Saturday, May 23, 2009

என்னை பற்றி..

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
~திவ்விய என்பது என் நிஜ பெயர். நண்பர்கள் எல்லாம் அதனை சுருக்கி வியா என்று வைத்து விட்டார்கள். எனக்கு மிகவும் பிடித்த வித்தியசமான பெயரும் கூட.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
~24/05/2009 நள்ளிரவு. விதியை நினைத்து அழுதேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
~நீரற்று ரொம்பவே பிடிக்கும். கையில் ஒரு காகிதமும் பேணவும் இருந்தால் போதும் எதையாவது எழுத ஆரம்பித்து விடுவேன்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
~சைவ உணவு ரொம்ப பிடிக்கும். சாம்பார், பாகற்காய் பொறியல்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
~ம்ம்ம்ம் நட்பு நான் மிகவும் மதிக்கும் உறவுகளில் ஒன்று. அதனால் உடனே வைத்துக் கொள்வேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
~இரண்டுமே பிடிக்கும்..இருந்தாலும் கடலில் குளிப்பதில் மனதில் ஒரு சந்தோசம்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
~உடை,அவரின் பேச்சு,கண்கள்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
~பிடித்த விஷயம்: எதை செய்தலும் சிந்தித்து செயல்படுவது மற்றும் எனது குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
~பிடிக்காத விஷயம்: கோபம் என்னிடம் எனக்கு பிடிக்காது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
~அன்பு வைப்பது தான்.
அன்பு வைத்தவர்களிடம் விரைவில் ஏமார்ந்து போவது. என்னை பற்றி இது நாள் வரை யோசித்ததில்லை.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
~என் நண்பர்கள்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
~சிவப்பு வர்ண டோப்ஸ்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
~'இரவா பகலா' என்ற பாடல்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
~கண்டிப்பாக எனக்கு பிடித்த நீல நிறம் மட்டுமே.

14. பிடித்த மணம் ?
~ரோஜா பூவின் மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
~விக்கி: அருமையான பயனுள்ள பதிவுகளை எழுதுவர். அவருடைய பதிவுகளை படிக்கவே ஆர்வமாக இருக்கும். வலைப்பதிவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் கூட.

~நட்புடன் ஜமால்: கவிதைகள் எல்லாம் அருமை. இவரின் பதிவுகளை மறவாமல் படித்துவிடுவேன். முதலில் அறிமுகமான நண்பர். அருமையான நண்பர் என்ற சொல்லலாம்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
~காயத்திரி அக்கா. அருமையாக கவிதை எழுதுவர். அதில் எப்படியாவது நிஜம் கொஞ்சம் கற்பனை கொஞ்சம் கலந்திருக்கும். எனக்கு பிடித்து அது தான்.

17. பிடித்த விளையாட்டு?
~காற்பந்து பார்க்க பிடிக்கும். பூப்பந்து அப்பாவுடன் சேர்ந்து விளையாடுவேன்.

18.கண்ணாடி அணிபவரா?
~இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
~நல்ல காதல் மற்றும் குடும்ப கதைகளை கொண்ட திரைப்படம் பார்க்க பிடிக்கும். வடிவேலு காமடி படம் என்றால் சொல்லவே தேவையில்லை. மூன்று நான்கு முறையாவது பார்த்து விடுவேன்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
~கடைசியாக பார்த்த படம்...அயன்.

