Wednesday, March 11, 2009

ஆயிரம் எண்ணங்கள் 4

பொறாமை

பொறாமை பொதுவாக எல்லோருக்கும் தோன்றும். பொறாமை என்பது காதலைப் போன்றே அறிவுபூர்வமாய் அணுகப்படாத ஓர் உணர்ச்சி;இது உணரப்படும்;தெளிவாய் சொல்ல இயலாது. முழுமையாய் விளக்கப்படவும் இயலாது. பொறாமை என்பதை நாம் பல்வேறு வகையில் தெரிந்துகொள்கிறோம்.
மனவியல் ரீதியாக பரிசிலித்தால்,பொறாமை ஏன் வருகிறது? பொறாமை என்பது யாரையோ எதையோ எதிர்த்து உருவாகும் ஒரு உணர்வு. பிறகு சந்தேகம்,பயம் போன்றவற்றை பற்றிய சரியான கணிப்பு இல்லாமல் உருவாகும் ஒரு மனநிலை என்றும் விளக்குகிறது.

பேரசாயினால் கிடைக்காத ஒன்றின் மீது வரும் பொறாமையினால் பெருங்கோபம் வரும். பொறாமை வாழ்க்கை,நடைமுறை,செயல்கள் என அனைத்தையும் பாதிக்கும் ஒன்று. கொஞ்ச நேரம் மின்னலாய் தோன்றி மறையும். எல்லா உணர்வுகளை போல இயல்பாய் உருவாவது தான் பொறாமை என்பதால் எல்லா உணர்வுகளையும் போலவே இதன் அளவு குறித்தே விளைவுகள். பொறாமை அதிகமானால் விளைவுகள் மோசமதாக தான் இருக்கும்.

ஏன் பொறாமை படுகிறோம்? நம்மிடம் இல்லாத ஒன்று இன்னொருவரிடம் இருப்பதால? இதை முதல் கட்டமாக உணர்ந்து கொண்டால் அடுத்து நம்மிடம் ஏன் இல்லை என்று கேட்டு கொண்டால் விடை ஒரே ஒரு சிறிய விஷயமாகவும் அல்ல ஒரு பெரிய பட்டியலாகவும் இருக்கலாம். பொறாமை என்ற உணர்வினைக்கூட நம் மனமும் அறிவும் அமைதியாய் அணுகினால் மனம் நலம் பெரும். ஆனால் பொறாமையினால் விளைவாய் பழிவாங்குதல்,திட்டமிட்டது அழித்தல் என்ற காரியங்களில் இறங்கினால் விளைவுகள் வாழ்க்கையே அழிக்க கூடும்.

பொறாமை என்பது நாம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தடை போடும் ஓர் உணர்வு. நம் வருங்காலத்தை புன்னகையால் அலங்கரிப்போம்!

16 comments:

S.A. நவாஸுதீன் said...

பொறாமை பத்தி இவ்ளோ எழுதி இருக்கீங்க. அருமைங்க. எனக்கு
உங்கள பார்த்த பொறாமையா இருக்கு

VIKNESHWARAN ADAKKALAM said...

//புன்னகையால் அலங்கரிப்போம்!//

மனுச பயலுக பொன்னகையை தேடும் தீவிரத்தில் புன்னகையை மறந்து போய்டுறாங்க...

இந்த பொறாமை கோபம் எல்லாத்துக்கும் மொத்தமாய் ஒரு காரணத்தை சுலபமா சொல்லிடலாங்க... அது தான் இயலாமை... இந்த இயலாமையின் பிடியில் சிக்கும் மனிதனுக்குத் தான் இவ்வளோ கஷ்டங்களும்.

இந்தத் தருணத்தில் நான் நிம்மதியா இருக்கேனு ஒருத்தரும் நினைக்கிறதில்ல. நாளைக்கு இது செய்யனுமே என நாளைய சிந்தனையில் இப்போதைய இனிமையை இழந்து வருகிறோம்.

புதியவன் said...

என்ன வியா...உளவியல் தொடர்பான பதிவ தொடர்கிறது உளவியல் வகுப்பிற்கு ஏதும் போறீங்களா...?

//பொறாமை என்பது நாம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தடை போடும் ஓர் உணர்வு. நம் வருங்காலத்தை புன்னகையால் அலங்கரிப்போம்!//

உண்மையான வரிகள்...தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் said...

\\பொறாமை என்பது யாரையோ எதையோ எதிர்த்து உருவாகும் ஒரு உணர்வு\\

மிக அழகா! ...

