Monday, March 23, 2009

ஆயிரம் எண்ணங்கள் 10

உன்னை அறிந்தால்

நாம் எல்லோருமே விடைகள் தேடுகிறோம்: நாமே புதிர்கள் என்பதை மறந்து. நாம் யார்,நம் புதிர் என்ன,நாமே விடைகளா , நமக்கென்று சில விடைகளா என்ற தேடல்தான் வாழ்க்கை. சில வேளைகளில் 'வாழ்க்கை ஒரு தேடல்' என்பது மனதில் முழுதாய் பதிவதில்லை.

"மாபெரும் சபைகளில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்பது உந்துதல். அதை புரிந்துக் கொண்டவுடன்,நம் காரியங்கள் இலக்கு நோக்கி இருக்கிறதா, நம் நேரம் நம் லட்சியத்திற்கு முழுமையாகச் செலவிடப்படுகிறதா என்பதை தெளிவாக நாம் உணர முடியும். வாழ்வின் இலக்குகள் எப்போதுமே பெரிய விசயங்களாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சாதாரண விசயங்களாக கூட இருக்கலாம். சில நேரங்களில் சுலபமான வெற்றிகள் ஒரு பெரிய சாதனைக்குத் தடையாக அமைவதும் உண்டு.

வாழ்வில் வெற்றிகளையும் சாதனைகளையும் அடைய முதலில் நம்மை நம் அறிந்துக் கொள்ள வேண்டும். சாதனையை அடைய நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத் தெரியாதவனால் நிச்சயம் பிறருடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. இப்படித்தான் மனித மனம் இயங்கும் என்பதால் இன்று ஆசைப்படும் சாதரண விஷயங்களுக்கு வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. நாளை என்ன சாதிக்க நினைக்கிறோம் என்பதை நிர்ணயித்துக் கொள்வதுதான் முக்கியம். எது தேவை என்று தீர்மானித்துக்கொண்டு ஒவ்வொரு செயலும் அதை நோக்கி இருந்தால்,படிப்படியாக அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகி மனம் தன்னை உணர்ந்து முழுதாகி மலரும் கட்டம் சாத்தியம்.

எந்த மனித வாழ்க்கையும் முழுதாக வெற்றிகளை மட்டுமே கண்டு வரமுடியாது. இடையில் தோல்விகள் ஏற்படுவது இயல்புதான். "கையருகில் இருப்பதுதான் கண்ணருகில் உடனே படும்". உலகத்தில் எதுவும் எட்டாத தூரத்தில் இல்லை. ஏமாற்றம் இல்லை. நாம் வாழ்கையைக் காதலிக்க கற்றுக்கொள்வோம்.

16 comments:

Anbu said...

நாம் எல்லோருமே விடைகள் தேடுகிறோம்: நாமே புதிர்கள் என்பதை மறந்து

நட்புடன் ஜமால் said...

சரியான விடயம்

உன்னையறிந்தால் நீ ...

Anbu said...

மிகவும் நன்றாக இருக்கிறது அக்கா

படித்ததில் பிடித்த வரிகள்:-
தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத் தெரியாதவனால் நிச்சயம் பிறருடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது

VIKNESHWARAN ADAKKALAM said...

தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி!
வெற்றிக்கு அதுவே ஏணிப்படி!

இந்தப் பாடல் வரிகள் எனக்கு மிக பிடிக்கும்... அழகான கட்டுரை வியா...

நட்புடன் ஜமால் said...

நாமே புதிர்கள் என்பதை மறந்து\\

என்பது உந்துதல். அதை புரிந்துகொண்ட\\

நல்லா சொல்லியிருக்கீங்க ...

வியா (Viyaa) said...

அன்பு என்னை பின் தொடருவதற்கு நன்றி..
உங்களுடைய படைப்புகளும் சுப்பர்

வியா (Viyaa) said...

விக்கி அந்த பாடல் எனக்கும் பிடிக்கும். அழகான வரிகளும் கூட..

வியா (Viyaa) said...

நாமே ஒரு புதிர் தானே.இன்னும் விடைக்கான கோடிகணக்கான கேள்விகள் நம்முள் உள்ளது ஜமால்..இது தான் வாழ்க்கை

S.A. நவாஸுதீன் said...

நாம் எல்லோருமே விடைகள் தேடுகிறோம்: நாமே புதிர்கள் என்பதை மறந்து

அருமை

S.A. நவாஸுதீன் said...

தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி!
வெற்றிக்கு அதுவே ஏணிப்படி!

தன்னுடைய தோல்வியில் கற்றுக்கொள்பவன் ஸ்மார்ட்

அதேபோல் பிறருடைய தோல்வியிலும் கற்றுக்கொபவன் புத்திசாலி

வியா (Viyaa) said...

சயேத் நன்றி..

"தன்னுடைய தோல்வியில் கற்றுக்கொள்பவன் ஸ்மார்ட்

அதேபோல் பிறருடைய தோல்வியிலும் கற்றுக்கொபவன் புத்திசாலி"
அருமை..

S.A. நவாஸுதீன் said...

வாழ்வின் இலக்குகள் எப்போதுமே பெரிய விசயங்களாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சாதாரண விசயங்களாக கூட இருக்கலாம்.

சரியாகச் சொன்னீர்கள். குளத்தில் விழும் மழைத்துளி யாவும் தெரிவதில்லை.

ஆனால் அதில் ஒரு துளி தாமரை இலையில் விழுந்தால்!

அதுபோலத்தான் சிரியதாயிலும் பெரியதாயிலும் இலக்கு அன்று ஒன்று வேண்டும்

அப்போதுதான் வாழ்க்கை மின்னும்

புதியவன் said...

//தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத் தெரியாதவனால் நிச்சயம் பிறருடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.//

அருமையான கருத்து வியா...உங்கள் எழுத்துக்கள் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது...

கருணாகார்த்திகேயன் said...

// நாம் வாழ்கையைக் காதலிக்க கற்றுக்கொள்வோம்.//
அருமையான வரிகள்

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

VASAVAN said...

அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

பரதன் said...

உங்கள் படைப்பினில் எனக்கு சில விடை கிடைத்தது...
நன்றி...