Wednesday, March 11, 2009

ஆயிரம் எண்ணங்கள் 5

நிம்மதி

நிறைவு,நிம்மதி இவையிரண்டையும் தேடியே எல்லோர் வாழ்க்கையும் இயங்குகிறது. சிலருக்கு அனைத்தும் இருந்தும் நிம்மதியும் மன நிறைவும் இருக்காது. ஏன்? நாம் எடுக்கும் எல்லா முடுவுகளுமே சரியானதாக அமைவதில்லை. அதேபோல் நம் வாழ்க்கை குறித்தும்,லட்சியம் குறித்தும் எடுக்கும் முடுவுகளும் சரியானதாக தான் இருக்கவேண்டும் என்பதல்ல. சில நேரங்களில் நாம் விரும்புபவை,நேசிப்பவை கூட நமக்குத் தடையாக இருக்கலாம்.

வாழ்க்கைப் பாதை என்றும் பூந்த்தோட்டமாக தான் இருக்க வேண்டும் என்பதல்ல. முட்களும் குழிகளும் நிரம்பியதாகவும் இருக்கலாம். வாழ்வில் எப்போதும் கவனம் தேவை. அந்த கவனம்,நிதானம் மட்டுமே உன் வாழ்க்கை மலர் போல பூக்க உதவும். நாம் என்ன வேண்டுமானாலும் நம் வாழ்வு குறித்து திர்மானிக்கலாம். ஆனால்,அந்த முடிவே தவறாகக் கூடாது. முடிவெடுத்த வாழ்க்கை முழுமையை வருவது நம் கையில் தான் உள்ளது. பல நேரங்களில் நம்மை பற்றி,நம் தோல்வியை பற்றி,நம் குறை பற்றி,நம் இயலாமை பற்றியே மனம் சிந்திக்கிறது.

வாழ்வில் தொடர்ந்து முன்னேற,நிறைவுகளையும் அடிக்கடி நினைவுக் கூற வேண்டும். இது வரை நடந்தவையே இன்று நடப்பதற்கு பாடம். ஆனால்,எல்லா விசயங்களும் ஒரே தடவையில் மனதில் பதிந்து விடுவதில்லை. கற்றுக்கொள்ளும் ஆர்வம்,நம்முள் நம்மை பரிசிலிக்கும் போதுள்ள இவையே எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள தோன்றும். அதுவே நாளைய விளைவு.
ஒருவர் மன நிம்மதியை அடைய சில வழிகள்:
- தன் உணர்ச்சிகளை புரிந்துக் கொள்வது.
- தன் சூழலை முழுமையை பார்ப்பது.
- மாற்று வழிகள் வாழ்வில் உண்டா என்று தேடுவது.
- வாழ்வின் பாதையை முடிவெடுப்பது.
- திறமைகளை வளர்ப்பது.
-
ஒவ்வொரு கால கட்டத்திலும் விளைவுகளை பார்ப்பது.

"கனவு மெய்ப்படவேண்டும்,காரியமாவது விரைவில் வேண்டும்,தரணியிலே பெருமை வேண்டும்"என்று பாரதி கூறியது போல,நம்மை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். இதை எல்லாம் செய்தாலே நிம்மதி வரும்.

19 comments:

நட்புடன் ஜமால் said...

\\நம்மை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். இதை எல்லாம் செய்தாலே நிம்மதி வரும்\\

மிக அருமையா

தெளிவா சொல்லியிருக்கீங்க ...

நட்புடன் ஜமால் said...

சில நேரங்களில் நாம் விரும்புபவை,நேசிப்பவை கூட நமக்குத் தடையாக இருக்கலாம்.\\

இதுவும் நல்லாயிருக்கு

வியா (Viyaa) said...

நன்றி ஜமால்..
உண்மை தானே நம்மை நாம் அறிந்து தெரிந்துக் கொண்டால்
பிரச்சனையே இருக்காது...

புதியவன் said...