நட்புடன் ஜமால் said...

பேரசாயினால் கிடைக்காத ஒன்றின் மீது வரும் பொறாமையினால் பெருங்கோபம் வரும்\\

புதியவன் கேட்ட கேள்விய நானும் கேட்டுக்கிறேன்

நீங்க உளவியல் ஏதும் படிக்கிறியளா!

வியா (Viyaa) said...

சயேத் நன்றி..
ஆனால் என்னை பார்த்தால் உங்களுக்கு ஏன் என்னை
பார்த்தால் பொறாமையாக உள்ளது? நான் உங்களை விட இளையவள்..
உண்மையில் நான் தான் உங்களை கண்டு பொறாமை கொள்ள வேண்டும்..

வியா (Viyaa) said...

விகி நன்றி உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும்..
நிங்கள் கூறியது அனைத்தும் உண்மையே..
நாளை பொழுதை எண்ணியே பலர் இன்றைய இன்பத்தை இழக்கிறார்கள்..

வியா (Viyaa) said...

வணக்கம் புதியவன்
ரொம்ப நாளாக காணவில்லையே!
தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

S.A. நவாஸுதீன் said...

தன்னுடைய தாய் நினைப்பது போல் தான் அழகாகவும்
தன் பிள்ளைகள் நினைப்பது போல பணக்காரனாகவும்
தன் மனைவி நினைப்பது போல நிறைய பெண் தோழிகளும்
இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கும் மனிதனின் ஆசை பேராசயாகும்போது தான் இத்தனையும் கொண்ட அடுத்தவனைக் கண்டு பொறாமை வரும்.

S.A. நவாஸுதீன் said...

வியா (Viyaa) said...

சயேத் நன்றி..
ஆனால் என்னை பார்த்தால் உங்களுக்கு ஏன் என்னை
பார்த்தால் பொறாமையாக உள்ளது? நான் உங்களை விட இளையவள்..
உண்மையில் நான் தான் உங்களை கண்டு பொறாமை கொள்ள வேண்டும்..

சின்னவங்களா இருந்தாலும் பெரிய விஷயம் சொன்னத பார்த்துதான். இது அன்பால்

வியா (Viyaa) said...

ஜமால் உளவியல் எதுவும் நான் படிக்கவில்லை
இவையாவும் அனுபவங்களே ! நன்றி

வியா (Viyaa) said...

சயேத் அன்பினால..உங்களின் அன்பிற்கு நான் அடிமை..
வியா அன்பிற்கு மட்டுமே கட்டுபடுபவள்

S.A. நவாஸுதீன் said...

வியா (Viyaa) said...

பொறாமை என்பது நாம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தடை போடும் ஓர் உணர்வு. நம் வருங்காலத்தை புன்னகையால் அலங்கரிப்போம்!

நம்பிக்கையோடு........

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//பேரசாயினால் கிடைக்காத ஒன்றின் மீது வரும் பொறாமையினால் பெருங்கோபம் வரும். பொறாமை வாழ்க்கை,நடைமுறை,செயல்கள் என அனைத்தையும் பாதிக்கும் ஒன்று. கொஞ்ச நேரம் மின்னலாய் தோன்றி மறையும்.//

அன்பின் வியா!(உங்க பெயரே ஒரு கோழிக்குஞ்சு கத்துற மாதிரி இருக்கு)
பொறாமையைப் பற்றி பொறாமைப் படும் அளவுக்குச் சொல்லி இருக்கிறீர்கள்!
நன்று!
பேராசைதானே தாங்கள் சொல்ல வருவது!

அரட்டை அகிலன் said...

பொறாமையை பற்றி இவ்வளவு பொறுமையா எழுதி இருக்கீங்க... நீங்க கூறினது உண்மைதான் ..!!! இன்றைய காலகட்டத்தில் எல்லாருக்கும் பொறுமை இருக்குமுன்னு சொல்லமுடியாது ..... இத எழுத உங்களுக்கு எப்படி பொறுமை வந்துச்சி ..... வித்தியாசமான பதிவு ....!!!!

வாழ்த்துக்கள் ...
அரட்டை அகிலன் ..

அரட்டை அகிலன் said...

நான் இந்த வலைப்பதிவிற்கு புதியவன் ....!!! எனக்கு அதிக அனுபவம் கிடையாது ..தவறு இருப்பின் பொறுமை காத்தருளவும் ...

என்னோட வலைப்பதிவை முடிந்தால் எட்டி பாருங்க ....

அரட்டை அகிலன் ....