்காது அந்த பள்ளிக்கூட வாழ்க்கையும் இனிமையுடன் கொண்டதம் கலந்த அந்நாள்.

அப்படி எல்லாம் ஆட்டம் போட்ட நண்பர்கள் யாரும் இன்று எங்கே தான் போனார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் இந்த உலகம் மிகவும் சிறியது. பிரிந்த நண்பர்களை என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக சந்திப்பேன். அன்று மிண்டும் தொடரும் என் நினைவுகள்.

Saturday, January 24, 2009

நீ இல்லாமல் நான்


மரண படுக்கையிலும்
மறக்க
மாட்டேன்
நீ
என்னிடம் விட்டு
சென்ற
அன்பு வார்தைகளை..

நீ பேசியதை விட
உன் கண்கள்
பேசியதே
அதிகம்..
ரசித்தேன்
நேசித்தேன்..

உனக்கே தெரியாமல்
என்னையும் அறியாமல்
என் உயிருக்கும்
மேலாக காதலித்தேன்..
இந்த
பெண்ணின் மனதை
புரிந்து கொள்ள
முடியவில்லை உன்னால்..

என்னடா

என்னை விட்டு சென்றாய்..?

சோகம்


காலமெல்லாம் அழுதாலும்
சில சோகம் தீராதே..
இந்த சோகத்திற்கு
விலை கண்ணீர்..

உயிரை தந்தவன்
இறைவன்
உறவை தந்தவன்
நீ..
இந்த சோகத்தை தந்தது
யாரோ!

மறக்கவே முடியாத
நினைவெல்லாம்
மறந்திட நினைத்தாலே
உடல் மண்ணுக்குள் போக
துடிக்குது!

Wednesday, January 21, 2009

சந்தோசம்..


கனவுகளில் கூட
நான் சந்தோசமாக
இருந்ததில்லை..
ஆனால்
உன்னால் நான் உணர்கிறேன்
சந்தோசத்தை..
ஏன்? நெடு நாள்
நிடிக்கவில்லை என்
சந்தோஷமும் உன் உறவும்..

காற்றுக்கு தெரியும்
என் கவலையை..
உனக்கு மட்டும்
தெரியவில்லையா?
வாழ்க்கை இனிமை தான்
இதை கற்று தந்தவனும்
நீ!
அதே வாழ்க்கை இன்று
கசக்கிறது..
அதுவும் உன்னால் தான்!

Tuesday, January 20, 2009

என் டைரியில் சொல்ல மறந்த கதை..


ஏனோ தெரியவில்லை இன்று மனசு ரொம்ப வேதனையை இருக்கு. யாரிடமும் சொல்லி மனம் பாரத்தை இறக்கி வைக்கவும் முடியவில்லை. எவ்வளவு நாள் தான் என்னுலையே புட்டி வைப்பது. என் மனம் கவலைக்கு காரணம் என்ன என்று கேட்ட்களையே? ஒரே பதில் பாசம்.

எனக்கு தானே தெரியும் பாசத்தின் அருமையையும் அதன் ஆழத்தையும். எத்தனை முறை இதே பாசதிற்க்காக அழுதிருக்கிறேன். என்னுடன் இருக்கும் தாய் தந்தை,அண்ணன்,தங்கை,பாட்டி என அனைவருக்கும் நான் ஒரு உபயோக பொருளாக தான் தெரிகிறது இன்று வரை. யாரும் என்னை ஒரு மனம் கொண்ட பெண்ணாக பார்க்கவில்லை. அனைவருக்கும் முக்கியம் பணம். பணம் இருந்தால் மரியாதையை,புகழ்,பெருமை,சொந்தம்,நண்பர்கள் எல்லாம் தேடிவருவார்கள்,என்பது இவர்களின் எண்ணம். சும்மாவா சொன்னார்கள் "பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும்"என்று. இதனால்,எனக்கு பணத்தை விட பாசமே பெரியது:உயர்ந்தது.
சில
நேரம் பிற குடும்பங்களை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கும். வெளியில் சென்று சாப்பிடுவது,சிரித்து பேசுவது,பாசமாக அணைப்பது என இன்னும் பல விசயங்கள். இதில் எவற்றையும் நான் அனுபவித்தது இல்லை. என்னை போலவே எத்தனையோ பேர் பாசத்திற்காக ஏங்குகிறார்கள். எத்தனை ஜிவன் இது போலவே மனசுக்குள் பாரத்தை சுமக்கின்றது.

