Monday, June 8, 2009

உன் பிரிவு..!


இன்று என் கண்களிலிருந்து
கண்ணீர் வழிகிறது
நீ ஏற்படுத்திய காயத்தினால்..
மனம் நிலவில்லாத
வானம்போல் இருண்டு
கிடக்கிறது..

மனதில் காதல்
கவிதையை எழுதிவிட்டு
கூடவே பிரிவெனும்
சோகக்கதையையும் எழுதி
சென்றாய்..

காலங்கள் மாறினாலும்
உன் மீது நான் கொண்ட
காதல் மாறாது..
என் முச்சினில் கலந்திருப்பது
உன் சுவாசம்தான்..

மனதோடு கலந்த
நினைவுகள் வாழ்ந்துக் கொண்டு
தான் இருக்கிறது இன்னும்
இறக்காமல்..

13 comments:

அ.மு.செய்யது said...

//மனதோடு கலந்த
நினைவுகள் வாழ்ந்துக் கொண்டு
தான் இருக்கிறது இன்னும்
இறக்காமல்.. //

இன்னும் உங்கள் சோகம் குறையவில்லையா ???

ஒரு மாறுதலுக்கு கொஞ்சம் சந்தோஷமாக ஏதாச்சும் எழுதுங்களேன்.

நட்புடன் ஜமால் said...

படம் அழச்செய்கிறதே!

நட்புடன் ஜமால் said...

மனம் நிலவில்லாத
வானம்போல் இருண்டு
கிடக்கிறது..\\

இருண்டிருப்பது வானம் அல்ல

பூமியின் ஒரு பகுதியில் இருட்டு தெரியும்

மறு பகுதியில் எங்கோ ஒளி வீசிக்கொண்டிருக்கும்.

சோகங்களை கலையுங்கள்

வாழ்வின் தருணங்கள் சோகங்களாகவே மட்டும் இருப்பதில்லை

எத்தனையோ சந்தோஷ கணங்களும் இருந்து இருக்கும்

நினைவளைகில் வயலின் வாசிப்பை நிறுத்திவிட்டு

சற்றே(னும்) சந்தோஷ மிருதங்கத்தை தட்டுங்கள்

வார்த்தைகள் கொட்டட்டும் ...

புதியவன் said...

//மனதில் காதல்
கவிதையை எழுதிவிட்டு
கூடவே பிரிவெனும்
சோகக்கதையையும் எழுதி
சென்றாய்..//

கவிதை நல்லா இருக்கு...
அடுத்த கவிதை சோகமில்லாமல்
எதிர் பார்க்கிறேன் ...

வியா (Viyaa) said...

அமு செய்யுது சோகங்களை மறக்க முயல்கிறேன்..
ஆனால் முடியவில்லை..

வியா (Viyaa) said...

ஜமால் உங்களுக்கு தெரியாமல் இல்லை..
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை..மனதில் அந்த காயங்கள் மாற சில நாட்கள் எடுக்கும்..முடித்த வரை என்னை நானே மாற்றிக் கொள்ள முயல்கிறேன்..காத்திருங்கள்

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்
அடுத்த கவிதையில் உங்கள் எதிர்பர்புகளை நிறைவேற்றுகிறேன்

gayathri said...

மனதில் காதல்
கவிதையை எழுதிவிட்டு
கூடவே பிரிவெனும்
சோகக்கதையையும் எழுதி
சென்றாய்
ada ippothaiya kathal ellam appadi than da

gayathri said...

காலங்கள் மாறினாலும்
உன் மீது நான் கொண்ட
காதல் மாறாது..
என் முச்சினில் கலந்திருப்பது
உன் சுவாசம்தான்..

super da

வியா (Viyaa) said...

இப்பொழுது உள்ள பல காதல் இப்படி இருந்தாலும் சில புனிதமான காதல் இன்னும் இருக்கவே செய்கிறது அக்கா..

வியா (Viyaa) said...

நன்றி காயத்திரி அக்கா.. :)

த.அகிலன் said...

அடடா....

Anonymous said...

இதயத்தை இறுக்கிவிடுகிறது...
இக்கவிதை வரிகள்....!