Wednesday, April 8, 2009

காதல் தந்த பரிசு 3

"தெரியாத மாதிரி நடிக்காதே,அந்த அன்பானவர் நீ தான் என்றும் அந்த கவிதைக்கு சொந்தக்காரன் நீ தான் என்று உனக்கே தெரியாதா?"
இப்படி மனதிலேயே எண்ணிக் கொண்டாள்.
"யாருக்கோ அந்த கவிதை."என்று மறுமொழி கூறினாள்.
"ஒஹ் அப்படியா இதை நீயே வைத்துக் கொள்." என்று முகத்தில் சிறு கோபத்துடன் சென்றான்.
அதை உனக்காக தான் எழுதினேன்,உன்னை காதலிக்கிறேன் என்ற வார்த்தையை என்னிடம் இருந்து எதிர் பார்த்தனோ? எனக்கு கிடைத்த அறிய வாய்ப்பை நழுவ விட்டுவிட்டேனா?

"are you angry with me."என்று திவ்யா கேட்டாள்.
"no." சுருக்கமாக தனது பதிலை முடித்துக் கொண்டான்.
திவ்யாவை விட்டில் விடும் வரையில் ஒன்றும் பேசவில்லை. அவனது முகத்தில் ஒரு கோபம்,ஆனால் கண்களில் எதோ ஒரு ஏமாற்றம். கார் அவளின் விட்டின் முன் நின்றது. சர்வினை அவள் பார்த்த விதம் அவனை பேச வைத்தது.
"please பார்வையாலே கொல்லாதே."என்றான்.
"சரி நான் பார்க்கவில்லை போதுமா."
பாய் சொல்லி இறங்கி சென்றாள்.

***********************************
ஒரு வாரமாக திவ்யா உடன் சர்வின் தொடர்பு கொள்ளவில்லை. கண்களை மூடினால் கண் முன் நிற்பது திவ்யா தான். காதலை சொல்ல துடிக்கும் கண்கள், காதலின் முத்ததிற்கு ஏங்கும் உதடுகள், காதலனை கரம் பிடிக்க காத்திருக்கும் கைகள் இவையெல்லாம் அவளிடம் இவன் காண்பது. தான் காதலை இவளிடம் எப்படி புரிய வைப்பது என்றான். திவ்யா சர்வினிக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. மனதில் ஒரே குழப்பம். போன் பண்ணினாலும் எடுப்பதில்லை. ஒரு கணம் கண்களில் கண்ணீர் அருவி போல் தேங்கி நின்றது. அப்பொழுது தான் திவ்யா காதலின் ஆழத்தையும்,அவள் சர்வினின் மீது வைத்திருந்த காதலையும் புரிந்துக் கொண்டாள் .

இதை உணர்த்த மறு கணமே. சர்வினுக்கு போன் செய்தாள்.
சர்வின் திவ்யாவின் போனை எதிர் பார்க்கவே இல்லை.
"hi,how are you? where did you going among 1 weeks."
"i am fine. just got alot of work."
"அப்படியா சரி நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்."
"என்ன அது"
"ம்ம்ம்ம் அது ஒன்றும் இல்லை சின்ன விஷயம் தான் i love you"என்றாள்.
இது சர்வினுக்கு மிக பெரிய அதிர்ச்சி தான். அவள் காதலை சொன்னவுடன் அவனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வானத்தில் பறக்கும் பறவை போல இருந்தது.
"ஹெய்,உண்மையாகவா எப்படி"
"அது எப்படி வரும் எங்கே வரும்ன்னு தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரைட்ட வரும் அது தான் காதல்" இதை சொல்லிய பிறகு ஒரு சின்ன சிரிப்புடன் போனை வைத்தாள்.
போனை வைத்த பிறகு சர்வினுக்கு அவள் காதலை சொன்ன விதம் நகைச்சுவையாக இருந்தது,ஆனால் மிகவும் பிடித்திருந்தது. அவளுக்கு அதிர்ச்சி தர முடிவு செய்தான். இரவு அவளின் விட்டிற்கு செல்லவும் முடிவு செய்தான். கையில் ரோஜா மலருடன் அவளுக்கு பிடித்த சாக்லேட் உடன் சென்றான். கதவை தட்டின் எதிர்பார்த்த மாதிரியே அவளே வந்து திறந்தாள்.
"what a surprise."
"i'm come here to propose my true love my dear."
வெட்கத்துடன் அவனை வர செய்தாள்.

கையில் இருந்த ரோஜா மலரை நிட்டி "நான் உன்னை காதலிக்கிறேன்,என் வாழ்நாள் முழுதும் உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன்."என்றான்.
அந்த ரோஜா மலரை கையில் வாங்கி கொண்டு "உன்னோடு நாள் வாழ நினைக்கும் நிமிடங்களை என் வார்த்தையால் சொல்ல இயலாது" என்றாள்.
இது அல்லவா காதல். இருவரும் தனது காதலை குடும்பத்தினரிடம் சொல்லி விட்டனர்.
****************************
அவளது டைரியில் மறக்க முடியாத நாளாக இந்நாள் அமைத்தது. அப்பொழுது ஒரு சின்ன கவிதையை எழுதினாள்.
கண்களை கொண்டு
என் மனதில்
புகுந்த மன்மதனே
வருக!
என் இதயத்தில் நீ
எழுதிய அழகிய
ஓவியம் காதல்..!
என் உயிர் உள்ள வரை
அழியாதது அந்த காதல்
ஓவியம்..!

