Thursday, May 21, 2009

மனமே மனமே..!

அன்புள்ள டைரி,

ஏனோ தெரியவில்லை இன்று மனம் மிகவும் கஷ்டமாக உள்ளது. என் மன வேதனையை எழுத்துக்களால் சொல்ல இயலாது. நான் நேசித்த உறவுகள் யாவும் இன்று உடன் இல்லை. உடன் இருக்கும் உறவுகள் யாவும் நான் நேசிப்பவை அல்ல. மனதை கல்லாக வைத்துக் கொண்டு வாழ முடியவில்லை.

பிறப்பது பற்றியும் இறப்பது பற்றியும் கவலைப்படாமல் வாழ்கின்றவர்கள் பலருண்டு. ஏன் பிறந்தோம்? என்ற கேள்வியைக் கேளாத வரை,தொல்லை ஒன்றும் இல்லை. 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்று இருப்பவர்களை எவ்விதமான துன்பமும் சுலபத்தில் வந்து அடைவதில்லை. ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு நிலைமை? பிறந்து விட்ட நாம், ஏதோ இறப்பு வருகின்ற வரை இருந்துவிட்டு போகின்ற நாளில் போய்விடலாம் என்று வாழ்ந்தால் கவலை இல்லைதான். கவலை இல்லாமல் வாழலாம் என்பதற்காக,வாழ்வில் மேற்கொள்ள வேண்டியவற்றை விட்டு விட்டு வாழ முடியுமா?

உறவுகளின் இடையில் சந்தோசமாக வாழ ஆசை,அவர்களின் துணையோடு வாழ்கையில் வெற்றியடைய ஆசை, அன்னையின் மடியில் உறங்க வேண்டும், இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என இன்னும் நிறைய ஆசைகள் மனதினுள். என் ஆசைகள் எல்லாம் நிறைவேறாத ஆசைகளாக இன்னும் என்னுள் முழ்கி கிடக்கின்றன. என்றாவது என் ஆசைகள் நிறைவேறும் அன்று வரை காத்திருப்பேன்.

அன்புக்காக ஏங்கும்,
.....................................

இது 50% கற்பனையே..!

7 comments:

சுந்தர் said...

இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன்., உங்கள் கவிதைகளை படித்து விட்டு வியந்தேன். ரசித்தேன்., மகிழ்ந்தேன்.,

புதியவன் said...

டைரி கிட்ட சோகங்களை மட்டும் தான் சொல்லனுமா ...?

//என்றாவது என் ஆசைகள் நிறைவேறும் அன்று வரை காத்திருப்பேன்.//

விரைவில் உங்கள் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் வியா...

நட்புடன் ஜமால் said...

புதியவன் கருத்துகளோடு நானும் ஒத்துப்போறேன் ...

வால்பையன் said...

அப்ப 50% உண்மையா!

ஏனிந்த சோகம் அதான் கொட்டிடிங்கல்ல!
லூசுல விடுங்க!

வியா (Viyaa) said...

சுந்தர் தங்களின் வருகைக்கு நன்றி..
உங்களின் பக்கமும் அருமையோ அருமை..
நானும் மிகவும் ரசித்து படித்தேன்..

வியா (Viyaa) said...

புதியவன் மற்றும் ஜமால்.. நிங்கள் கேட்டதற்காக அடுத்த பதிவு என்னுடையது மகிழ்ச்சிகரமான சம்பவத்தை எழுதுகிறேன்..

வியா (Viyaa) said...

ஆமா வால்பையன்..இனிமேல் சந்தோசம் தான்