Saturday, March 28, 2009

ஆயிரம் எண்ணங்கள் 11

உணர்ச்சிகள்

வெளியே சாதாரணமாக நடமாடிக்கொண்டிருந்தாலும் உள்ளே மனதில் விதவிதமாய் எண்ணங்கள் உணர்ச்சிகளாக பொங்கிப் பிரவகிப்பதை நாம் எல்லோருமே உணர்ந்திருப்போம். வாழ்வும் வாழ்வதாலும் ஏற்படும் பலவிதமான மனநிலைகளை,வடிவங்களான இந்த உணர்ச்சிகளை நாம் அனுபவித்த அளவிற்கு அறிந்து கொள்வதில்லை. அடையாளம் காண்பதுமில்லை.

உணர்ச்சிகள் உயிருள்ளவரை உடனிருக்கும். இந்த உணர்ச்சிகள் நம் உணர்வின் அறிமுகத்துடன் பேச்சாகவோ,எழுத்தாகவோ,செயலாகவோ வெளிவரலாம். உணர்ச்சிகள் இல்லாமல் மனிதர் இயக்கம் இல்லை. நாம் எப்போது உணர்ச்சிகளின் தொடர்புகளை இழக்கிறோமோ அப்போதே மனிதத் தன்மையையும் இழக்கிறோம். உலகமெங்கும் உணர்ச்சிகள் பொதுவாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் உள்ளே உணர்ச்சிகள் விதவிதமாய் உருவாகின்றன. அச்சம்,கோபம்,ஆசை,சோகம்,மகிழ்ச்சி என்று பாதிப்புகளை நாம் உணர்ந்துக் கொள்கிறோம். சிலருக்கு அச்சமும் சோகமும் அதிகமானால் பல விதங்களில் அனுபவிக்க இயலும். மகிழ்ச்சியும் சிரிப்பும் அவர்களிடம் அவ்வளவாக இருக்காது. உணர்ச்சிகளை உருவாக்குவதில் வாழ்க்கை கட்டங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மனநிலையும் முக்கியம்.

எல்லா உணர்ச்சிகளையும் அனுபவித்து உணர்ந்து அவற்றை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தவனே வாழ்க்கையில் வெற்றியடைகிறான். சில தீவீரமான பாதிப்புகள் வாழ்வில் நிகழும்பொழுது உணர்ச்சிகள் தீவிரமாகவே தாக்குகின்றன. குற்ற உணர்வு போல மனதை பிழிந்து வாழ்க்கையை உருக்குலைக்கும் உணர்ச்சி எதுவும் இல்லை. குற்ற உணர்வை முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும். குற்ற உணர்வில் இருந்து விடுபடுவது மிகவும் அவசியம். இல்லை என்றால் வாழ்க்கையும் இந்த குற்றமெனும் உணர்வின் நிழலில் இருளில் கலந்துவிடும். இதிலிருந்து மீள எளிய வழிகள் மூன்று.

- குற்றத்தை ஒப்புக்கொள்வது: நம்மை பற்றி நம் நேர்மையைப் பற்றி நமக்குள்ளேயே ஒரு பெருவிதம் உருவாகும்.
- தவறினை சரி செய்ய முடிந்தவரை முயல்வது.
- மன்னிக்கப்படுதல் அவமானம் என்று கருதாமல்,நடந்ததை விட்டு நடப்பதில் கவனம் செலுத்துதல்.

உணர்ச்சிகள் இயல்பானவை என்பதால் அவை உருவாவதை நாம் தடுக்க முடியாது. நியாயமான உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டாலே வாழ்க்கை சுலபமாகிவிடும்.

11 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

எளிமையான விளக்கம். சிறப்பாக இருக்கிறது வியா...

வியா (Viyaa) said...

நன்றி விக்கி

S.A. நவாஸுதீன் said...

உணர்சிகளற்றவன், உபயோகமற்றவன் தனக்கும் பிறருக்கும். நல்லா பதிவு வியா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்று வியா!

நட்புடன் ஜமால் said...

அருமையான படம்ங்க.

வியா (Viyaa) said...

நன்றி சயேத்

நட்புடன் ஜமால் said...

\\எல்லா உணர்ச்சிகளையும் அனுபவித்து உணர்ந்து அவற்றை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தவனே வாழ்க்கையில் வெற்றியடைகிறான்\\

மிகச்சிறப்பு

நட்புடன் ஜமால் said...

\\- குற்றத்தை ஒப்புக்கொள்வது: நம்மை பற்றி நம் நேர்மையைப் பற்றி நமக்குள்ளேயே ஒரு பெருவிதம் உருவாகும்.
- தவறினை சரி செய்ய முடிந்தவரை முயல்வது.
- மன்னிக்கப்படுதல் அவமானம் என்று கருதாமல்,நடந்ததை விட்டு நடப்பதில் கவனம் செலுத்துதல்.\\

நல்ல புரிதல்

வியா (Viyaa) said...

நன்றி ஜமால்..உணர்ச்சிகள் என்பது எல்லோருக்கும் பொது..
அதை நமக்கு கட்டுப்படுத்த தெரிய வேண்டும்..அதன் பிறகு வெற்றி நம் கையில்

S.A. நவாஸுதீன் said...

உணர்சிகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததும், மிக சுலபமானதும் மௌனம்தான். இது மொழிகளிலெல்லாம் சிறந்த மொழி. எந்த மதத்தினரும் எந்த மொழியினரும் இறைவனிடம் பேசும் உன்னத மொழி.

புதியவன் said...

//மன்னிக்கப்படுதல் அவமானம் என்று கருதாமல்,நடந்ததை விட்டு நடப்பதில் கவனம் செலுத்துதல்.//

நல்ல கருத்து வியா...