Friday, March 6, 2009
ஆயிரம் எண்ணங்கள் 2
தனிமை
தனியாய் இருப்பது பொதுவாக வெறுமை,சோகம்,விரக்தி போன்ற நிலைகளுடன் இணைத்து தான் பேசப்படுகிறது. தனியாய் இருப்பது அவ்வளவு துயரம் தரக்கூடியாத? தனிமையை கண்டு பலர் பயப்படுகிறார்கள். ஆனால், சரித்தரத்தை புரட்டி பார்க்கையில் தனிமை என்பது மனிதனை கொடுமை படுத்துவதை விட,உள்ளிருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு சக்தி.
கால தனிமையை கண்டு அச்சம்,குழப்பம்,கவலை வருவதால் தான் தனிமையை சோகத்துடன் நாம் இணைத்து பார்க்கிறோம். எந்த மனிதனும் தனிமையில் வாழ,வளர முடியும். இது இருந்தால் தான்,இவர் இருந்தால் தான் என்று நினைப்பதனால் அந்த விஷயத்தின் மீதும்,அந்த நபர் மீதும் சார்ப்பு நிலை ஏற்படுகிறது. சார்ப்பு நிலை மன முதிர்ச்சிக்கு ஒரு தடை. தனிமை சிறப்பு வாய்ந்தது,சக்தி வாய்ந்தது என்பதற்காகவே உக்குவிக்கும் உறவுகளை உதறிவிட வேண்டும் என்பதில்லை.
இவ்வளவு மகிழ்ச்சியான நிலையை உருவாக்கும் சக்திவாய்ந்த தனிமையை ஏன் நாம் சோகமானது விரக்தியானது என்று எண்ணுகிறோம்? தனிமையை பலர் சோகமான நேரத்திலையே நடுகிறார்கள். ஏன் அந்த தனியான நேரங்களில் பயன் உள்ள விஷயங்களை பற்றி சிந்திக்க கூடாது. தனிமை துயரம் வரும். உண்மையில் மனிதன் எதையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. தன்னை தவிர,நியதிகளை நாம் புரிந்து கொள்வதில் ஏற்படும் தவறுகள் தான் மன குழப்பங்களுக்கு காரணம்.
"உன்னையறிந்தால் உலகத்தில் நீ வாழலாம்" என்று கவிஞர் கூறியபடி, முதலில் நாம் நம்மையரிவது சிறந்த அடையாளம்.
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
ஐயோ.... சூப்பர்ங்க வியா... அசத்தலான எண்ணன வடிவங்கள்.... கலக்குங்க...
//தனிமையை பலர் சோகமான நேரத்திலையே நடுகிறார்கள். ஏன் அந்த தனியான நேரங்களில் பயன் உள்ள விஷயங்களை பற்றி சிந்திக்க கூடாது. //
தாங்கள் கூறுவது சரிதான். சோகமான தருணங்களில் தனித்திருப்பதுதான் பல தவறான எண்ணங்களுக்கு இடமளிக்கிறது.முடிவெடுக்க வேண்டிய சமயங்களில் தனித்திருந்தால் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். பலரும் யோசிக்க வேண்டிய விடயம்!
நன்றி விக்கி மற்றும் அன்புமணி அவர்களே..
கருத்துக்களை நான் முழுமையாக ஏற்று கொள்கிறேன்
\\ தனிமை என்பது மனிதனை கொடுமை படுத்துவதை விட,உள்ளிருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு சக்தி.\\
இதுவும் சரியே ...
\\. சார்ப்பு நிலை மன முதிர்ச்சிக்கு ஒரு தடை. தனிமை சிறப்பு வாய்ந்தது\\
மிக அழகு ...
\\உக்குவிக்கும் உறவுகளை உதறிவிட வேண்டும் என்பதில்லை.\\
இதுவும்தான் ...
\\நாம் நம்மையரிவது சிறந்த அடையாளம்.\\
அற்புதம் ...
மகளிர்தின வாழ்த்துக்கள்
தனிமையில இருந்தா இப்படி தான் யோசிக்க தோணும், ஆனாலும் நல்லாதான் இருக்கு
நன்றி ஜமால்..
உங்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்கள் மகா
நன்றி வால்பையன்..
இந்த தனிமை தான் என்னையும் இப்படி
எழுத வைக்கிறது..
//ஏன் அந்த தனியான நேரங்களில் பயன் உள்ள விஷயங்களை பற்றி சிந்திக்க கூடாது.//
நல்ல கேள்வி...தனிமையை தனிமைப் படுத்தினால் எல்லாம் சரியாகிவிடும் வியா...
//
உண்மையில் மனிதன் எதையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. தன்னை தவிர,நியதிகளை நாம் புரிந்து கொள்வதில் ஏற்படும் தவறுகள் தான் மன குழப்பங்களுக்கு காரணம்.
//
மிக மிக ஆழமான எண்ணங்கள்.
இதே கருத்தை "Raising your Emotional Intelligence" by Jeanne Segal புத்தகமும் தெரிவிக்கிறது.
nalla sinthanai..athenna per viyaa?? vidyavoda typo? postulayum sila spelling mistake iruku. mathabadi content was gud..postive post
நன்றி கில்ஸ்..வியா என்பது என் பெயர்தான்..
மீண்டும் நன்றி என்னது எழுது பிழைகளை எடுத்து கூறியதிற்கு..
Post a Comment