பார்க்கப் பழக பலருடன் சந்தர்ப்பம் கிடைத்தாலும் சிலரே நமக்கு பிடிக்கிறது. சிலருடன் நட்பு,ஒருவருடன் காதல் என்பது மனம் செய்யும் தேர்வு. நட்பு என்பது எப்படி உருவாகிறது? முதன் முறை பார்த்துப் பேசினால் அறிமுகம். அடுத்த முறை பழக்கம். அடிக்கடி என்றானதும் அதில் ஒரு இணக்கம் தொனிக்கும். இணக்கம் காலப்போக்கில் நம்பிக்கையாய்,அன்பாய் பரிணாமிக்க அதுவே நட்பாகிறது. நட்பு என்பது இருவழி தொடர்பு.
நட்பு என்பது நம்பிக்கையின் அடிப்படையில் வளர்வது என்பதால் எதிர்பார்ப்பு என்பதும் நியாயமானதுதான். எதிர்பார்ப்பு என்பது புரிந்து கொள்ளக்கூடிய தன்மையுடன் இருந்தாலே நட்பு. "உடுக்கை இழந்தவன் கைபோலே அங்கே இடுக்கண்களைவதாம் நட்பு" உண்மைதான். நட்பு என்பது இயல்பாய்,காதல் போல மின்னல் போல அல்லாமல். படிப்படியாக வளரும் உறவு நிலை. நட்பு என்பது தேவை. நண்பர்கள் உள்ளவர்கள் சோகத்தில் துவண்டுவிடாமல், தோல்விகளால் உடைந்துவிடாமல் சமாளிக்க முடியும்.
கோபமானவனுடன் அல்ல; சோகமானவனிடம் பரிவுதான் வரும்,நட்பு அல்ல. அகந்தை உள்ளவனிடம் வெறுப்புதான் வரும். பின் யாருடன் நட்பு வரும்? அன்பைப் பேசி,பூன்னகைக்கும் (என்னைப் போல ) நபருடனே நமக்கு நட்பு உருவாகும் எண்ணம் தோன்றும். அதே போல் நாம் பேசுவதில் பழகுவதில் இனிமையையும் இயல்பையையும் காட்டினால் நண்பர்கள் அமைவது நிச்சயம். புன்னகையும் இனிய பேச்சுமே ஒரு வரவேற்பு தோரணம் போல,பலரையும் நம்மிடையே வரவழைக்கும். வந்தவர்களில் நிச்சயமாய் மனதுக்குப் பிடித்தவர்கள் இருப்பார்கள். நட்பு என்பது இயல்பாய் அடுத்து அமையும்.
நட்பு என்பது இருட்டில் நடக்க ஒரு விளக்கு போல ஒரு நம்பிக்கை, ஒரு தைரியம். நட்பு என்றது ஒவ்வொரு மானிடனின் வாழ்கையிலும் அவசியம் இருக்கும் ஒன்று. வாழ்வில் பல சந்தோசங்களை கொடுக்கும் அழகான உறவு நட்பு.
நட்புடன்,
வியா
18 comments:
நட்பு
அழகான பூ
இணக்கம் காலப்போக்கில் நம்பிக்கையாய்,அன்பாய் பரிணமிக்க அதுவே நட்பாகிறது. நட்பு என்பது இருவழி தொடர்பு.\\
நம்பிக்கை தான் மிக முக்கிய காரணம்
காதல் என்றாலும் நட்பு என்றாலும்
//நட்பு
அழகான பூ//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்....
\\நட்பு என்பது இருட்டில் நடக்க ஒரு விளக்கு போல ஒரு நம்பிக்கை, ஒரு தைரியம்.\\
அழகா சொன்னீங்க என்பதை விட
நட்பாய் சொன்னீர்கள் என்றால் பொருந்தும் இங்கே ...
வணக்கம் ஜமால்..
உண்மைதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்கையிலும் மறக்க முடியாத உறவு நட்பு.
அந்த நட்பு மேலும் தொடர நம்பிக்கையே வேண்டும்..
வாங்க விக்கி..
நட்பு என்பது ஒரு சிறந்த பூ..
அந்த பூவுக்கு தேவை சிரிப்பு
சிரிப்பே அதன் சிறப்பு என்கிறீர்கள்
சிறப்பு தான்.
\\பின் யாருடன் நட்பு வரும்? அன்பைப் பேசி,பூன்னகைக்கும் (என்னைப் போல ) நபருடனே நமக்கு நட்பு உருவாகும் எண்ணம் தோன்றும்\\
:) :) :)
உலகின் சொந்தங்களில் நமக்கு நாமே தேர்ந்து எடுக்கும் அனுமதி கிடைத்த ஒரு உறவு.
உண்மையான நட்பு தாய்ப்பாலை போன்றது, சுத்தமானது.
என்றும் வாடாத பூ... நட்பு பூ! ஆயிரம் எண்ணங்கள் எழுத எண்ணமா? வாழ்த்துகள்!
ஜமால் உண்மைதானே என்னைப் போல உள்ளவர்களிடம் நட்பு கொள்ள ஆசையாக தானே இருக்கும்.. : )
சயேத் நிங்கள் கூறுவது உண்மைதான்..நடப்பை மட்டும் தான் நம் தேர்ந்தெடுக்க முடியும்..
அன்புமணி எங்கே ரொம்ப நாளாக பார்க்க முடியவில்லை? ஆயிரம் எண்ணங்கள் எழுத எண்ணம் இல்லை..இனிமேல் வர வாய்ப்பு உண்டு போல..இவையாவும் நாம் மனதில் ஓடும் எண்ணங்கள்..
\\வியா (Viyaa) said...
ஜமால் உண்மைதானே என்னைப் போல உள்ளவர்களிடம் நட்பு கொள்ள ஆசையாக தானே இருக்கும்.. : )\\
அளவிலா ஆசை இருக்கும் தான்.
(அப்ளிக்கேஷன் மேட்டரு ...)
:)))
"நட்பு"டன்(கணக்கில் கொண்ட)ஜமால்
இந்த பதிவின் வாசம் அறிந்து வந்ததால் அதை பூ என்கிறார்...
"பூ வாசம் புறப்படும் பெண்ணே நீ நட்"பூ" வரைந்தால்"
பதிவு "நட்புக்கு மரியாதை" வாழ்த்துக்கள் வியா...
//நட்பு என்பது இருட்டில் நடக்க ஒரு விளக்கு போல ஒரு நம்பிக்கை, ஒரு தைரியம். நட்பு என்றது ஒவ்வொரு மானிடனின் வாழ்கையிலும் அவசியம் இருக்கும் ஒன்று.//
நட்புக்கு தெளிவான விளக்கம் வியா...இதிலிருந்து நட்புக்கு நீங்கள் எவ்வளவு மரியாதை கொடுக்கிறீர்கள் என்பது தெரிகிறது...வாழ்த்துக்கள் வியா...
நன்றி கீழை ராஸ..உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி
புதியவன் நன்றி..
Post a Comment