Thursday, June 4, 2009
அன்பு தாயே..!
பத்து மாதம் என்னை
சுமந்து ஈன்றேடுதவள்..
முதல் முதலாக இந்த
மண்ணில் பிறந்து நான்
பார்த்த தேவதை நீ..
எத்தனை நாள் தவம்
கிடந்தேன் உன் முகம்
காண தாயே..!
உன்னால் நான் பிறந்தேன்
இந்த உலகத்தையும்
உன்னால் அறிந்தேன்..
கோடி தவம் நான்
செய்திருக்க வேண்டும்..
உன்னை போல ஒரு
தாயை பெற..!
உன் மடியில் தலை
வைத்து படுத்தல்,
துன்பம் வேகுதுரமாக
தெரியும்..என் கண்களில்
நீர் வழிந்தால் என்னுடன்
சேர்ந்து அவள் கண்களிலும்
கண்ணீர் சிந்தும்..
மீண்டும் ஜென்மம்
எடுத்தல் உனக்கு
நான் தாயாக பிறக்க
வேண்டும்..ஏன் தெரியுமா?
நீ எனக்கு தந்த பாசத்தை
இரண்டு மடங்கு அதிகம்
உனக்கு தர வேண்டும்
என் தாயே..! நீயே என்
கனவு தேவதை அம்மா..
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
தாயென்றாலே அன்பு தான்
உண்மைதான் ஜமால்..
அன்புக்கு மறு பெயர் தாய் தானே
\\உன் மடியில் தலை
வைத்து படுத்தல்,
துன்பம் வேகுதுரமாக
தெரியும்.\\
நெகிழ்ந்தேன் ...
திடீர் என்று தாயை நினைத்தேன்..
அருகாமையில் இல்லாததை நினைத்து வருந்தினேன்..
நீ எனக்கு தந்த பாசத்தை
இரண்டு மடங்கு அதிகம்
உனக்கு தர வேண்டும்
என் தாயே..! நீயே என்
கனவு தேவதை அம்மா..
அருமை வியா அருமை இவ்வரிகள்....
தவறாக எண்ண வேண்டாம்.. ஒரு சில எழுத்துப் பிழைகள் இருக்கின்றன.. திருத்திவிட்டால் இன்னும் சிறக்கும் உங்கள் தமிழ்! வாழ்க..
நன்றி சக்தி..
கண்டிப்பாக கிருஷ்ணா..
இதில் தவறாக எண்ண ஒன்றும் இல்லை.
நன்றி வியா.. நான் குற்றம் கண்டுபிடிக்கும் கவிஞன் அல்ல.. தமிழ்க் குறைகளை உரிமையோடு சொல்லும் தமிழன்.. தொடர்ந்து எழுதுங்கள்..!
//முதல் முதலாக இந்த
மண்ணில் பிறந்து நான்
பார்த்த தேவதை நீ..//
அழகான உண்மை வியா...
//மீண்டும் ஜென்மம்
எடுத்தல் உனக்கு
நான் தாயாக பிறக்க
வேண்டும்..//
மிகவும் நெகிழ்ந்தேன் இந்த வரிகளில்...
//மீண்டும் ஜென்மம்
எடுத்தல் உனக்கு
நான் தாயாக பிறக்க
வேண்டும்..ஏன் தெரியுமா?
நீ எனக்கு தந்த பாசத்தை
இரண்டு மடங்கு அதிகம்
உனக்கு தர வேண்டும்
என் தாயே..! நீயே என்
கனவு தேவதை அம்மா..//
இன்னொரு ஜென்மத்திற்கு காத்திருக்க வேண்டாம் வியா...இந்த ஜென்மத்திலேயே எந்த நிலையிலும் அவர் மனம் கோணாமல் பல மடங்கு பாசத்தைக்காட்டுங்கள்...
கோடி தவம் நான்
செய்திருக்க வேண்டும்..
உன்னை போல ஒரு
தாயை பெற//
நெகிழ்ந்தேன் இந்த வரிகளில்...
நன்றி கிருஷ்ணன்
கருத்துகளுக்கு நன்றி புதியவன்..
கீழை ராஸா உண்மையாகவே அடுத்த ஜென்மம் காத்திருக்க தேவையில்லை..
ஆனால் நான் காத்திருக்க தான் வேண்டும்..இந்த ஜென்மத்தில் நான் அவரை இழந்து விட்டேன்..
நன்றி இயற்கை..
எத்துனை மொழி கொண்டு அவள் புகழ் பாடினாலும் வார்த்தைகளுக்கு பற்றாக்குறைதான்.
தாயின் பெருமை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை நவாஸ்..
சொல்லி அடங்காது
Post a Comment