Monday, July 6, 2009

பறக்கும் வண்ணத்துப்பூச்சி..

படபடவென இறக்கைகளை
அடித்துக் கொண்டு
சிட்டுகுருவிப் போல்
வானத்தில் பறக்கும்
வண்ணத்துப்பூச்சியே..!

உன்னை போல வாழ
எனக்கு நீண்ட நாள்
ஆசை..

வானவில்லில் மிதக்கும்
ஏழு வண்ணங்களும்
உன்னிடத்தில்..பெண்களை
கண்டால் ஏற்படாத
பொறாமை..உன்னை கண்டால்
மட்டும் ஏற்படுவது ஏனோ?

உன் வண்ணங்கள் சிதறி
பூக்கள் சினுங்குவதை விட
நான் சினுகுவது தான்
அதிகம்..

பூக்களிடம் மௌனத்தை
சேகரித்து நீ கொண்ட
காதல்..என் காதலை விட
புனிதமானது உன் காதல்..

உன்னை விரும்பாதவர்களே
எவரும் இல்லை இந்த உலகில்..
ஆனால் என்னை விரும்புவர்கள்
எவரும் இல்லை இந்த மண்ணில்..
வண்ணத்துப்பூச்சியே..!

11 comments:

S.A. நவாஸுதீன் said...

படமும் சரி, கவிதையும் சரி ரொம்ப நல்லா இருக்கு வியா

வியா (Viyaa) said...

நன்றி நவாஸ்..உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மீண்டும் நன்றி

sakthi said...

வானவில்லில் மிதக்கும்
ஏழு வண்ணங்களும்
உன்னிடத்தில்..பெண்களை
கண்டால் ஏற்படாத
பொறாமை..உன்னை கண்டால்
மட்டும் ஏற்படுவது ஏனோ?

arumai viyaa

sakthi said...

உன்னை விரும்பாதவர்களே
எவரும் இல்லை இந்த உலகில்..
ஆனால் என்னை விரும்புவர்கள்
எவரும் இல்லை இந்த மண்ணில்..
வண்ணத்துப்பூச்சியே..!

ஏன் இந்த விரக்தி

வாழ்கையை எப்போதும் நேசியுங்கள்....

வியா (Viyaa) said...

உண்மையை தான் சொன்னேன் சக்தி..நன்றி
எனவே உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்..

வியா (Viyaa) said...

வாழ்கையை நேசிக்க நினைக்கிறேன்..
ஆனால் அப்போதெல்லாம் தான் எதாவது ஒரு சம்பவம் நடந்து வாழ்கையை வெறுக்க செய்கிறது சக்தி

நட்புடன் ஜமால் said...

பட்டாம்பூச்சி அழகாயிருக்கு.


\\ஆனால் என்னை விரும்புவர்கள்
எவரும் இல்லை இந்த மண்ணில்..
வண்ணத்துப்பூச்சியே..!\\

உங்களை விரும்புவது என்றால் ...

வியா (Viyaa) said...

என்னை நேசிக்கும் உறவுகள் யாவும் என்னுடன் இல்லை என்பதை தான் அப்படி சொன்னேன் ஜமால்..

நட்புடன் ஜமால் said...

என்னை நேசிக்கும் உறவுகள் யாவும் என்னுடன் இல்லை என்பதை தான் அப்படி சொன்னேன் ஜமால்..\\

உங்களுடன் இருக்கும் உறவுகளில் யாருக்கேனும் உங்கள் நேசம் தேவைப்படலாம் ...

வியா (Viyaa) said...

நேசம் தேவைப்படலாம் என்று நீங்கள் தான் சொல்கிறிர்கள்..
உடன் இருக்கும் உறவுகள் அப்படி சொல்லவில்லையே..அவர்கள் தான் சொல்லவில்லை ஆனால் உங்களது நேசம் மற்றும் நட்பு மட்டும் அப்படி சொல்கிறது ஜமால் :)

நட்புடன் ஜமால் said...

இறக்கும் வரை

இருக்கும்

நட்போடு (சொல்லாமலும் ...)