//வாழ்வில் தொடர்ந்து முன்னேற,நிறைவுகளையும் அடிக்கடி நினைவுக் கூற வேண்டும். //

இது முற்றிலும் உண்மை...குறைகளை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது...நல்ல கருத்துக்கள் வியா...

VIKNESHWARAN ADAKKALAM said...

வியா இதைத் தான் கண்ணதாசன் சொன்னார். உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்று.

//ஆனால்,அந்த முடிவே தவறாகக் கூடாது.//

அப்படி சொல்ல முடியாது. தவறுகள் தாம் மனிதனை ஆரம்பக் காலம் தொட்டு சீர்படுத்துகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா. நம் வினைகளை நாம் ஏற்று தான் ஆக வேண்டும்.

சித்திர முத்து அடிகளார் அடிக்கடி ஒரு விசயம் சொல்வார். அதாவது பேச்சை நிறுத்து மூச்சை கவனி என்பார். நமது வாழ்க்கை முறை மூச்சில் தான் அடங்கி இருக்கிறது. நமது ஒவ்வொரு மன நிலையிலும் நமது மூச்சு தன்மை மாறுபடும்.

நிம்மதி எனும் தலைப்பில் சிறப்பாக கொடுத்திருக்கிறீர்கள். மேலும் எழுதுங்கள்...

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்...
தங்கள் கூறுவது யாவும் உண்மையே

வியா (Viyaa) said...

நன்றி விக்கி..
உண்மைதான் தவறுகள் தான் மனிதனின் ஆரம்பக் காலம்.
அதில் இருந்தே நாம் பாடம் கற்றுக் கொள்ள முடியும்..
மீண்டும் எனது நன்றி..

மணிஜி said...

நன்மையே எல்லாம்....நடக்கும் என்றும் நினைப்பது முட்டாள்தனம்...நடந்தது எல்லாம் நன்மைக்கே என்று இருந்தால் புத்திசாலித்தனம்.. அதிகப் பிரசங்கி தண்டோரா

கீழை ராஸா said...

பெரியோர் எல்லாம் பெரியோர் அல்ல
சிறியோர் எல்லாம் சிறியோர் அல்ல...
இந்த வயதில் உங்கள் சிந்தனை...சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

நல்ல சிந்தனை. நியாமான கருத்துக்கள். நல்ல இருக்கு

வியா (Viyaa) said...

தண்டோரா நன்றி..
உண்மைதான் நன்மையே நடக்கும்
என்பது முட்டாள்தனம் தான்.. நடப்பது மட்டும் இல்லை,
நடக்க இருப்பதும் நன்மைக்கே..

வியா (Viyaa) said...

தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி..
நான் இன்னும் சிறியவள் தான்

வியா (Viyaa) said...

சயேத் நன்றி..
மீண்டும் மீண்டும் என்னை வாழ்த்துவதற்கு

Sanjai Gandhi said...

பின்நவீனத்துவம்? :)

அரட்டை அகிலன் said...

வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்ததும் நிம்மதி பெருமூச்சி விட்டு உங்கள் வலைப்பதிவை படித்ததில் எனக்கு பெரிய நிம்மதி கிடைத்தது...

வாழ்த்துக்கள் ...

அரட்டை அகிலன் ..

logu.. said...

Unga lines
eathayo unarthuthunga..
but ennanuthan theriyala.

mmmm..

uruthiyaga kidaikumena
therinthal..

vilaiyaga en uyirai
koduthenum vangividuven.

Nimmathi.

வியா (Viyaa) said...

சஞ்சய் தங்களின் வருகைக்கு நன்றி

வியா (Viyaa) said...

அகிலன்,முதலில் என்னது பொன்னான நன்றி..
வேலை முடிந்து என் பதிவை படித்து நிம்மதியாக இருக்கிறதா?
என்னகே பெருமையாக தான் உள்ளது..

வியா (Viyaa) said...

லோகு என்னுடைய பதிவு மனதில் தோன்றும் எண்ணங்களை நான் எழுதுகிறேன்..