21.பிடித்த பருவ காலம் எது?
~மழைக்காலம். மழையில் விளையாட ரொம்ப பிடிக்கும். கவலையாக இருக்கும் பொழுது மழையும் என்னுடன் சேர்ந்து அழுவதுப் போலவே இருக்கும்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
~இப்போ புத்தகம் படிப்பது குறைவாகவே உள்ளது. வேலைகள் அதிகம்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
~என்றாவது ஒரு முறை தான் பார்ப்பேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
~பிடித்த சத்தம்: என்னுடைய போன் சத்தம்.
~பிடிக்காத சத்தம்: வீட்டில் நான் இருக்கும் பொழுது தொலைக்காட்சியில் ஓடும் சிரியல் சத்தம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
~நிறைய இடங்களுக்கு சென்றுள்ளேன். குறிபிட்டு சொல்ல முடியாது.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
~தனித் திறமை என்றால் கவிதை எழுவது தான். அதை தவிர நன்றாக பாடுவேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
~இன்று வரை என்னை சுற்றி நடக்கும் சம்பவங்களில் பதி என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இப்படியே சொல்ல போனால் சொல்லிக் கொண்டே போகலாம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
~அன்பு. அன்புக்கு என்றுமே நான் அடிமை.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
~பிடித்த சுற்றுலா தலம் பினாங் மாநிலம். எத்தனை முறை போனாலும் மீண்டும் மீண்டும் போக மனம் ஏங்கும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
~ம்ம்ம் ஒரு அன்பான பண்பான பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஆசை. என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை புரிந்துக் கொள்ள வேண்டும்.

31.மனைவி/ கணவர் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
~திருமணம் ஆகவில்லை. இதை பற்றி கருத்து இல்லை. மன்னிக்கவும்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
~வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அதனால் உடன் இருக்கும் உறவுகளிடம் கொஞ்சமாவது பாசமாகவும் அன்புடனும் நடந்துக் கொள்வோம். அவர்கள் இல்லாத பொழுது வருந்துவதில் பயன் இல்லை. வாழ்க்கை பயணம் என்பது மிகவும் அழகான பூக்களால் நிரம்பிய பாதை. அதனை முட்க்களால் சேத படுத்த வேண்டாம்.

அழகான நாட்கள்..!


அன்புள்ள டைரி,

எனது வாழ்வில் சோகமான நாட்களே அதிகம், அதில் பலவற்றை நான் மறக்க நினைக்கிறேன். ஆனால் சந்தோஷமான நாட்கள் மிகவும் குறைவு, அதனை நான் மரணம் வரும் நேரத்திலும் மறக்க நினைப்பதில்லை. அந்நேரத்தில் நான் கழித்த ஒவ்வொரு நிமிடமும் அர்த்தமானது. அந்த அர்த்தத்திலும் என் ஆனந்த கண்ணீர் சேர்ந்துள்ளது.

அப்படி நான் சந்தோசமாக கழித்த நாட்கள் என் பள்ளிக்கூட வாழ்க்கை. நட்பு என்னும் வட்டதிற்குள் நான் பட்டாம்பூச்சையை சிறகடித்து பறந்த அந்நாள் இன்று வரை நினைத்தாலே இனிக்கும் தருணம். நான் படித்த நாட்களில் எனக்கு நண்பர்களுக்கு மட்டும் குறைவே இல்லை. எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம் என்னை சுற்றி இருந்துக் கொண்டே தான் இருக்கும். இதற்காக அப்பாவிடம் கூட திட்டு வாங்கியதுண்டு (ரகசியம் யாரிடமும் சொல்ல வேண்டாம்). என் சேட்டைகளுக்கு அளவே இல்லை, இருந்தாலும் படிப்பிலும் கவனம் தவறியது இல்லை.

