Tuesday, August 25, 2009

என் காதலே..என் காதலே


உன் விழிக்குள் இமையாக
நான் கொண்ட காதல்..
உன்னை நான் உணர்ந்த
நாள்..என்னை நான் மறந்த நாள்..

நீ எனக்கு தந்த முதல்
முத்தத்தை இன்றும்
சேமித்து வைத்துள்ளேன்..
என் காதலின் புனிதமான
சின்னமாய்..!

காதலினால் ஏற்பட்ட
காயங்களை அழிப்பதற்கு
கண்ணிரை செலவழிக்கிறேன்..
ஈட்டியாய் உன் நினைவுகளை
என் இதயத்தில் பாய்த்து விட்டாய்..
சிலுவைகலாய் உன் நினைவுகளை
சுமந்து கொண்டு உயிரோடு
நான் இறந்து விட்டேன்...!

நான் இல்லாமல் நீ
இருப்பாய்..ஆனால்
நீ இல்லாமல் என்றும்
நான் இல்லையடா..!

தொடரும் நினைவுகளுடன் உங்கள்..



18 comments:

வால்பையன் said...

//நான் இல்லாமல் நீ
இருப்பாய்..ஆனால்
நீ இல்லாமல் என்றும்
நான் இல்லையடா..!//

எப்படி இவ்வளவு திட்டவட்டமா சொல்றிங்க!
ஆண்களும் காதலுகாக உயிரை கொடுத்து கொண்டிருப்பவர்கள்!

sakthi said...

காதலினால் ஏற்பட்ட
காயங்களை அழிப்பதற்கு
கண்ணிரை செலவழிக்கிறேன்..

அருமையான வெளிப்பாடு

Anbu said...

நல்லா இருக்கு வியா..

வியா (Viyaa) said...

வால்பையன் நான் அப்படி ஏதும் சொல்லவில்லை..
ஆனால் ஆண்களை விட பெண்களுக்கே காதல அதிகம் :)

வியா (Viyaa) said...

நன்றி சக்தி..மனதினுள் பூத்த காதல் அப்படி தான்..!

வியா (Viyaa) said...

நன்றி அன்பு :)))

வால்பையன் said...

//வால்பையன் நான் அப்படி ஏதும் சொல்லவில்லை..
ஆனால் ஆண்களை விட பெண்களுக்கே காதல அதிகம் :) //

காதல் தோல்வி தற்கொலைகளில் அதிகம் இறப்பது ஆண்கள் தான் அம்மணி

நட்புடன் ஜமால் said...

உன்னை நான் உணர்ந்த
நாள்..என்னை நான் மறந்த நாள்..]]


அழகு.

நட்புடன் ஜமால் said...

உன் நினைவுகளை
சுமந்து கொண்டு உயிரோடு
நான் இறந்து விட்டேன்...!]]


வரிகள் அழகு

இவ்வளவு ஆழக்காதலும் அழகு.

வியா (Viyaa) said...

அது எப்படியோ நான் ஏற்றுக் கொள்கிறேன்..அதற்காக ஆண்களின் காதல் புனிதமனத வால்பையன்..அவையாவும் கோழைத்தனம்..! தற்கொலை முழுக்க முழுக்க கோழைத்தனம்..

வியா (Viyaa) said...

நன்றி ஜமால்..
உங்களின் கருத்துகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி..

வியா (Viyaa) said...

என் காதல் என்றுமே அழகு என் கவிதை போல ஜமால்..!

தயாஜி said...

உங்கள் ,
கவிதையும் படமாகுது..
நீங்கள் ,
தேர்ந்தெடுத்த படமும் கவிதையாகுது.....

வியா (Viyaa) said...

நன்றி.தங்களின் கருத்துகளுக்கு

அவள் இதழும், என் இதயமும் said...

நானும் த‌ங்க‌ள் அடியே ப‌ணிகிறேன் வால்பையன்,

தற்கொலை கோழைத்தனம் தான்...,

வேறு ஒருவ‌னை ம‌ணப்ப‌து தான் புதிச‌லித‌னம்....

ச‌ரிய‌, வியா.....?

Unknown said...

kathalil aangalin kathal than punitham, illai pengalin kathal than punitham ena piritthu paarkkathirgal.... aanum pennum sernthal than kaathale. naanum thavithukkondirukiren en kaathalanukkaga....

Unknown said...

kathalil aangalin kathal than punitham, illai pengalin kathal than punitham ena pirithu paarkaathirgal..... aanum pennum sernthal than kathale.... unmaiyana kathal iruvarukkume samarppanam.....

ganesh said...

avan antha pirivin valiyai etru kolla mudiamal than kathaliyodu unnoruvar varuvathai sakithu kolla mudiyamal than avan tharkolai seigiran avaru seithu avan avanudaya kathalai punithapaduthukiran