Wednesday, November 25, 2009

தேடல்..!


எனது பயணங்கள்
உனது விழிகளில் தொடங்கியது..
இன்று..!
உன்னை நான் தொலைத்த
வேளையில்,என் வாழ்க்கையின்
தேடல் தொடங்கியது..

பள்ளியில் படித்த பாடத்தை விட
உன்னிடம்
காதல் பாடத்தை படித்ததே
அதிகம்.. இருந்தும்
காதல் என்னும் தேர்வில்
தோற்றது ஏனோ..?
உன் கரம் கோர்கையில்
நினைவுகள் ஆயிரம்..
நினைத்தாலே இனிக்கும்
தருணம்..

இது சோகமானாலும்
என் வாழ்க்கையின் தேடலில்
நெஞ்சுக்குள் ஒரு சுகம்..

இதயம் பேசும் என்
தனிமையான இரவுகளுடன்
என் காதலை
யாசிக்கிறேன்..!
தொடரும் நினைவுகளுடன்

4 comments:

நட்புடன் ஜமால் said...

இது சோகமானாலும்
என் வாழ்க்கையின் தேடலில்
நெஞ்சுக்குள் ஒரு சுகம்..
]]


தேடல் - சுகம்

Tamil Home Recipes said...

சிறந்த கவிதை

வியா (Viyaa) said...

நன்றி ஜமால்..நிண்ட நாட்களுக்கு பின்பு சந்திப்பதில் மகிழ்ச்சி..!
எப்படி இருகிங்க..?

வியா (Viyaa) said...

வருகைக்கு நன்றி..
உங்களின் சமையல் குறிப்பு ஒன்றை முயற்சி செய்து பார்க்க போகிறேன்