Sunday, May 17, 2009

காதல் தந்த பரிசு 6

அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை. அந்த இடமே அவளின் வருகைக்காக காத்திருந்தது. அழகான கடற்கரை பொழுது, இரவு நேரம் அதற்கு துணையாக நிலவு, கடல் தேவதையின் சிலுங்கள், அவளின் பொன்னான பதங்களை முத்தமிட்டு செல்லும் அலைகள். ஆம், அன்று திவ்யாவின் பிறந்த நாள். அவளே தன் பிறந்த நாளை மறந்துவிட்டாள். இவை யாவும் சர்வினின் ஏற்பாடுகள். அப்பொழுது தான் திவ்யா சர்வினிடம் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது."என் பிறந்த நாளை கடற்கரை ஓரத்தில் நிலவின் வெளிச்சத்தில் கேக் வெட்ட வேண்டும் சர்வின்,அது என் நீண்ட நாள் ஆசை. என்று தான் என் ஆசைகள் கை கூடுமோ?."

சரியாக இரவு மணி 12.
"wishing you happy birthday dear.May all your dreams became true on this wonderful day" என்றபடியே அவளின் நெற்றியில் ஒரு முத்தத்தை பரிசாக தந்தான்.
"தங்க யு சர்வின். என் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத பிறந்த நாள் இது. தேங்க்ஸ்".
" ஓகே இன்று என் தேவதையின் பிறந்த நாள் சோ கவலை வேண்டாம் கேக் கட் பண்ணு."
பிறகு இருவரும் கடற்கரை ஓரத்தில் நடக்க ஆரம்பித்தனர். அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திவ்யா இரவு நேரத்தையும் கடற்கரையையும் ரசித்த வண்ணமாகவே நடந்து வந்தாள். ஆனால் சர்வின் அதற்க்கு எதிர்மாறாக திவ்யாவின் அழகை ரசித்துக் கொண்டே நடந்து வந்தான். மகிழ்ச்சியை முழுதாக கண்களில் நிரப்பி கொண்டிருக்கும் கண்கள், வார்த்தையே இல்லாமல் எதையோ சொல்ல துடிக்கும் உதடுகள், இரவு பனித்துளி அவளது முக்கில் முக்குத்தியாக, அலைகளின் ஓசையை ரசித்துக் கேட்கும் காதுகள், அழகான நெற்றி, காற்றில் பறக்கும் கருமை நிற கூந்தல்,கடலோடு துள்ளி கூதிக்கும் கால்கள். அப்பப்பா..
இப்படியே காதலியின் அழகை ரசித்துக் கொண்டே இருந்தான். அப்பொழுது அவனின் நினைவுக்கு வந்த பாடல் 'தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்' என்ற பாடலே.

மௌனமாக இருந்த இரவில் திவியாவே பேச்சை தொடங்கினாள்.
"சர்வின் எப்படி உனக்கு என் பிறந்த நாள் யாபகத்தில் இருந்தது. உண்மையில் எனக்கு இது மிக பெரிய பரிசு. மீண்டும் ஒரு முறை எனது நன்றி."
"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, நாம் ஒருவரை உண்மையாக நேசித்தல் அவர்களை பற்றிய நினைவுகள் மட்டுமே நம்மிடம் இருக்கும். அதேபோல் தான் நான் ஒவ்வொரு நிமிடமும் நேசிப்பது காதலிப்பது உன்னை மட்டுமே, அப்படி இருக்கும் பொழுது உன் பிறந்த நாள் எனக்கு நினைவு இருக்காத" அவளை கவரும்
அந்த சிரிப்பை சிரித்தான்.


***********************************
திவ்யாவின் டைரியில் இன்று அவள் எழுதியது யாவும் சர்வினை பற்றி மட்டுமே.
எப்பொழுதும் தன் சோகத்தையும் கவலையையும் மட்டும் கவிதையாக எழுதும் அவள். இன்று தான் காதலை கவிதையாக எழுதினாள்.

என் மனதை உருகி
பூத்த முதல் காதல் நீ
அன்பின் உருவமாய்
அழகாய் அற்புதமாக
என் மனம் கவர்ந்தவனே..!

என் மனம் என்னும் பூட்டை
காதல் என்னும் சாவியால்
திறந்தாய்..!
அழகிய காதல் முத்திரை நீ..!

உலக அதிசயங்களில்
என்னுள் உனக்கே முதலிடம்..
என்னுடன் நீ இருந்தால்
இன்றும் மட்டுமல்ல
தினம் தினம் எனக்கு
பிறந்த நாள் தான்..