நாங்கள் போகாத இடமே இல்லை,பார்க்காத சினிமா படங்கள் இல்லை. எனக்கு 'சுட்டிப் பெண்' என்று புனைபெயர் வைத்து விட்டர்கள். எப்படி தான் ஆட்டம் போட்டாலும் தேர்வு நேரத்தில் நாங்கள் எல்லாம் ஒன்றாக படிக்கும் பொழுது அதில் கிடைக்கும் சந்தோசம் ஒரு தனி சந்தோசம் தான். அதே பள்ளிக்கூட நாட்கள் தான் எனக்கு பல அனுபவங்களையும் கற்றுக் கொடுத்து. நட்பை மட்டும் தரவில்லை.காதல்,படிப்பு,பிரிவு,துயரம்,சந்தோசம்,சண்டை என இன்னும் நிறைய அனுபவங்கள். கவிதை, கதை எழுதும் திறமை என்னுள் "இலைமறை காயாக" மறைத்து இருப்பதை கண்டு பிடித்தவர்களே என் நண்பர்கள் தான். எனக்குள் இப்படி ஒரு திறமை இருப்பதை அன்று தான் நானே உணர்ந்தேன்.அவர்களால் தான் நானும் இன்று கவிதை எழுதுகிறேன்.

பள்ளிக்கூட வாழ்கையை பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு அழகான நாட்கள். நான் மறக்க முடியாத நாட்கள்.
எங்கோ பிறந்தோம் நட்பு என்ற கூட்டுக்குள் இணைத்தோம். இன்று அனைவரும் எங்கோ ஒரு இடத்தில் இந்த நட்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த நட்பு எங்கே? மீண்டும் கிடைக்குமா அந்த பொற்க்காலம்.

நட்புடன்,
....................

இது 100% உண்மையே..

Thursday, May 21, 2009

மனமே மனமே..!

அன்புள்ள டைரி,

ஏனோ தெரியவில்லை இன்று மனம் மிகவும் கஷ்டமாக உள்ளது. என் மன வேதனையை எழுத்துக்களால் சொல்ல இயலாது. நான் நேசித்த உறவுகள் யாவும் இன்று உடன் இல்லை. உடன் இருக்கும் உறவுகள் யாவும் நான் நேசிப்பவை அல்ல. மனதை கல்லாக வைத்துக் கொண்டு வாழ முடியவில்லை.

பிறப்பது பற்றியும் இறப்பது பற்றியும் கவலைப்படாமல் வாழ்கின்றவர்கள் பலருண்டு. ஏன் பிறந்தோம்? என்ற கேள்வியைக் கேளாத வரை,தொல்லை ஒன்றும் இல்லை. 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்று இருப்பவர்களை எவ்விதமான துன்பமும் சுலபத்தில் வந்து அடைவதில்லை. ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு நிலைமை? பிறந்து விட்ட நாம், ஏதோ இறப்பு வருகின்ற வரை இருந்துவிட்டு போகின்ற நாளில் போய்விடலாம் என்று வாழ்ந்தால் கவலை இல்லைதான். கவலை இல்லாமல் வாழலாம் என்பதற்காக,வாழ்வில் மேற்கொள்ள வேண்டியவற்றை விட்டு விட்டு வாழ முடியுமா?

உறவுகளின் இடையில் சந்தோசமாக வாழ ஆசை,அவர்களின் துணையோடு வாழ்கையில் வெற்றியடைய ஆசை, அன்னையின் மடியில் உறங்க வேண்டும், இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என இன்னும் நிறைய ஆசைகள் மனதினுள். என் ஆசைகள் எல்லாம் நிறைவேறாத ஆசைகளாக இன்னும் என்னுள் முழ்கி கிடக்கின்றன. என்றாவது என் ஆசைகள் நிறைவேறும் அன்று வரை காத்திருப்பேன்.

அன்புக்காக ஏங்கும்,
.....................................

இது 50% கற்பனையே..!

Sunday, May 17, 2009

காதல் தந்த பரிசு 6

அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை. அந்த இடமே அவளின் வருகைக்காக காத்திருந்தது. அழகான கடற்கரை பொழுது, இரவு நேரம் அதற்கு துணையாக நிலவு, கடல் தேவதையின் சிலுங்கள், அவளின் பொன்னான பதங்களை முத்தமிட்டு செல்லும் அலைகள். ஆம், அன்று திவ்யாவின் பிறந்த நாள். அவளே தன் பிறந்த நாளை மறந்துவிட்டாள். இவை யாவும் சர்வினின் ஏற்பாடுகள். அப்பொழுது தான் திவ்யா சர்வினிடம் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது."என் பிறந்த நாளை கடற்கரை ஓரத்தில் நிலவின் வெளிச்சத்தில் கேக் வெட்ட வேண்டும் சர்வின்,அது என் நீண்ட நாள் ஆசை. என்று தான் என் ஆசைகள் கை கூடுமோ?."

