Tuesday, June 2, 2009
வாழ்க்கை..!
வெளியில் சிரித்துக் கொண்டு
உள்ளுக்குள் அழுகிறேன்..
எல்லோருக்கும் சில நேரம்
வரும் சோதனை..
ஆனால் எனக்கு வாழ்நாள்
முழுதும் சோதனையே..
என் உணர்வுகளை புரிந்தவர்கள்
உலகில் இல்லை.
ஒவ்வொரு எதிர்பார்புகளும்
ஏமாற்றத்தில் தான்
முடிகிறது..?கனவுகள்
நிஜமாகவும் இல்லை..
காலங்கள் கடந்தாலும்
காயங்கள் இன்னும்
ஆறவில்லை..! வேதனைகள்
சிறிதும் குறையவில்லை..!
ஏன் இந்த வாழ்க்கை ?
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
வெளியில் சிரித்துக் கொண்டு
உள்ளுக்குள் அழுகிறேன்..
எல்லோருக்கும் சில நேரம்
வரும் சோதனை..
ஆனால் எனக்கு வாழ்நாள்
முழுதும் சோதனையே..
சோதனைதான் மனிதனை செம்மைப்படுத்தும். வேதனை வேண்டாம். சீக்கிரம் மாறும்
என் உணர்வுகளை புரிந்தவர்கள்
உலகில் இல்லை.
ஒவ்வொரு எதிர்பார்புகளும்
ஏமாற்றத்தில் தான்
முடிகிறது..?கனவுகள்
நிஜமாகவும் இல்லை..
விரக்தி வேண்டாம். விடியல் என்று ஒன்று உண்டு. அதில் ஒளி மட்டும்தான் இருக்கும். வலி இருக்காது. மனம் தளர வேண்டாம்.
காலங்கள் கடந்தாலும்
காயங்கள் இன்னும்
ஆறவில்லை..! வேதனைகள்
சிறிதும் குறையவில்லை..!
ஏன் இந்த வாழ்க்கை?
தைரியமா இருங்க வித்யா. படைத்தவனுக்கு தெரியும் அவன் படைப்பின் பலம் என்னவென்று. அதை மீறி அவன் யாரையும் சோதிப்பதில்லை.
எங்கே ரொம்ப நாளா என்னோட ப்லோக்-ல உங்களைக் காணோம்?
வேதனை வேண்டாமா நவாஸ்..
நண்ணும் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்..
ஆனால் சோதனைகள் இன்னும் என்னை விடவில்லை.
இப்படி பட்ட மன வேதனைகளுக்கு மத்தியில் கடவுள் நம்பிக்கை என்னுள் குறைத்துக் கொண்டே வருகிறது நவாஸ்..என்ன செய்வதென்றே தெரியவில்லை?
நிச்சியம் நம்புங்கள்
நமக்கு தெரியாது நமக்கு எது நல்லதென்று
இறைவன் நல்லதையே நமக்கு செய்வார்.
சோதனை சீக்கிரம் மாறும்
நல்லதெ நமக்கு செய்வார் இறைவன் .
எல்லா நோய்களுக்கும் காலத்திடம் மருந்து உண்டு.
கொஞ்சம் காத்திருங்களேன்.
காலங்கள் கடந்தாலும்
காயங்கள் இன்னும்
ஆறவில்லை..! வேதனைகள்
சிறிதும் குறையவில்லை..!
ஏன் இந்த வாழ்க்கை
வாழ்கை மேல் ஏன் இந்த கோபம் விரக்தி எல்லாம் வியா
சோதனைகளை சாதனை ஆக்கு
அதற்கு தான் வாழ்கை
ஏமாற்றங்களை ஏணியாக்கு
வீறு கொண்டு எழுந்து நட
உலகம் உன் பின்னால்
வாழ்த்துக்கள்
//காலங்கள் கடந்தாலும்
காயங்கள் இன்னும்
ஆறவில்லை..! வேதனைகள்
சிறிதும் குறையவில்லை..!
ஏன் இந்த வாழ்க்கை ?//
ஏனிந்த விரக்தி...?
நிச்சயம் நிலை மாறும். கவலைப் படாதீங்க வியா.
கவிதை அருமை. உங்களோட உணர்வுகளை அருமையா பிரதிபலிக்கிறது கவிதை. விரக்திய விட்டிடுங்க.
நன்றி ஜமால்..இறைவன் கொடுத்ததை எல்லாம் எடுத்துக் கொண்டு விட்டார்..
இதற்கு மேல் எனக்கு கொடுப்பது எல்லாம் நிலைத்து என்னிடமே இருக்க வாரம் கேட்கிறேன்
கண்டிப்பாக இயற்கை நம்புகிறேன்..
அமு செய்யுது காத்திருப்பேன்..
நிச்சயம் கனவுகள் நிறைவேறும்
தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி சக்தி..
வாழ்க்கையின் ,மேல் விரக்தி இல்லை..தொடர்ந்து சோதனைகளை கண்டதால் மனதில் ஒரு தடுக்கம்.
தொடர்ந்து மன வேதனைகளால் தான் இப்படி ஒரு நிலமை புதியவன்..
இனிமேல் வேதனைகளை ஏற்றுக் கொள்ள மனம் மாறுகிறது
நன்றி மகா..
கண்டிப்பாக நிங்கள் அனைவரும் இருக்கும் பொழுது எனக்கு என் இந்த கவலை..?
Post a Comment