உன் சுவாசத்தில் கலந்திருப்பேன்
உன் மூச்சுக்காற்றாக..

இரவின் நட்சத்திரங்கள் சிறுகச் சிறுக மறைந்துக் கொண்டே வந்தது. காலைப் பொழுது பணிவாய் மலர்ந்தது. கதிரவனை வரவேற்றது. காலை வேலை மகிழ்ச்சியாக புலர்ந்தது. தனது காலை கடமைகளை முடித்து விட்டு வரவேற்பறைக்கு இறங்கினாள். வீடு முழுக்க ஒரே கலகலப்பாக இருந்தது. அனைவரும் மாறி மாறி பிறந்த நாள் வாழ்த்துகளை கூறினார். ஆனால் அவளின் அண்ணனை மட்டும் காணவில்லை. ஒவ்வொரு பிறந்த நாளும் அண்ணன் தான் முதல் வாழ்த்துக்கள் கூறுவான். ஆனால் இன்றும் எங்கே போனான்.

வீடு முழுக்க தேட ஆரம்பித்தாள். ஆனால் எங்கும் காணவில்லை.
"அப்பா அண்ணா எங்கே. எங்கு தேடியும் காணவில்லை."
" அவனுக்கு இன்றும் காலையிலையே வேலை. சோ வேலைக்கு சென்று விட்டான்."
கோபத்துடன் தன் அறைக்குள் வந்து பூகுந்துக் கொண்டாள்.

தொடரும்..

15 comments:

sakthi said...

வித்தியாசமான முயற்சி

கதையில் கவிதை

வாழ்த்துக்கள் வியா

sakthi said...

என் மனம் என்னும் பூட்டை
காதல் என்னும் சாவியால்
திறந்தாய்..!
அழகிய காதல் முத்திரை நீ..!
அருமை

gayathri said...

அழகான கடற்கரை பொழுது, இரவு நேரம் அதற்கு துணையாக நிலவு, கடல் தேவதையின் சிலுங்கள், அவளின் பொன்னான பதங்களை முத்தமிட்டு செல்லும் அலைகள். ஆம், அன்று திவ்யாவின் பிறந்த நாள்.

mmmmmmm nalla iruku da

வியா (Viyaa) said...

நன்றி சக்தி..
நான் வித்தியசமான ஒன்றை செய்ய விரும்புகிறேன்..

வியா (Viyaa) said...

நன்றி காயத்திரி அக்கா..

அ.மு.செய்யது said...

மனதிற்கு நெருக்கமானவர்களோடு பிறந்த நாள் கொண்டாடுவது எத்தனை இனிமையானது
என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

எழுத்துக்களோடு கவிதையும் சேர்ந்து அழகூட்டுகிறது.

அருமை வியா !!!!

நட்புடன் ஜமால் said...

\நாம் ஒருவரை உண்மையாக நேசித்தல் அவர்களை பற்றிய நினைவுகள் மட்டுமே நம்மிடம் இருக்கும். \\

சரியா சொன்னீங்க.

கதையும் கவிதையும் அருமை.

குடந்தைஅன்புமணி said...

கதைக்கு ஒரு பதிவு, கவிதைக்கு ஒரு பதிவு என்றில்லாமல் கலந்து கட்டி கலக்கிறீங்க (திவ்)வியா... வாழ்த்துகள்!

புதியவன் said...

கதைக்குள் கவிதையை கொண்டு வந்திருப்பது அழகு...தொடருங்கள் வியா...

வியா (Viyaa) said...

நன்றி அமு செய்யுது..
உண்மையிலையே நாம் அன்பானவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவது..அதில் ஒரு தனி சந்தோசம் தான்..
எனக்கு அது வாழ்வில் மறக்க முடியாத ஒன்றும் கூட

வியா (Viyaa) said...

நினைவுகள் என்றும் நிரந்தரம் ஜமால்..
எங்கு போனிர்கள்..ஆளையே காணவில்லை..?
நிறைய விஷயம் உண்டு உங்களிடம் சொல்லவதற்கு..

வியா (Viyaa) said...

நன்றி அன்புமணி..என் பெயரை மிக அழகாக எழுதி இருகிங்க..

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்..நிங்கள் சொன்னதை போல் ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுத முயற்சி செய்து உள்ளேன்..எப்படி இருக்கு? ஏதேனும் குறைகள் உண்டா?

VIKNESHWARAN said...

விறுவிறுப்பு குறைஞ்சிருக்கு :)

வியா (Viyaa) said...

அப்படியா விக்கி..அடுத்த பதிவில் விறுவிறுப்புடன் தொடங்குகிறேன்