சரியாக இரவு மணி 12.
"wishing you happy birthday dear.May all your dreams became true on this wonderful day" என்றபடியே அவளின் நெற்றியில் ஒரு முத்தத்தை பரிசாக தந்தான்.
"தங்க யு சர்வின். என் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத பிறந்த நாள் இது. தேங்க்ஸ்".
" ஓகே இன்று என் தேவதையின் பிறந்த நாள் சோ கவலை வேண்டாம் கேக் கட் பண்ணு."
பிறகு இருவரும் கடற்கரை ஓரத்தில் நடக்க ஆரம்பித்தனர். அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திவ்யா இரவு நேரத்தையும் கடற்கரையையும் ரசித்த வண்ணமாகவே நடந்து வந்தாள். ஆனால் சர்வின் அதற்க்கு எதிர்மாறாக திவ்யாவின் அழகை ரசித்துக் கொண்டே நடந்து வந்தான். மகிழ்ச்சியை முழுதாக கண்களில் நிரப்பி கொண்டிருக்கும் கண்கள், வார்த்தையே இல்லாமல் எதையோ சொல்ல துடிக்கும் உதடுகள், இரவு பனித்துளி அவளது முக்கில் முக்குத்தியாக, அலைகளின் ஓசையை ரசித்துக் கேட்கும் காதுகள், அழகான நெற்றி, காற்றில் பறக்கும் கருமை நிற கூந்தல்,கடலோடு துள்ளி கூதிக்கும் கால்கள். அப்பப்பா..
இப்படியே காதலியின் அழகை ரசித்துக் கொண்டே இருந்தான். அப்பொழுது அவனின் நினைவுக்கு வந்த பாடல் 'தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்' என்ற பாடலே.

மௌனமாக இருந்த இரவில் திவியாவே பேச்சை தொடங்கினாள்.
"சர்வின் எப்படி உனக்கு என் பிறந்த நாள் யாபகத்தில் இருந்தது. உண்மையில் எனக்கு இது மிக பெரிய பரிசு. மீண்டும் ஒரு முறை எனது நன்றி."
"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, நாம் ஒருவரை உண்மையாக நேசித்தல் அவர்களை பற்றிய நினைவுகள் மட்டுமே நம்மிடம் இருக்கும். அதேபோல் தான் நான் ஒவ்வொரு நிமிடமும் நேசிப்பது காதலிப்பது உன்னை மட்டுமே, அப்படி இருக்கும் பொழுது உன் பிறந்த நாள் எனக்கு நினைவு இருக்காத" அவளை கவரும்
அந்த சிரிப்பை சிரித்தான்.


***********************************
திவ்யாவின் டைரியில் இன்று அவள் எழுதியது யாவும் சர்வினை பற்றி மட்டுமே.
எப்பொழுதும் தன் சோகத்தையும் கவலையையும் மட்டும் கவிதையாக எழுதும் அவள். இன்று தான் காதலை கவிதையாக எழுதினாள்.

என் மனதை உருகி
பூத்த முதல் காதல் நீ
அன்பின் உருவமாய்
அழகாய் அற்புதமாக
என் மனம் கவர்ந்தவனே..!

என் மனம் என்னும் பூட்டை
காதல் என்னும் சாவியால்
திறந்தாய்..!
அழகிய காதல் முத்திரை நீ..!

