Saturday, April 4, 2009

காதல் தந்த பரிசு 2

காரில் ஏறி அமர்ந்தவுடன்,நெஞ்சுக்குள் ஒரு படப்படப்பு. சர்வினின் காதலை சொன்ன பொழுது மறுத்தேன். என்னுள் இன்று காதல் பூத்துள்ளது. என் காதலை ஏற்றுக்கொள்வானா? சொல்லமா இல்லை வேண்டாமா?என்று ஒரே குழப்பம்.
" என்ன ஒரே அமைதியாக இருக்க,ஏதும் பிரச்சனையா."
"அப்படி எல்லாம் ஏதும் இல்லை."
"உடம்பு சரியில்லையா.டாக்டர் பார்க்க போலாமா?"
"சர்வின் i'm ok only. don't worried about that."
"ஓகே,tomorrow we go for dinner,shall you follow me?"
"ok,i will follow you,but you the one must paid."
சர்வின் சிரித்துக் கொண்டே அவளின் சிரிப்பை ஒரு கணம் ரசித்தான். திவ்யாவின் வீடும் வந்தது. இருவரும் விடைபெற்றுக் கொண்டனர். ஆனால் சர்வினுக்கு திவ்யா அப்படி இருப்பது கவலையாக இருத்து. எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட திவ்யா எதையோ மறைப்பது போல அவனுக்கு தோன்றியது. அவளை பற்றிய அனைத்தையும் சர்வின் அறிவான். பாசத்திற்காக ஏங்கும் அவளது கண்கள், இழகிய மனம், ஒரு காதலியிடம் அவன் எதிர்ப்பார்ப்பது அனைத்தும்,அவளிடம் உள்ளது.

மறுநாள், 8 மணி அளவில் சர்வின் திவ்யாவை ஏற்ற வந்தான். அப்பொழுது அவள் அவன் கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள். அவள் அழகை சொல்ல வார்த்தையே இல்லை.
" திவ்யா you look beautiful and cute."
"thank you."
அவள் வெட்கத்துடன் சொன்ன நன்றி அவன் மனதை இன்னும் கொள்ளை அடித்து. அப்பொழுது அவனுக்கு 'வெண்மேகம் பெண்ணாக உருவானதோ' என்ற பாடலே நினைவுக்கு வந்தது. இருவரும் ஒன்றும் பேசவில்லை. மௌனமாகவே பயணம் தொடர்ந்தது. சாப்பிடும் இடமும் வந்தது. ஒரு மேசையில் இருவரும் அமர்ந்தனர். திவியாவுக்கு இன்னும் தான் காதலை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. சர்வினே பேச்சை தொடங்கினான்.
" திவ்யா ஏன் இன்று இப்படி dress up பண்ணி வந்தே"
" ஏன் நல்ல இல்லையா? கொடுமையா இருக்க."
" இல்லை மனசு அப்படி இப்படின்னு அலைபாயுது அதனால் தான் கேட்டேன்"
இப்படியே மீண்டும் அவனது கிண்டலும் கேலியும் தொடர்ந்தது." இப்படியே உன்னை கட்டி அணைத்துக் ஒரு முத்தமிட தோன்றுகிறது,ஆனால் என்ன செய்வது" என்று மனதிலேயே எண்ணிக் கொண்டான். அவனது கைத்தொலைபேசி அலறியது."excuse me" சொல்லி அந்த இடத்தை விட்டு சற்றே நகர்ந்தான். திவ்யாவுக்கு என்ன செய்வதென்ற புரியவில்லை. ஒரு சிறிய காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு கவிதை எழுதினாள்.

ஆயிரம் இதயம் உன்னை நேசிக்கலாம்
ஆனால் என்னை போல எவரும்
உன்னை நேசிக்க முடியாது..
எப்பொழுது நான் உன்னை
நினைக்க ஆரம்பித்தேனோ,
அப்பொழுதே என்னை
மறந்துவிட்டேன்.

எடுத்த பிறவி முடிந்தாலும்
பிறவி நூறு எடுத்தாலும்
நான் உன்னையே காதலிக்க வேண்டும்.
நீ என்னை தீண்டியதால்
என்னுள் காதல் தீ
பற்றிக் கொண்டது.

" என்ன எழுதிக்கொண்டு இருக்கிறாய்?"என்று எழுதிய காகிதத்தை பிடுங்கினான்.
"அதை இன்னும் முழுமையாக எழுதவில்லை சர்வின் கொடு"என்றாள்.
"wow,nice poem.யாருக்கு இந்த கவிதை,உன் அன்பனவருக்காகவா?"
"தெரியாத மாதிரி நடிக்காதே,அந்த அன்பானவர் நீ தான் என்றும் அந்த கவிதைக்கு சொந்தக்காரன் நீ தான் என்று உனக்கே தெரியாதா?"


தொடரும்..

34 comments:

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப ஸ்பீடா போகுது கதை. ஆன்னல் சீக்கிரமே தொடரும் வந்துவிட்டதே

S.A. நவாஸுதீன் said...

சீக்கிரம் அடுத்த பாகம் வரட்டும்

ஆவலுடன்

வியா (Viyaa) said...

நவாஸ் நன்றி..கதை எப்படி இருக்கு?
எதவாது குறைகள் இருக்க?

வியா (Viyaa) said...

அடுத்த தொடர் விரைவில் எதிர் பாருங்கள்

குடந்தை அன்புமணி said...

//வியா (Viyaa) said...
அடுத்த தொடர் விரைவில் எதிர் பாருங்கள்//

சீக்கிரம் வரட்டும்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ம்ம்ம்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//திவியாவுக்கு இன்னும் தான் காதலை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. //

தட்டச்சே தன்னை மறந்ததா?

