Saturday, April 25, 2009

அன்புள்ள டைரி ..!

அன்புள்ள டைரி,
என் இன்பத்தையும் துன்பத்தையும் உன்னுடன் மட்டுமே நான் பகிர்ந்துக் கொள்வேன். இன்றும் உன்னுடன் தான் என் பயணம். அனைத்தையும் எல்லோரிடமும் சொல்ல முடிவதில்லை. உன்னிடம் சொல்வதில் மனதில் ஓர் ஆறுதல். நான் கடந்து வந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் மறக்க இயலாத நாட்கள் தான்.

பாசத்திற்காக நான் எத்தனை முறை கீழே விழுந்திருக்கிறேன் என்ற உண்மை நீ மட்டுமே அறிந்த ஒன்று. இதனால் வரை என்னுடன் இருந்த குடும்பம் இன்று காரணமே இல்லாமல் என்னை வெறுக்கின்றன. குடும்ப உறுப்பினர் மட்டுமில்லை, உடன் பழகிய நண்பர்களும் தான். உடன் பிறந்த சகோதரா சகோதிரிகளே எதிரியாகி பார்த்ததுண்டா? என் வாழ்வில் நடந்த ஒன்று. அனைவரும் இருந்தும் அனாதையாக வாழும் நான். இன்று என்னை வெறுக்கும் நெஞ்சங்கள் யாவும் அன்று என்னை நேசித்த நெஞ்சங்களே. இதை தான் சில நேரத்தில்;சில மனிதர்கள் என்பரோ. காதல் எல்லோருடைய வாழ்விலும் மறக்க முடியாத ஒரு சம்பவம். ஆனால் என் வாழ்கையில் நான் மறக்க நினைக்கும் சம்பவம். ஏன் தெரியுமா? பாசம் என்னும் போர்வையில் என்னை ஏமாற்ற வந்த நாரி இந்த காதல். இந்த காதலினால் நான் அனுபவித்த வேதனையை மரண படுக்கையிலும் மறவேன்.

இன்று எந்த உறவுகளும் உடன் இல்லை. கண்ட கனவு அடுத்த வினாடியே நமக்கு சொந்தமில்லை,உடன் இருக்கும் உறவுகளும் அப்படி தான் போல. மிகவும் எதிர்பார்புடன் நான் தொடங்கிய உறவுகள், இன்று எதிர்பாராமலே முடிவடைகிறது. அன்புள்ள டைரியே, இன்றே நான் உனக்கு எழுவது கடைசி. இந்த உறவுகளின் மத்தியில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. உமக்கு நேரம் இருந்தால் நான் அனுபவித்த சோகத்தையும் வேதனையையும் இந்த அன்பு நெஞ்சங்களுக்கு எடுத்துச் சொல்.
அன்புடன்,
.......................

இது 50% கற்பனையே..

18 comments:

carlos said...

Hi, it's a very great blog.
I could tell how much efforts you've taken on it.
Keep doing!

வியா (Viyaa) said...

thank you very much carlos..

Esywara said...

I wish that it waz 100%
fictitious...
cuz even 10% of that is
unbearable for me....

sakthi said...

இந்த காதலினால் நான் அனுபவித்த வேதனையை மரண படுக்கையிலும் மறவேன்.

nalla vishayam pa

maravathe viyaa

sakthi said...

இந்த உறவுகளின் மத்தியில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. உமக்கு நேரம் இருந்தால் நான் அனுபவித்த சோகத்தையும் வேதனையையும் இந்த அன்பு நெஞ்சங்களுக்கு எடுத்துச் சொல்.
அன்புடன்,
.......................

valiyudan kudiya dairy kuripu

வியா (Viyaa) said...

hi,esywara..
may be it can be true..

வியா (Viyaa) said...

சக்தி உண்மையிலேயே மறக்க மாட்டேன்..
வருகைக்கு நன்றி

வியா (Viyaa) said...

வலியுடன் வேதனையும் கலந்த ஒரு டைரி குறிப்பு சக்தி..

logu.. said...

இந்த உறவுகளின் மத்தியில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. உமக்கு நேரம் இருந்தால் நான் அனுபவித்த சோகத்தையும் வேதனையையும் இந்த அன்பு நெஞ்சங்களுக்கு எடுத்துச் சொல்.
அன்புடன்,



Dairyla mattumthan ipdi eazhutha mudium..

Nallave sollirukkeenga

gayathri said...

பாசம் என்னும் போர்வையில் என்னை ஏமாற்ற வந்த நரி இந்த காதல்

mmmmmmm ippa ellam neraya kadhal ippadi than da iruku

வியா (Viyaa) said...

நன்றி லோகு..டைரியில் மட்டுமாவது இப்படி எழுத வாய்ப்பு கிடைத்ததை நினைத்து சந்தோஷ பட வேண்டும்..:)

வியா (Viyaa) said...

உண்மையாக தான் காயத்திரி அக்கா..
காதல் சிலருக்கு மட்டுமே இன்பம்..பலருக்கு துன்பம்

ஆதவா said...

இந்த பதிவு கொஞ்சம் புதுசா இருக்கு... என்னவோ சொல்ல வர்றீங்க.. ஆனா மழுப்பறீங்க.

டைரி என்பது மனக்கிடங்கின் வெளி.
அது சக்தி வாய்ந்தது. பிறர் கண்களுக்கு தீட்டு வாய்ந்தது.
ரகசியங்களை அடக்கிக் கொள்ளாத டைரிகள் உலகிலேயே கிடையாது.

50% உண்மையை நீங்கள் கொட்டியிருப்பதால் மீதியை வேறு எவராலும் நிரப்பிக் கொள்ள முடியும்...

பதிவு புதுமை+அருமை

வியா (Viyaa) said...

நன்றி ஆதவா..


//டைரி என்பது மனக்கிடங்கின் வெளி.
அது சக்தி வாய்ந்தது. பிறர் கண்களுக்கு தீட்டு வாய்ந்தது.
ரகசியங்களை அடக்கிக் கொள்ளாத டைரிகள் உலகிலேயே கிடையாது.//

இது முற்றிலும் உண்மை..நானும் தான் டைரி எழுதுவேன்..
தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

புதியவன் said...

வித்தியாசமான பதிவு வியா...ஆனா, படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு...

//இது 50% கற்பனையே..//

இங்க சொன்னது 50% உண்மையை மட்டும் தானா...?

FunScribbler said...

எழுத்துகளில் சோகம் தெரிகிறது. கற்பனையாக இருந்தாலும், நிஜத்திலும் இப்படி நிறைய பேருக்கு நடப்பதுண்டு.

உங்கள் எழுத்துநடை அருமை. தொடர்ந்து நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்:)

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்..50 % உண்மை, மிதி உள்ள 50 % படிபவர்களின் கையில் விட்டு விட்டேன்..

வியா (Viyaa) said...

தமிழ் மிகவும் நன்றி..
உண்மையில் இது பலரின் வாழ்க்கையில் நடந்து இருக்கலாம்..