Thursday, March 26, 2009

காதலை தேடி..!


காலம் மாறும் பொழுது
என் காதல் மறைவது
சாத்தியமே!
நான் இரசித்திட நிலா
தோன்றாமல் வானம்
இருட்டறையில்
கிடந்தாலும், உன்னை
என் மனம் மறக்காதடி..

ரோஜா மலரின்
மணம் எங்கும் காற்றில்
தவழ்ந்து கொண்டு
தான் இருக்கும்..
அதே போல் உன்
நினைவும் என்னுள்
என்றும் தொடர்ந்துக்
கொண்டே இருக்கும்..

பூக்கள் ஒரு முறை
தான் பூக்கும்
என் காதலும் ஒரு
முறை தான்..!
உயிர் காதலே
என் மனம் கடைசி
வரைக்கும் அலை பாய்ந்து
திரியும் உன் அன்புக்காக..!

29 comments:

நட்புடன் ஜமால் said...

\பூக்கள் ஒரு முறை
தான் பூக்கும்
என் காதலும் ஒரு
முறை தான்..!\\

சரிதான்

வேறு பூ பூத்தே தீரும்.

வியா (Viyaa) said...

பார்ப்போம் ஜமால்..
வேறு பூ பூக்குமா இல்லையா என்று..
ஆனால் என்னை பொருத்த வரையில் என் பூ ஒரு முறை தான் பூக்கும்

அனுபவம் said...

//என் மனம் கடைசி
வரைக்கும் அலை பாய்ந்து
திரியும் உன் அன்புக்காக..!//
மறுத்தாரை மறக்கா அன்பு??????

வியா (Viyaa) said...

அனுபவம்..வருக வருக

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

-:(
யாரிடம் கேட்பது...
நான்
உன்னைக் காதலிக்கிறேனா
இல்லை
ஞாபகிக்கிறேனா

தபூ சங்கருடையது!

புதியவன் said...

//நான் இரசித்திட நிலா
தோன்றாமல் வானம்
இருட்டறையில்
கிடந்தாலும், உன்னை
என் மனம் மறக்காதடி..//

இது தான் உண்மைக் காதலின் உண்மை நிலை...யதார்த்தமான கவிதை வியா...

குடந்தை அன்புமணி said...

உங்கள் எண்ணப்படி யாவும் நிறைவேற வாழ்த்துகள்!

குடந்தை அன்புமணி said...

கவிதைக்குரல் கேட்க வாருங்கள் தோழர்களே, தோழியரே!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//பூக்கள் ஒரு முறை
தான் பூக்கும்
என் காதலும் ஒரு
முறை தான்..!//

உங்கள் காதல்
வாழை

வியா (Viyaa) said...

ஜோதிபாரதி நன்றி..

வியா (Viyaa) said...

வாங்கோ புதியவன்..
உண்மையான நிலையை உணர்தவள் நான் தான்..
அதனால் தானே உண்மையை கவிதையை எழுதிருக்கிறேன்.. : )

வியா (Viyaa) said...

குடந்தை அன்புமணி தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி..

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

\பூக்கள் ஒரு முறை
தான் பூக்கும்
என் காதலும் ஒரு
முறை தான்..!\\

சரிதான்

வேறு பூ பூத்தே தீரும்.


விழுந்த காம்பில் பூக்குமா?

S.A. நவாஸுதீன் said...

மிகவும் மென்மையான மனம் படைத்தவர் நீங்கள் வியா. வார்த்தைகளில் தெரிகிறது

வியா (Viyaa) said...

சயேத் மென்மையான மனமா?
உண்மைதான்..ஜோதிடம் எதாவது தெரியுமா சயேத்..?
என் காதல் ஒரு முறை தான்..வேறு காதல் பூக்காது..
பூக்கவும் விட மாட்டேன்..

வியா (Viyaa) said...

சயேத் மறுமுறை காதல் பூப்பது சாத்தியமே..
ஆனால் அது சிலரின் வாழ்கையில் மட்டுமே..என் வாழ்வில் இல்லை..
என் முதல் காதலை என்றும் நெஞ்சம் மறக்காது

Anbu said...

மிகவும் நன்றாக இருக்கிறது அக்கா

Anbu said...

\\வியா (Viyaa) said...

சயேத் மறுமுறை காதல் பூப்பது சாத்தியமே..
ஆனால் அது சிலரின் வாழ்கையில் மட்டுமே..என் வாழ்வில் இல்லை..
என் முதல் காதலை என்றும் நெஞ்சம் மறக்காது\\\

என் இனம் அக்கா நீங்கள்

ஆளவந்தான் said...

//
பூக்கள் ஒரு முறை
தான் பூக்கும்
என் காதலும் ஒரு
முறை தான்..!
//
இது இடிக்குதே.. (தள்ளி உக்கார சொல்லாதீங்க :)))

ஆட்டோகிராஃப் பாத்ததில்ல நீங்க??? :)

ஆளவந்தான் said...

//
வேறு பூ பூத்தே தீரும்.
//
ரிப்பீட்டேய்... மனமிருந்தால் மார்க்கமுண்டு :)

அ.மு.செய்யது said...

//நான் இரசித்திட நிலா
தோன்றாமல் வானம்
இருட்டறையில்
கிடந்தாலும், உன்னை
என் மனம் மறக்காதடி..//

நல்ல கற்பனை வளம் வியா...

அ.மு.செய்யது said...

//ரோஜா மலரின்
மணம் எங்கும் காற்றில்
தவழ்ந்து கொண்டு
தான் இருக்கும்..
//

காற்று தவழ்ந்து வந்தால் அது தென்றல்.

கலங்கமற்ற அன்பு மலர்ந்தால் அது காதல்.

விஜய டி. ஆர்..

அழகான கவிதை வியா..தொடர்ந்து எழுதுங்கள்..

கீழை ராஸா said...

//பூக்கள் ஒரு முறை
தான் பூக்கும்
என் காதலும் ஒரு
முறை தான்..!//

காம்பை விட்டு பூ உதிர்ந்தால்
மீண்டுமது பூப்பதில்லை
காதலிலே தோல்வியென்றால் மீண்டும் அங்கே காதல் இல்லை...
ராஜேந்தர் எழுதிய பாடலை உங்கள் வரிகள் ஞாபகப்படுத்துகிறது...

//உயிர் காதலே
என் மனம் கடைசி
வரைக்கும் அலை பாய்ந்து
திரியும் உன் அன்புக்காக..!//

இது சம்மந்தமாக நான் எழுதிய ஒரு பதிவு...

http://sarukesi.blogspot.com/2009/03/blog-post_25.html

Divya said...

கவிதை அருமை வியா:))

வியா (Viyaa) said...

நன்றி அன்பு..என் இனமா? ஓகே வாங்க வாங்க

வியா (Viyaa) said...

ஆளவந்தான்,வேறு பூ பூக்கும் சிலருக்கு..அது எனக்கு இல்லை..
பொறுத்து இருந்து தான் பாருங்கள்..

வியா (Viyaa) said...

அமு செய்யுது நன்றி..
காற்று தவழ்ந்து வந்தால் அது தென்றல்.
கலங்கமற்ற அன்பு மலர்ந்தால் அது காதல்.
இது முற்றிலும் உண்மை.

வியா (Viyaa) said...

கீழை ராஸா உண்மையாக காதலே தோல்வி என்றால் அங்கு மறு காதல் பூப்பது மிகவும் கடினமே..உங்களின் படைப்பு அருமை..

வியா (Viyaa) said...

நன்றி திவ்யா..