Tuesday, March 17, 2009

என்றும் நினைவுடன்..


இரவில் என் கண்கள்
தூங்கினாலும்,
என் நினைவுகள் இன்னும்
தூங்கவில்லை...
உன்னை மட்டும் நினைக்கும்
இந்த இதயத்திற்கு உன்
நினைவுகள் துணையாகி
விட்டது..!

உன்னுள் இருப்பது
நான் என்று உனக்குத்
தெரியுமா?
கடலில் விழுந்த நட்சத்திரத்தை
தேடுவது போல தேடுகிறேன்
என் காதலை உன்னிடத்திலே..!

காத்திருந்து பழகியவள் நான்
உன்னக்காக காத்திருப்பேன்..
என்னை புரிந்துக் கொள்ள
இந்த உலகில் எவரும்
பிறக்கவில்லை..
என்னை எனக்கே
பிடிக்கவில்லை..காரணம்
இன்னும் தெரியவில்லை..

உன் நினைவுகள் நெஞ்சினில்
புதைந்ததினால் என் ஆயுள்
முடியும் வரை
தொடரும் நினைவுகள்..!

12 comments:

அ.மு.செய்யது said...

Me the first aa ?

அ.மு.செய்யது said...

//கடலில் விழுந்த நட்சத்திரத்தை
தேடுவது போல தேடுகிறேன்
என் காதலை உன்னிடத்திலே..!//

ரொம்ப புடிச்சிருக்கு இந்த‌ வ‌ரிக‌ள்...

S.A. நவாஸுதீன் said...

இரவில் என் கண்கள்
தூங்கினாலும்,
என் நினைவுகள் இன்னும்
தூங்கவில்லை...
உன்னை மட்டும் நினைக்கும்
இந்த இதயத்திற்கு உன்
நினைவுகள் துணையாகி
விட்டது..!

அருமை

S.A. நவாஸுதீன் said...

காத்திருந்து பழகியவள் நான்
உன்னக்காக காத்திருப்பேன்..

தேடுகிறேன்
என் காதலை உன்னிடத்திலே..!//


நினைவுகளை நெஞ்சினில் சுமந்து காத்திருப்பதும் காதலே

ஆளவந்தான் said...

//
தொடரும் நினைவுகள்..!
//
வலைதளத்தின் பெயரிலேயே முடித்திருப்பது அருமை :)

நட்புடன் ஜமால் said...

\\உன்னுள் இருப்பது
நான் என்று உனக்குத்
தெரியுமா?\\

தேடல் இங்கேயுமா

வியா (Viyaa) said...

செய்யுது நீங்கள் தான் முதலாவது..
கடலில் விழுந்த நட்சத்திரத்தை தேடவே முடியாது..
அதே போல் தான் என் காதலும்..

வியா (Viyaa) said...

நன்றி சயேத்..
இப்போது என் தனிமைக்கு துணையாக இருப்பது
பசுமையான நினைவுகள் மட்டும் தான்..
அதை தான் நான் இப்படி எழுதினேன்

வியா (Viyaa) said...

நன்றி ஆளவந்தான்..
எப்போதும் தொடரும் என் நினைவுகள்

வியா (Viyaa) said...

ஜமால் எங்கேயும் எப்போதும் தேடல் நிறைத்து தான் இந்த வாழ்க்கை..
ஆகையால் என் தேடல் என் ஆயுள் முடியும் வரை தொடரும்,..

புதியவன் said...

//கடலில் விழுந்த நட்சத்திரத்தை
தேடுவது போல தேடுகிறேன்
என் காதலை உன்னிடத்திலே..!//

ரொம்ப அழகான உவமை வியா...கவிதை மிக அழகு...

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்