Wednesday, March 18, 2009

ஆயிரம் எண்ணங்கள் 8


உறவுகள்

உறவுகளின் வினோதமான கோணங்கள் பல சமயம் நமக்குச் சரியாக புரிவதில்லை. இளமையின் காதல் என்பது இயல்பானது. காதல் மட்டுமே உறவுகள் அல்ல.உறவு முறை எதுவானாலும் (பாசமோ,நட்போ,காதலோ,பெற்றோரோ), அதை அமைதியும் மகிழ்ச்சியும் தரும் வகையில் அமைத்துக் கொள்ளவது நம் கையில் இருக்கிறது.

எந்த மனித உறவும் உணர்வுகளின் அடிப்படையில் அமையப்படுவது தான். பாசம் என்பது இயற்கையாகவே வருவது. ஒரு நல்ல நண்பர்களிடமும் இருக்கலாம். பெற்றோரிடம் இல்லாமல் போகலாம். கருணை என்பது மனித குணம்;கஷ்டப்படும் யாரிடமும் தோன்றலாம். இது எல்லாம் உறவுகளிடமும் தோன்றலாம். கருணை,பாசம் இவையிரண்டும் எல்லோரிடத்திலும் இருக்கும். இது நமது உறவுகள் சரிவர அமைய அவசியம்.

உறவுகளில் நமக்கு அவசியம் தேவை புரிந்துணர்வு. ஒவ்வொரு மனிதரும் உணர்வுகளின்,உணர்ச்சிகளின் இயக்கத்தில் தினம் மாறுவது இயல்பு. எப்போதும் நமக்கு பிடித்த மாதிரி இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தல் அது சாத்தியமில்லை. நாம்கூட எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. எதிர்பார்ப்பு என்பது உறவின் இன்றியமையாத அங்கம்தான். இன்னொரு வகையான எதிர்பார்ப்பு நம் விரும்பியபடியே இன்னொருவரும் இருக்க வேண்டும் என்பதுதான். இதனாலையே உறவுகளுக்கிடையே இறுக்கம் உருவாகிறது.

எந்த உறவையும் அவசரப்பட்டு அதிகப்படியான எதிர்பார்ப்புகளோடு ஆரம்பித்துவிட்டால்,அமைதியாக சிந்தித்து செயல்ப்பட்டால் சந்தோசம் மிக எளிது.உணர்வுகள் உண்மைக்கு மிக மிகச் சொந்தம். உறவுகள் தெளிவாகவும்,உறுதியாகவும் இருந்தால் மனம் அமைதியானதாகவும் செயல் ஆற்றல் மிக்கதாகவும் வாழ்க்கை இனிமயனதாகவும் அமையும்.

12 comments:

நட்புடன் ஜமால் said...

\\உறவுகளில் நமக்கு அவசியம் தேவை புரிந்துணர்வு. ஒவ்வொரு மனிதரும் உணர்வுகளின்,உணர்ச்சிகளின் இயக்கத்தில் தினம் மாறுவது இயல்பு. எப்போதும் நமக்கு பிடித்த மாதிரி இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தல் அது சாத்தியமில்லை.\\

சிறப்பா சொன்னீங்க ...

gayathri said...

எந்த உறவையும் அவசரப்பட்டு அதிகப்படியான எதிர்பார்ப்புகளோடு ஆரம்பித்துவிட்டால்

avarkalai vettu perivathu kadinam

வியா (Viyaa) said...

உறவுகள் இல்லாதவர்களுக்கு தான் அதன் அருமையும் பெருமையும் தெரியும் ஜமால்..எதிர்ப்பார்ப்பு தான் ஒவ்வொரு உறவுகளின் முடிவுக்கு காரணம் !

வியா (Viyaa) said...

பிரிவு என்பது நிரதரம் இல்லை காயத்திரி..எதிர்பார்ப்பு எப்படி உறவுகள் முடிவதற்கு காரணமோ..அதே உறவுகள் இணைவதற்கு அன்பு காரணம்..அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு எந்த உறவுகளும் நிரந்தரம் தான்..

ஆளவந்தான் said...

ithai thaan "kutram paarkin sutram illai"nu solli irukkaanga..

Sorry currently i dont have Tamil font with me :(

புதியவன் said...

//உறவுகளில் நமக்கு அவசியம் தேவை புரிந்துணர்வு. ஒவ்வொரு மனிதரும் உணர்வுகளின்,உணர்ச்சிகளின் இயக்கத்தில் தினம் மாறுவது இயல்பு.//

இந்த எண்ணங்கள் அருமை...

S.A. நவாஸுதீன் said...

நல்ல விஷயங்கள் பரிமாறப்பட்டு இருக்கிறது. வியா, உங்களின் உணர்வுகளும், உங்களின் நல்ல குணங்களும் உங்களின் பதிவுகளில் பிரதிபலிக்கின்றன. அருமை

வியா (Viyaa) said...

நன்றி ஆளவந்தான்

வியா (Viyaa) said...

உறவுகள் இல்லாமல் மனிதனா புதியவன்..ஒவ்வொருவரின் வெற்றிகளுக்கும் ஏதோ ஒரு உறவுகள் தான் காரணம்

வியா (Viyaa) said...

சயேத் நன்றி..

Poornima Saravana kumar said...

உறவுகளைப் பற்றி தெளிவா சொல்லி இருக்கீங்க!

வியா (Viyaa) said...

NANDRI POORNIMA..
UNGGALUDAIYA PADAIPPUGALUM ARUMAI