உலக அதிசயங்களில்
என்னுள் உனக்கே முதலிடம்..
என்னுடன் நீ இருந்தால்
இன்றும் மட்டுமல்ல
தினம் தினம் எனக்கு
பிறந்த நாள் தான்..

உன் சுவாசத்தில் கலந்திருப்பேன்
உன் மூச்சுக்காற்றாக..

இரவின் நட்சத்திரங்கள் சிறுகச் சிறுக மறைந்துக் கொண்டே வந்தது. காலைப் பொழுது பணிவாய் மலர்ந்தது. கதிரவனை வரவேற்றது. காலை வேலை மகிழ்ச்சியாக புலர்ந்தது. தனது காலை கடமைகளை முடித்து விட்டு வரவேற்பறைக்கு இறங்கினாள். வீடு முழுக்க ஒரே கலகலப்பாக இருந்தது. அனைவரும் மாறி மாறி பிறந்த நாள் வாழ்த்துகளை கூறினார். ஆனால் அவளின் அண்ணனை மட்டும் காணவில்லை. ஒவ்வொரு பிறந்த நாளும் அண்ணன் தான் முதல் வாழ்த்துக்கள் கூறுவான். ஆனால் இன்றும் எங்கே போனான்.

வீடு முழுக்க தேட ஆரம்பித்தாள். ஆனால் எங்கும் காணவில்லை.
"அப்பா அண்ணா எங்கே. எங்கு தேடியும் காணவில்லை."
" அவனுக்கு இன்றும் காலையிலையே வேலை. சோ வேலைக்கு சென்று விட்டான்."
கோபத்துடன் தன் அறைக்குள் வந்து பூகுந்துக் கொண்டாள்.

தொடரும்..

Wednesday, May 6, 2009

என்றென்றும் காதல்..!


காலம் கடந்து வருந்துகிறேன்
உன் உறவை எண்ணி..உன்
பிரிவு என்னை வாட்டுகிறது
உன்னுடன் சேர மனம்
துடிக்கிறது..!

ஒரு முறை என்னை
தாலாட்ட தென்றலாக வா..
வெண்ணிலாவாக வா..
நூறு ஜென்மம் எடுத்தாலும்
உன்னை நெஞ்சம் மறவாது..!

என் ஒவ்வொரு துடிப்பிலும்
உன் நினைவுகள் கலந்துள்ளது
அன்பே..!

நீ எங்கு சென்றாலும் இரவில்
தோன்றும் நிலாவாக உன்னை
தொடர்வேன்..
உன்னில் நான் என் காதலை
கண்கிறேன்..!

தினம் தோறும் உன்
தாலாட்டு கேட்காமல்
உறங்கியதில்லை..
இன்று..
உன் நினைவுகளுடன்
நிம்மதியாக உறங்குகிறேன்
என் கல்லறையில்..!

என் கல்லறையில்
பூக்களை விட..
உன் நினைவுகளே அதிகம்..!

Saturday, May 2, 2009

என்னவளே..!

முதல் முறையாக உன்னை
பார்த்த பொழுது
நூறு ஜென்மம் உன்னுடன்
வாழ்ந்த எண்ணம்..!
உயிரை தொலைத்தேனே
உன்னிடத்திலே..!

பார்வையால் என்னை
சிதைத்தவளே..!
உன்னிடத்தில் காதல்
தேன்மழை பொழிந்தது
என் தவறா?

உன் யாபகம் என்னை
கொல்கிறது..!
கண்கள் தினம் அழுகிறது
உன் நினைவுகளால்..
நினைத்தாலே இனிக்கும்
உன் நினைவுகள்..
அதை எப்படி மறப்பது
கண்ணே..!

எந்தன் தேடல் என்றுமே
உன்னிடத்தில்
மட்டுமே.. உயிர்
கொண்டு காத்திருக்கிறேன்
அன்பே..! என் இதழோரம்
சுவை தந்து காதலை
சொல்லி செல்வாயா
என்னவளே என்
இனியவளே..!