எனக்கு இந்த தேவதையை அனுப்பியவர் பிரிவையும் நேசிப்பவள் காயத்திரி. இத்தருணத்தில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேவதையிடம் வரம் கேட்க நான் ரெடி.
முதல் வரம் : இன்று போல் என்றும் நான் வாழக் கூடாது.
இரண்டாம் வரம் : இந்த உலகத்தில் வாழும் எல்லா ஜீவராசிகளும் நோய் நொடி இல்லாமல்,சந்தோசமாக வாழ வேண்டும்.
மூன்றாம் வரம் : என்னவனின் நினைவுகள் அடுத்த ஜென்மத்திலும் தொடர வேண்டும்.(இந்த தொடரும் நினைவுகள் போல )
நான்காம் வரம் : பலரின் மனதை நான் காயப்படுத்தி உள்ளேன். அவர்களின் அன்பை மீண்டும் பெற ஒரு வரம் வேண்டும்.
ஐந்தாம் வரம் : அழகான அந்த பள்ளிக்கூட வாழ்க்கை மீண்டும் ஒரு முறை அனுபவிக்க வேண்டும்.
ஆறாம் வரம் : இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும்.
எழாம் வரம் : நான் இழந்த ஒவ்வொரு உறவுகளையும் மீண்டும் ஒரே முறை சந்திக்க வேண்டும்.
எட்டாம் வரம் : இன்னும் நிறைய கவிதைகள் நான் எழுத,அதை என்னவன் ஆசையாக படிக்க வேண்டும்.
ஒன்பதாம் வரம் : என்னால் முடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.
பத்தாம் வரம் : இந்த ஜென்மத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கை போதும், அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் என்னவனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்.
என் வரத்தை கேட்டு முடித்து விட்டேன். தேவதையிடம் பிறரும் வரத்தை கேட்டு நினைவேற எனது வாழ்த்துக்கள். என்னிடம் வந்த தேவதையை நான் இவர்களுக்கு தான் அனுப்ப போகிறேன்..
*விக்கி
*மகா
*அன்பு
*நட்புடன் ஜமால்
*வால் பையன்
தொடரும் நினைவுகளுடன் உங்கள்
11 comments:
நீங்க கேட்ட வரங்கள் நல்லா இருக்குங்க....
என்னையும் இப்பதிவு எழுத அழைத்தமைக்கு மிக்க நன்றி....
:))))
varangal neraivera vazthukkal
சிக்க வச்சிட்டிங்களே வியா!
நன்றி அன்பு...
வாங்கோ ஜோதிபாரதி :))
நன்றி காயத்ரி அக்கா..
உங்கள் வரங்களும் நிறைவேற எனது வாழ்த்துக்கள்
நான் யாரையும் சிக்க வைக்கலையே வால்..
ம்ம்ம்ம் சிக்கிரம் வரங்களை தேவதையிடம் கொடுத்து விடுங்கள்..
சீக்கிரம் வாறேன் விய்யா ...
hi viyaa
sorry pa nee kodutha home workai sekram seithu vidukiren.
late akituchu. manichukko
viyaa nan home work mudichitten
Post a Comment