Thursday, March 19, 2009

கண்ணீர்

வானவில்லின் சோகத்தை
கடல் அறியுமா?
தனிமையில் நான் அறிந்தேன்
வானவில்லின் சோகத்தையும்
கண்ணீர் துளிகளையும்..

உன் ஒவ்வொரு கண்ணீர்
துளியும்,
பூக்களில் விழும் நீரைப்
போல இந்த
பூமியில் மடியுதடி...!

உன் கண்ணிருக்கு
யாரை நான் காரணம்
சொல்வது?
நீயும் நானும் ஒரு
கூட்டு பறவையடி
இந்த கடவுளின்
படைப்பிலே..!

20 comments:

நட்புடன் ஜமால் said...

\\வானவில்லின் சோகத்தையும்
கண்ணீர் துளிகளையும்..\\

அழகாதான் சொல்லி இருக்கீங்க

இந்த கம்பேரிஸன் படிச்ச ஞாபகம் இல்லை

நட்புடன் ஜமால் said...

\\நீயும் நானும் ஒரு
கூட்டு பறவையடி
இந்த கடவுளின்
படைப்பிலே..!\\

அழகான ஏற்பு ...

வியா (Viyaa) said...

வாங்கோ ஜமால்..
எனது கற்பனை ஆனால் இது தான் நிஜம்..
வானவில் ஏழு நிறங்கள் இருப்பது போல..
என் வாழ்வும் எல்லாம் நிறங்களும் கலந்த வாழ்வு

VIKNESHWARAN ADAKKALAM said...

நன்கு உள்ளது...

வியா (Viyaa) said...

நன்றி விக்கி

ஆளவந்தான் said...

//
நீயும் நானும் ஒரு
கூட்டு பறவையடி
//

அருமை :)

தொடரும் நினைவுகளை தொடர்ந்து படிக்க வைக்கிறீங்க :)

ஆளவந்தான் said...

//
தனிமையில் நான் அறிந்தேன்
//

ரொம்ப டேஞ்சரான மேட்டர் தனிமை.. அதை எப்டி கையாள்கிறோம் என்பதை பொருத்தது தான் நம் எதிர்காலம்

வியா (Viyaa) said...

ஆமாவா ஆளவந்தான்..
உங்களை போன்றவர்களின் உக்குவிப்பு தான் என்னை மேலும் மேலும் எழுத துண்டுகிறது..

வியா (Viyaa) said...

தொடரும் நினைவுகளுக்கு தொடர்ந்து வருகையை தந்து செல்வதற்கு நன்றி ஆளவந்தான்

புதியவன் said...

//உன் ஒவ்வொரு கண்ணீர்
துளியும்,
பூக்களில் விழும் நீரைப்
போல இந்த
பூமியில் மடியுதடி...!//

இது ரொம்ப வித்தியாசமான அழகான வரிகள்...

அ.மு.செய்யது said...

//உன் ஒவ்வொரு கண்ணீர்
துளியும்,
பூக்களில் விழும் நீரைப்
போல இந்த
பூமியில் மடியுதடி...!//

ரசித்தேன் இவ்வரிகளை..இழையோடும் சோகத்தையும் சேர்த்து..

அ.மு.செய்யது said...

ஆனா நீங்க ஏங்க எப்பவும் சோகமா எழுதறீங்க...

கமான்...ச்சீயர் அப்..வியா..

ஆளவந்தான் said...

//
அ.மு.செய்யது said...
ஆனா நீங்க ஏங்க எப்பவும் சோகமா எழுதறீங்க...
கமான்...ச்சீயர் அப்..வியா..
//
சுக ராகம் சோகம் தானே :)))

சோகமும் சுகந்தானுங்கோ :))))

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்..அந்த வரிகளை இன்னும் ஆராய்ந்தால் அர்த்தங்கள் நிறைய உண்டு...

வியா (Viyaa) said...

அமு செய்யுது இப்போதும் சோகம் இல்லை..ஆனால் சில சமயங்களில் மட்டுமே..
சில நேரங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து சோகம் வருவதுண்டு.. :)

வியா (Viyaa) said...

உண்மையை சொன்னிங்க ஆளவந்தான்..சோகமும் சுகம் தான் இந்த தொடரும் நினைவுகளில் ...

Unknown said...

//உன் ஒவ்வொரு கண்ணீர்
துளியும்,
பூக்களில் விழும் நீரைப்
போல இந்த
பூமியில் மடியுதடி...!//

அழகு :))

வியா (Viyaa) said...

நன்றி

S.A. நவாஸுதீன் said...

வானவில்லின் சோகத்தை
கடல் அறியுமா?
தனிமையில் நான் அறிந்தேன்
வானவில்லின் சோகத்தையும்
கண்ணீர் துளிகளையும்..

வானவில்லின் கண்ணீர் சிந்தியதால் தான் கடல் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நிறமாய் (தெரிகிறதோ) அழுகிறதோ

வியா (Viyaa) said...

சயேத் நன்றி..
வானவில்லின் கண்ணிற் சிந்தியதால் தான் கடல் அவ்வளவு அழகா இருக்கிறது..
இதை அந்த கடல் அறியுமா ?