Monday, June 15, 2009

பெண்..!


குழந்தையை சுமப்பவள்
ரத்ததை பாலாக தருபவள்
பெண்..!
ஏட்டிலும் எழுத்திலும்
உயர்ந்து நிற்பவள்..

பெண்களே..
தாயென்றும் தெய்வமென்றும்
சொல்வார்..!
பூமியில் மனிதனை
உருவகியவள் பெண்..

சோகங்களை
மறைத்து வெளியில்
போலி வேஷம்
போடுபவள்..இன்பத்துக்கும்
துன்பத்துக்கும் நடுவே
வாழ்க்கையுடன் தினம்
போராடுபவள்..!

உலகில் விலை
மதிக்க முடியாத
செல்வம் பெண்..
பெண்ணின் பொறுமை
இந்த மண்ணுக்கு
பெருமை..!

13 comments:

ஜானி வாக்கர் said...

//பெண்ணின் பொறுமை
இந்த மண்ணுக்கு
பெருமை..! //

சத்தியமான வரிகள் !!

வாழ்த்துக்கள்

ஊர்சுற்றி said...

கவிதை வரிகள் அருமை...

ஆனால் பொறுமை ஆண்களுக்கும் உண்டுதானே?!

புதியவன் said...

//பெண்ணின் பொறுமை
இந்த மண்ணுக்கு
பெருமை..!//

கவிதை நல்லா இருக்கு வியா...

நட்புடன் ஜமால் said...

பெண்ணின் பொறுமை
இந்த மண்ணுக்கு
பெருமை..!\\

உண்மை தான் ...

வியா (Viyaa) said...

சின்னக்கவுண்டர் நன்றி..

வியா (Viyaa) said...

ஊர்சுற்றி நன்றி..
ஆண்களுக்கும் பொறுமை உண்டு,அதை நான் மறுக்க விரும்பவில்லை ஆனால் பெண்களுக்கு பொறுமை மிகவும் அதிகம்.

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்..

வியா (Viyaa) said...

ஜமால் நான் எப்பொழுதும் உண்மையை தான் சொல்லுவேன்.. :)

sivanes said...

//ஏட்டிலும் எழுத்திலும்
உயர்ந்து நிற்பவள்//

சிறப்பான கவிதை வியா, மேற்கூறிய வரிகளே உங்களுக்கு வாழ்த்தாய்...

வியா (Viyaa) said...

நன்றி சிவனேசு..
உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

Anbu said...

சிறப்பான கவிதை வியா

gayathri said...

உலகில் விலை
மதிக்க முடியாத
செல்வம் பெண்..
பெண்ணின் பொறுமை
இந்த மண்ணுக்கு
பெருமை..!

nalla iurku da

Nanthu said...

வியா,

உங்கள் கவிதைகள் அனைத்தும் மிக அருமை. ஆனால் சில இடங்களில் சினிமா பாடல வரிகள் நினைவுக்கு வருகின்றன.

அனால் உங்கள் கவிதையின் மற்ற வரிகள் அதை மறக்கடிகின்றன.

நன்றி. வாழ்த்துக்கள் வியா.