Thursday, March 5, 2009

ஆயிரம் எண்ணங்கள் 1


இறுக்கமான கட்டத்தில் ( மனம் கவலையான நேரத்தில்)

"மனசு ரொம்ப கனமா இருக்கு, என்ன செய்யுறதுன்னு தெரியலே" என்ற வார்த்தைகளையே நாம் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த உணர்வு நாம் எல்லோரும் எதோ ஒரு கட்டத்தில் அனுபவித்திருக்க கூடியது தான். வாழ்க்கையில் இறுக்கமான கட்டங்கள் (மன வேதனையான) ஏற்படும்.

சிலருக்கு எவ்வளவு சிரமமான சிக்கலும் இறுக்கம் தராது. ஒருவரது வாழ்வில் இறுக்கமான பாதிப்புகளையும் மனநோயையும் அடைய அதிகம் வாய்ப்புள்ளது. அந்த பட்டியலில் திருமணம்,தொழில்,காதல்,உறவுகள்,நிகழ்வுகள்,இழப்பு போன்ற சோகமான கட்டங்களும் உண்டு. பலர் சோகமான மோசமான நிகழ்வுகளே வாழ்வில் இறுக்கம் என்று கருதுகிறார்கள். மகிழ்ச்சிகரமான விஷயங்கள் கூட இறுக்கத்தை ஏற்படுத்தும்.

இறுக்கம் வாழ்வில் இன்றியமையாத அங்கமாகி விட்டது. "வெளியே சொல்லவும் மொழியில்லை.வேதனை திறவும் வழியில்லை" என்ற அழுவதே ஆறுதல் தரும். "அழுதுவிடு" என்று சொல்வது அவமானம் படுத்துவதாக ஆகாது. குமறி குமறி உணர்ச்சிகளை அடக்கி உள்ளே வெடிப்பதை விட,பாதி சோகத்தையாவது கண் வழியே இறக்கி வைப்பது நல்லது. அழுது முடிந்ததும் ஏற்படும் அமைதியை நாம் எல்லோரும் அனுபவித்திருப்போம். இந்த அமைதி மனதின் பாரம் குறைதத்தினால் வரும் பாதி நிம்மதி. "இவ்வளவு வயசாச்சு இன்னும் அழுரிய" என்ற கேலிக்கு பயப்படுபவர்கள், தனியாகவும் அழலாம். இதை தவிர,சிரிக்க தெரிந்தவனுக்கு பாதி விஷயங்கள் சிக்கலாக தெரியாது.

இறுக்கம் என்பது வாழ்க்கையின் அங்கம். நாம் இப்படித்தான் இயங்குகிறோம் என்பதை உணர்ந்து கொண்டால் எப்படி இயங்கினாலும் சிறப்பை இருக்கும். சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கை அழகா அமையும்.

15 comments:

நட்புடன் ஜமால் said...

ஏன் அழுகை ...

நட்புடன் ஜமால் said...

\\மகிழ்ச்சிகரமான விஷயங்கள் கூட இறுக்கத்தை ஏற்படுத்தும்.
\\

மிகச்சரியே ...

அ.மு.செய்யது said...

//இறுக்கம் என்பது வாழ்க்கையின் அங்கம்//

சுறுக்கமாக சொல்லி விட்டீர்கள்...

யதார்த்தம் வியா..

அ.மு.செய்யது said...

//ஒருவரது வாழ்வில் இறுக்கமான பாதிப்புகளையும் மனநோயையும் அடைய அதிகம் வாய்ப்புள்ளது. //

உண்மை தாங்க...

சொல்லொணா துயரங்களும் இறுக்கமான நினைவுகளையும் புதைத்து வைக்கும் போது
அது ஒரு வித மனநோயைத் தான் ஏற்படுத்தும்.

நட்புடன் ஜமால் said...

\\அழுவதே ஆறுதல் தரும்\\

இது ரொம்ப சரி ...

அ.மு.செய்யது said...

//இழப்பு போன்ற சோகமான கட்டங்களும் உண்டு. பலர் சோகமான மோசமான நிகழ்வுகளே வாழ்வில் இறுக்கம் என்று கருதுகிறார்கள். மகிழ்ச்சிகரமான விஷயங்கள் கூட இறுக்கத்தை ஏற்படுத்தும்.
//

//மகிழ்ச்சிகரமான விஷயங்கள் கூட இறுக்கத்தை ஏற்படுத்தும்.
//

ஓஹ்...புதிய கருத்து....

சில நேரங்களில் எதிர்பாராத சந்தோஷங்கள்...அல்லது அதிகம் எதிர்ப்பார்ப்பவைகள்..

எல்லாம் திடீரென நடந்தேறும் போது ஏற்படும் ஷாக் டீரிட்மெண்ட் தானோ இறுக்கம் ???

வியா (Viyaa) said...

வருகைக்கு நன்றி ஜமால்..

வியா (Viyaa) said...

அ.மு செய்யுது நன்றி தங்களின் கருத்துக்கு..

நட்புடன் ஜமால் said...

\\இறுக்கம் என்பது வாழ்க்கையின் அங்கம். நாம் இப்படித்தான் இயங்குகிறோம் என்பதை உணர்ந்து கொண்டால் எப்படி இயங்கினாலும் சிறப்பா இருக்கும். சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கை அழகா அமையும்.\\

மிக அருமை.

VIKNESHWARAN ADAKKALAM said...

:) நல்லா இருக்குங்க...

குடந்தை அன்புமணி said...

சோகங்கள்தீர அழுதுவிட்டாள், அடுத்த வேளையைப் பார்கலாம். மனம் நிம்மதியாகிவிடும். உண்மைதான். சோகமான தருணங்களில் தனிமையை தவிர்பது ரொம்ப நல்லது.( நம்ம கடைப்பக்கம் வாங்க!)

வியா (Viyaa) said...

விக்கி நன்றி

வியா (Viyaa) said...

அன்புமணி நன்றி
கடைப்பக்கமா..? எங்கு?

புதியவன் said...

//"அழுதுவிடு" என்று சொல்வது அவமானம் படுத்துவதாக ஆகாது. குமறி குமறி உணர்ச்சிகளை அடக்கி உள்ளே வெடிப்பதை விட,பாதி சோகத்தையாவது கண் வழியே இறக்கி வைப்பது நல்லது. //

யதார்த்தமான உண்மை வியா...

Anonymous said...

நல்லா இருக்குங்க...