:)

வியா (Viyaa) said...

விரைவில் வரும் அன்புமணி

வியா (Viyaa) said...

ஜோதிபாரதி ம்ம்ம் என்று மட்டும் தானா..

Anbu said...

ரசித்த வரிகள்:-
ஆயிரம் இதயம் உன்னை நேசிக்கலாம்
ஆனால் என்னை போல எவரும்
உன்னை நேசிக்க முடியாது..
எப்பொழுது நான் உன்னை
நினைக்க ஆரம்பித்தேனோ,
அப்பொழுதே என்னை
மறந்துவிட்டேன்.

Anbu said...

விரைவில் அடுத்த பாகம் போடுங்கள்

அ.மு.செய்யது said...

அழகான எழுத்தோவியம்..

காதல் ரசம் சொட்ட சொட்ட...அருமை வியா..

வியா (Viyaa) said...

நன்றி அன்பு..அதை நான் முதல் காதல் பூத்த பொழுது எழுதிய கவிதை..எனக்கு மிகவும் பிடித்த வரிகள் கொண்ட கவிதையும் கூட..அதனால் தான் கதையுடன் இணைத்தேன்

வியா (Viyaa) said...

அமு செய்யுது..நன்றி

Raju said...

அருமை..கதையின் ஒவ்வொரு வரிகளும்...

Prapa said...

ஓகே ஓகே தொடரட்டும் ......ம்ம்ம் .

வியா (Viyaa) said...

நன்றி டகளஸ்..
உங்களின் வருகைக்கும் நன்றி..

வியா (Viyaa) said...

என்ன பிரபா கருத்தை மிகவும் சுருக்கமாக சொல்லி சென்று விட்டிர்கள்..

நட்புடன் ஜமால் said...

ஹையா பாவ்னா!

நட்புடன் ஜமால் said...

\\ஆயிரம் இதயம் உன்னை நேசிக்கலாம்
ஆனால் என்னை போல எவரும்
உன்னை நேசிக்க முடியாது..\\

எல்லா காதலர்களும் சொல்வது

இருப்பினும் சுகமானது கேட்பவருக்கு.

நட்புடன் ஜமால் said...

\\எடுத்த பிறவி முடிந்தாலும்
பிறவி நூறு எடுத்தாலும்
நான் உன்னையே காதலிக்க வேண்டும்.
நீ என்னை தீண்டியதால்
என்னுள் காதல் தீ
பற்றிக் கொண்டது.\\

நல்ல காதல்.

நட்புடன் ஜமால் said...

எழுத்து மெருகு ஏறுது

வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

ஆயிரம் இதயம் உன்னை நேசிக்கலாம்
ஆனால் என்னை போல எவரும்
உன்னை நேசிக்க முடியாது..
எப்பொழுது நான் உன்னை
நினைக்க ஆரம்பித்தேனோ,
அப்பொழுதே என்னை
மறந்துவிட்டேன்.////

காதலின் வெளிப்பாடு அருமைங்க!

வியா (Viyaa) said...

நன்றி ஜமால்..அந்த கவிதை நான் எழுதியதில் எனக்கு பிடித்து..
உங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி

வியா (Viyaa) said...

ஹாய்,தேவா..வாங்கோ..
வருகைக்கு நன்றி

Anonymous said...

ungal ezhuthukkal vaasikum podhu nesikavum seikiradhu....theraikathai pondra kathai vadivam suvarasyam....

Anonymous said...

ungal ezhuthukkal vaasikum podhu nesikavum seikiradhu....theraikathai pondra kathai vadivam suvarasyam....

வியா (Viyaa) said...

நன்றி தமிழரசி..
திரைகதை போலவா அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை..இது தான் நான் முதல் முதலில் கதை எழுதும் அனுபவம்..

VIKNESHWARAN ADAKKALAM said...

//"excuse me" சொல்லி அந்த இடத்தை விட்டு சற்றே நகர்ந்தான். //

வியா நன்கு பழக்கம் கொண்டவரிடையே இப்படி ஒரு பார்மலிட்டி இருக்குமா? சிந்திக்க வைக்கிறது... கதையின் வேகம் சிறப்பு. மேலும் காத்திருக்கிறேன்.

புதியவன் said...

//எடுத்த பிறவி முடிந்தாலும்
பிறவி நூறு எடுத்தாலும்
நான் உன்னையே காதலிக்க வேண்டும்.
நீ என்னை தீண்டியதால்
என்னுள் காதல் தீ
பற்றிக் கொண்டது.//

இந்த வரிகள் அழகு...

கதை அருமையா போகுது...தொடருங்க வியா
காத்திருக்கிறோம்...

வியா (Viyaa) said...

விக்கி ஏன் அப்படி ஒரு பார்மலிட்டி இருக்க கூடாதா? இதில் தான் நிறைய பேர் தப்பு செய்கிறார்கள்..காதலிக்கும் பெண்ணிடம் இப்படி எல்லாம் இருக்க கூடாது என்று..அது தான் இல்லை அவளும் ஒரு பெண் தானே,மரியாதையை கொடுத்தால் தவறு இல்லையே!

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்..நிங்கள் கொடுக்கும் ஆதரவு தான்..

*இயற்கை ராஜி* said...

//ஆயிரம் இதயம் உன்னை நேசிக்கலாம்
ஆனால் என்னை போல எவரும்
உன்னை நேசிக்க முடியாது//

க‌தையும் சூப்பர்.அதில் வ‌ர்ர‌ க‌விதையும் சூப்ப‌ர்..

வியா (Viyaa) said...

நன்றி இயற்கை