Saturday, January 17, 2009

நிலா


இரவு நேரமானால்
உன்
வருகைக்காக மிகவும்
ஆவலாக
காத்திருப்பேன்
தெரியுமா?
உன்னை பார்த்து விட்டால்
என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
உனக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை..
நானும்
உன்னை போலவே
வளர்பிறை
போல் வளரவும்
முடியாமல்
;
தேய்பிறை
போல் தேய்யாவும்
முடியாமல்;
தினம் தொடர்கிறேன்
என்
வாழ்க்கையை
நிலாவே
!

Friday, January 16, 2009

பிரிவு


தென்றல் மோதி பூக்கள் விழுவதில்லை
அலைகள் மோதி பறை காயப்படுவதில்லை
பறவை மோதி வானம் நகர்வதில்லை
ஆனால்
உன் பிரிவு என்னை விழவைத்தது..
நீ
தந்த காயங்களும்,
கோபத்தில்
எறிந்த வார்த்தை
கூட
என்னை கண் கலங்க
வைத்தது
இல்லை..
உன் பிரிவு என்னை கொல்கிறது
அன்றே பிரியா வேண்டும் என்று
தெரிந்திருந்தால் அப்பொழுதே அழுதிருப்பேன்
மொத்தமாக
..
பிரிந்தவுடன்
தான் தெரிகிறது
உன்னுடன்
சேர்ந்தே இருப்பதே
சுகம்!

Thursday, January 15, 2009

நான் படித்ததில் பிடித்தது 2

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* விட்டுக் கொடுங்கள்.
* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.
* குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்.
* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.
* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும்,அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.
* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.
* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்கதிர்கள்.
* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.
* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்.

நான் படித்ததில் பிடித்தது


நம்பிக்கையுடன் செயல்படுங்கள்..
ஆசையை
சீர் செய்யுங்கள்..
எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள்..
எதிர்மறை
உணர்ச்சிகளை அகற்றுங்கள்..
தீய பழக்கங்களை நிக்குங்கள்..
எந்த பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பதை அறியுங்கள்..
நிகழ்காலத்தில்
மட்டும் வாழுங்கள்..
ஒத்திபோடும்
பழக்கத்தை அகற்றுங்கள்..
போதும்
என்ற மனத்துடன் திருப்தியாக இருங்கள்..
ஒழுக்கத்தையும்
கட்டுபாட்டையும் கைவிடதிர்கள்..
சுறுசுறுப்பான வாழ்க்கை வாழுங்கள்..
மனித உறவுகளை சரியாக அமைத்து கொள்ளுங்கள்..
புன்னகை
புரியுங்கள்..
புன்னகை
என்பது மனிதனின் உறவு..

Tuesday, January 13, 2009

பாசம் தந்த பரிசு..

அன்று போல் இன்று
இல்லை..
தினம் தினம் பல
மாற்றங்கள் என்னுள்
நடக்கிறது..ஏன்?
காரணம் தெரியவில்லை?
அன்று இருந்த நிம்மதி ,சிரிப்பு,
சந்தோசம்,உறவுகள்,நண்பர்கள்,
காதல் ஏதும் இன்று இல்லை..
இன்று என் வாழ்க்கை சோகம்,கண்ணீர்,
கவலை,தூக்கம் இவை தான்
முழ்கி கிடக்கிறது..

காரணம் பாசம்..
தாய்தந்தை,உடன் பிறப்புகள்,
நண்பர்கள் என அனைவரிடமும்
பாசம் என்னும் புத்தகத்தை படிக்கவில்லை..
ஆனால் உன்னிடம் அதை நான்
படிக்க தவிறியது இல்லை..
நீயோ..!
இறுதிவரை வருவாய் என
நம்பினேன்..
என்னது நம்பிக்கையையும்
என்னையும் முறித்து சென்றாய்
வெகு தூரம்..
இது தான் எனக்கு பாசம்
தந்த பரிசா?