தொடரும்.....

24 comments:

நட்புடன் ஜமால் said...

\\"தெரியாத மாதிரி நடிக்காதே,அந்த அன்பானவர் நீ தான் என்றும் அந்த கவிதைக்கு சொந்தக்காரன் நீ தான் என்று உனக்கே தெரியாதா?"
இப்படி மனதிலேயே எண்ணிக் கொண்டாள்.\\

சொல்லிடனும்.

நட்புடன் ஜமால் said...

\\உன்னோடு நாள் வாழ நினைக்கும் நிமிடங்களை என் வார்த்தையால் சொல்ல இயலாது\\

அருமை.

வியா (Viyaa) said...

நன்றி ஜமால்..திவ்யாவை போல இன்னும் எத்தனை நெஞ்சங்கள் காதலை சொல்லாமல் இருக்கிறதோ! : )

நட்புடன் ஜமால் said...

திவ்யாவை போல இன்னும் எத்தனை நெஞ்சங்கள் காதலை சொல்லாமல் இருக்கிறதோ!\\

இதனை நினைக்கையில்

உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட
முன் நின்று பார்த்தால் தான் முகம் காட்ட கூடும் - ...

S.A. நவாஸுதீன் said...

அப்பாடா ஒரு வழியாக காதலை சொல்லியாயிற்று.

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

இதனை நினைக்கையில்

உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட
முன் நின்று பார்த்தால் தான் முகம் காட்ட கூடும் - ...

அருமை

வியா (Viyaa) said...

சயேத் நன்றி..காதலை சொல்லியாயிற்று.இனிமேல் தான் ஆரம்பம்

புதியவன் said...

//"please பார்வையாலே கொல்லாதே."என்றான்.
"சரி நான் பார்க்கவில்லை போதுமா."//

மிகவும் ரசித்தேன்...

புதியவன் said...

//கண்களை கொண்டு
என் மனதில்
புகுந்த மன்மதனே
வருக!
என் இதயத்தில் நீ
எழுதிய அழகிய
ஓவியம் காதல்..!
என் உயிர் உள்ள வரை
அழியாதது அந்த காதல்
ஓவியம்..!//

கதைக்குள் கவிதை அழகு...தொடருங்க வியா காத்திருக்கிறோம்...

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்.யார் பார்வை உங்களை கொன்றது..

வியா (Viyaa) said...

மீண்டும் மீண்டும் நன்றி புதியவன்..
அடுத்த பகுதிக்கு வரும் வரை காத்திருங்கள்

புதியவன் said...

//வியா (Viyaa) said...
நன்றி புதியவன்.யார் பார்வை உங்களை கொன்றது..//

நெற்றிக்கண் பார்வை வேண்டுமானால் மன்மதனைக் கொல்லலாம்...
பெண்களின் பார்வை என்றும் ஆண்களின்
மனதை மட்டும் தான் கொல்லும்...
காதல் தொடர் கதை எழுதும் உங்களுக்கு
இது தெரியாதா என்ன...?

வியா (Viyaa) said...

கண்டிப்பாக எனக்கு தெரியும் புதியவன் ..ஆனால் நான் உங்களுக்கு ஏதேனும் அனுபவம் உண்டா?

புதியவன் said...

//கண்டிப்பாக எனக்கு தெரியும் புதியவன் ..ஆனால் நான் உங்களுக்கு ஏதேனும் அனுபவம் உண்டா?//

என்ன அனுபவம் வியா...?...பார்வையில் எரிந்து போன அனுபவமா...?...இல்லை பார்வையில் எரித்த அனுபவமா...?...

Anbu said...

ரொம்ப அழகாக உள்ளது உங்கள் கதை...கவிதை அதைவிட சூப்பர்..

வியா (Viyaa) said...

ம்ம்ம்ம் அப்படி கூட இருக்க..எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள் புதியவன்

வியா (Viyaa) said...

நன்றி அன்பு..

VIKNESHWARAN ADAKKALAM said...

very nice
அழகாக எழுதி இருக்கிங்க வியா

வியா (Viyaa) said...

நன்று விக்கி.. : )

குடந்தை அன்புமணி said...

காதலை சொல்லியாயிற்றா... அப்பாடி! மீண்டும் தொடரும்னு போட்டிருக்கு? வரட்டும். அயம் வெயிட்டிங்!

குடந்தை அன்புமணி said...

திவ்யா> வியா?

வியா (Viyaa) said...

நிங்கள் கூறுவது உண்மையே அன்புமணி..இனிமேல் தான் ஆரம்பம்

வியா (Viyaa) said...

திவ்வியா > வியா
இது தான் சரி அன்புமணி

தமிழ்போராளி said...

காதல் தந்த பரிசு..
நீ சிரித்தாய் என்பதற்காகத்தான்
நானும் சிரித்தேன்
அதற்காகவா
வாழ்நாள்ளெல்லாம்
சிரிப்பாய்
சிர்க்க வைத்துவிட்டாய்...
எப்படி வியா எப்படி எல்லாம் கலக்குறீங்க...
தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்