Saturday, May 23, 2009

அழகான நாட்கள்..!


அன்புள்ள டைரி,

எனது வாழ்வில் சோகமான நாட்களே அதிகம், அதில் பலவற்றை நான் மறக்க நினைக்கிறேன். ஆனால் சந்தோஷமான நாட்கள் மிகவும் குறைவு, அதனை நான் மரணம் வரும் நேரத்திலும் மறக்க நினைப்பதில்லை. அந்நேரத்தில் நான் கழித்த ஒவ்வொரு நிமிடமும் அர்த்தமானது. அந்த அர்த்தத்திலும் என் ஆனந்த கண்ணீர் சேர்ந்துள்ளது.

அப்படி நான் சந்தோசமாக கழித்த நாட்கள் என் பள்ளிக்கூட வாழ்க்கை. நட்பு என்னும் வட்டதிற்குள் நான் பட்டாம்பூச்சையை சிறகடித்து பறந்த அந்நாள் இன்று வரை நினைத்தாலே இனிக்கும் தருணம். நான் படித்த நாட்களில் எனக்கு நண்பர்களுக்கு மட்டும் குறைவே இல்லை. எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம் என்னை சுற்றி இருந்துக் கொண்டே தான் இருக்கும். இதற்காக அப்பாவிடம் கூட திட்டு வாங்கியதுண்டு (ரகசியம் யாரிடமும் சொல்ல வேண்டாம்). என் சேட்டைகளுக்கு அளவே இல்லை, இருந்தாலும் படிப்பிலும் கவனம் தவறியது இல்லை.

நாங்கள் போகாத இடமே இல்லை,பார்க்காத சினிமா படங்கள் இல்லை. எனக்கு 'சுட்டிப் பெண்' என்று புனைபெயர் வைத்து விட்டர்கள். எப்படி தான் ஆட்டம் போட்டாலும் தேர்வு நேரத்தில் நாங்கள் எல்லாம் ஒன்றாக படிக்கும் பொழுது அதில் கிடைக்கும் சந்தோசம் ஒரு தனி சந்தோசம் தான். அதே பள்ளிக்கூட நாட்கள் தான் எனக்கு பல அனுபவங்களையும் கற்றுக் கொடுத்து. நட்பை மட்டும் தரவில்லை.காதல்,படிப்பு,பிரிவு,துயரம்,சந்தோசம்,சண்டை என இன்னும் நிறைய அனுபவங்கள். கவிதை, கதை எழுதும் திறமை என்னுள் "இலைமறை காயாக" மறைத்து இருப்பதை கண்டு பிடித்தவர்களே என் நண்பர்கள் தான். எனக்குள் இப்படி ஒரு திறமை இருப்பதை அன்று தான் நானே உணர்ந்தேன்.அவர்களால் தான் நானும் இன்று கவிதை எழுதுகிறேன்.

பள்ளிக்கூட வாழ்கையை பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு அழகான நாட்கள். நான் மறக்க முடியாத நாட்கள்.
எங்கோ பிறந்தோம் நட்பு என்ற கூட்டுக்குள் இணைத்தோம். இன்று அனைவரும் எங்கோ ஒரு இடத்தில் இந்த நட்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த நட்பு எங்கே? மீண்டும் கிடைக்குமா அந்த பொற்க்காலம்.

நட்புடன்,
....................

இது 100% உண்மையே..

14 comments:

Anbu said...

super

வியா (Viyaa) said...

thanx anbu..

அ.மு.செய்யது said...

கடந்த கால வாழ்வில் மீண்டும் ஒருமுறை பயணிக்க வாய்ப்பு கிடைத்தால்
நிச்சயம் நாம் பள்ளி வாழ்க்கையை தான் தேர்ந்தெடுப்போம்.

உங்கள் பள்ளி வாழ்க்கை குறித்தான எண்ணங்களை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

வியா (Viyaa) said...

நன்றி அமு செய்யுது..
உண்மையாகவே இறந்த காலம் மீண்டும் வந்தால், என் பள்ளிகூட வாழ்கையை மிட்டுக் கொள்வேன்..பசுமையான காலம்

நட்புடன் ஜமால் said...

\\நட்பு என்னும் வட்டதிற்குள் நான் பட்டாம்பூச்சையை சிறகடித்து பறந்த அந்நாள் இன்று வரை நினைத்தாலே இனிக்கும் தருணம்\\

நல்லாயிருக்கு.

எனக்கும் மிகவும் பிடித்தது பள்ளிக்கூட வாழ்க்கை தான்

gayathri said...

பள்ளிக்கூட வாழ்கையை பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு அழகான நாட்கள். நான் மறக்க முடியாத நாட்கள்.


yaralaume marakka mudiyatha oru life da


ok viyaa naan ungala oru thodar pathivukku azaithu iruken vanthu parunga pa ok

வியா (Viyaa) said...

நன்றி ஜமால்..
இந்த பதிவில் சோகம் இல்லை..சந்தோசம் தான்

வியா (Viyaa) said...

நன்றி காயத்திரி அக்கா..ஒவ்வொருவரின் வாழ்கையிலும் மறக்க முடியாத அழகான காலம்..கண்டிப்பாக வந்து பார்க்கிறேன் அக்கா..!

sakthi said...

நட்பு என்னும் வட்டதிற்குள் நான் பட்டாம்பூச்சையை சிறகடித்து பறந்த அந்நாள் இன்று வரை நினைத்தாலே இனிக்கும் தருணம்.

for me too viya

nice post keep it up

புதியவன் said...

//நட்பு என்னும் வட்டதிற்குள் நான் பட்டாம்பூச்சையை சிறகடித்து பறந்த அந்நாள் இன்று வரை நினைத்தாலே இனிக்கும் தருணம்//


மகிழ்ச்சியால் நிரப்பப் பட்ட டைரியின் பக்கங்கள்...

பள்ளி நாட்களின் நினைவுகள் அழகு...

சுந்தர் said...

அடுத்த நிமிடம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் பல உண்டு வாழ்க்கையில்., உங்கள் வாழ்வில் இனி சந்தோசம் மட்டுமே உங்களை சந்திக்க வாழ்த்துகிறேன் தோழி.,

வியா (Viyaa) said...

சக்தி உண்மையாகவே அது தான் நிஜம்

வியா (Viyaa) said...

புதியவன் நன்றி..இந்த டைரி மகிழ்ச்சியை நிரப்பி உள்ளது..இதே போன்று மகிழ்ச்சியான நாட்கள் இன்னும் உண்டு..எழுதுகிறேன் விரைவில் உங்கள் பார்வைக்கு

வியா (Viyaa) said...

நன்றி சுந்தர்..
உங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றி..