Saturday, May 23, 2009

என்னை பற்றி..

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
~திவ்விய என்பது என் நிஜ பெயர். நண்பர்கள் எல்லாம் அதனை சுருக்கி வியா என்று வைத்து விட்டார்கள். எனக்கு மிகவும் பிடித்த வித்தியசமான பெயரும் கூட.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
~24/05/2009 நள்ளிரவு. விதியை நினைத்து அழுதேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
~நீரற்று ரொம்பவே பிடிக்கும். கையில் ஒரு காகிதமும் பேணவும் இருந்தால் போதும் எதையாவது எழுத ஆரம்பித்து விடுவேன்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
~சைவ உணவு ரொம்ப பிடிக்கும். சாம்பார், பாகற்காய் பொறியல்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
~ம்ம்ம்ம் நட்பு நான் மிகவும் மதிக்கும் உறவுகளில் ஒன்று. அதனால் உடனே வைத்துக் கொள்வேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
~இரண்டுமே பிடிக்கும்..இருந்தாலும் கடலில் குளிப்பதில் மனதில் ஒரு சந்தோசம்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
~உடை,அவரின் பேச்சு,கண்கள்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
~பிடித்த விஷயம்: எதை செய்தலும் சிந்தித்து செயல்படுவது மற்றும் எனது குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
~பிடிக்காத விஷயம்: கோபம் என்னிடம் எனக்கு பிடிக்காது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
~அன்பு வைப்பது தான்.
அன்பு வைத்தவர்களிடம் விரைவில் ஏமார்ந்து போவது. என்னை பற்றி இது நாள் வரை யோசித்ததில்லை.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
~என் நண்பர்கள்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
~சிவப்பு வர்ண டோப்ஸ்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
~'இரவா பகலா' என்ற பாடல்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
~கண்டிப்பாக எனக்கு பிடித்த நீல நிறம் மட்டுமே.

14. பிடித்த மணம் ?
~ரோஜா பூவின் மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
~விக்கி: அருமையான பயனுள்ள பதிவுகளை எழுதுவர். அவருடைய பதிவுகளை படிக்கவே ஆர்வமாக இருக்கும். வலைப்பதிவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் கூட.

~நட்புடன் ஜமால்: கவிதைகள் எல்லாம் அருமை. இவரின் பதிவுகளை மறவாமல் படித்துவிடுவேன். முதலில் அறிமுகமான நண்பர். அருமையான நண்பர் என்ற சொல்லலாம்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
~காயத்திரி அக்கா. அருமையாக கவிதை எழுதுவர். அதில் எப்படியாவது நிஜம் கொஞ்சம் கற்பனை கொஞ்சம் கலந்திருக்கும். எனக்கு பிடித்து அது தான்.

17. பிடித்த விளையாட்டு?
~காற்பந்து பார்க்க பிடிக்கும். பூப்பந்து அப்பாவுடன் சேர்ந்து விளையாடுவேன்.

18.கண்ணாடி அணிபவரா?
~இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
~நல்ல காதல் மற்றும் குடும்ப கதைகளை கொண்ட திரைப்படம் பார்க்க பிடிக்கும். வடிவேலு காமடி படம் என்றால் சொல்லவே தேவையில்லை. மூன்று நான்கு முறையாவது பார்த்து விடுவேன்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
~கடைசியாக பார்த்த படம்...அயன்.

21.பிடித்த பருவ காலம் எது?
~மழைக்காலம். மழையில் விளையாட ரொம்ப பிடிக்கும். கவலையாக இருக்கும் பொழுது மழையும் என்னுடன் சேர்ந்து அழுவதுப் போலவே இருக்கும்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
~இப்போ புத்தகம் படிப்பது குறைவாகவே உள்ளது. வேலைகள் அதிகம்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
~என்றாவது ஒரு முறை தான் பார்ப்பேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
~பிடித்த சத்தம்: என்னுடைய போன் சத்தம்.
~பிடிக்காத சத்தம்: வீட்டில் நான் இருக்கும் பொழுது தொலைக்காட்சியில் ஓடும் சிரியல் சத்தம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
~நிறைய இடங்களுக்கு சென்றுள்ளேன். குறிபிட்டு சொல்ல முடியாது.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
~தனித் திறமை என்றால் கவிதை எழுவது தான். அதை தவிர நன்றாக பாடுவேன்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
~இன்று வரை என்னை சுற்றி நடக்கும் சம்பவங்களில் பதி என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இப்படியே சொல்ல போனால் சொல்லிக் கொண்டே போகலாம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
~அன்பு. அன்புக்கு என்றுமே நான் அடிமை.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
~பிடித்த சுற்றுலா தலம் பினாங் மாநிலம். எத்தனை முறை போனாலும் மீண்டும் மீண்டும் போக மனம் ஏங்கும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
~ம்ம்ம் ஒரு அன்பான பண்பான பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஆசை. என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை புரிந்துக் கொள்ள வேண்டும்.

31.மனைவி/ கணவர் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
~திருமணம் ஆகவில்லை. இதை பற்றி கருத்து இல்லை. மன்னிக்கவும்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
~வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அதனால் உடன் இருக்கும் உறவுகளிடம் கொஞ்சமாவது பாசமாகவும் அன்புடனும் நடந்துக் கொள்வோம். அவர்கள் இல்லாத பொழுது வருந்துவதில் பயன் இல்லை. வாழ்க்கை பயணம் என்பது மிகவும் அழகான பூக்களால் நிரம்பிய பாதை. அதனை முட்க்களால் சேத படுத்த வேண்டாம்.

37 comments:

நட்புடன் ஜமால் said...

உங்களை பற்றி எழுதியாச்சா

என்னையும் மாட்டி உட்டாச்சா

நீங்க 3ஆவது நபர்

சீக்கிரம் எழுதிடனும் ...

நட்புடன் ஜமால் said...

2: விதியை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள் (அழுவதினால் ஆன பயனொன்றுமில்லை ...)

4: பாகற்காய் எனக்கும் ரொம்ப பிடிக்கும்

5: உங்களை பற்றி அழகாக சொல்கின்றது

9: மறந்துட்டு சொல்லி போட்டியள் போல

13: நாமளும் அதுதானுங்கோ

15: அடடா நம்மை பற்றியும் சொல்லி, அதுவும் இவ்வளவு உயர்வாக, மிக்க சந்தோஷமுங்கோ

26: பாடி பதிவில் ஏற்றுங்களேன்

28: அன்பு என்பது சாத்தான் அல்ல, கவலை வேண்டாம், அன்பு செலுத்திக்கொண்டேயிருங்கள் - எதிர்ப்பார்ப்பின்றி

30: நல்ல பதில்.

32: நல்ல கருத்து, இவ்வளவு சிறிய வயதில் நல்ல தெளிவு, இதனை வாழ்க்கையில் நீங்கள் இன்னும் இன்னும் கடைபிடியுங்கள் (உங்கள் தெளிவை சொன்னேன்)

sakthi said...

வாழ்க்கை பயணம் என்பது மிகவும் அழகான பூக்களால் நிரம்பிய பாதை. அதனை முட்க்களால் சேத படுத்த வேண்டாம்.

ரசித்தேன் வியா அனைத்து பதில்களும்
அருமை

அ.மு.செய்யது said...

//21.பிடித்த பருவ காலம் எது?
~மழைக்காலம். மழையில் விளையாட ரொம்ப பிடிக்கும். கவலையாக இருக்கும் பொழுது மழையும் என்னுடன் சேர்ந்து அழுவதுப் போலவே இருக்கும்.//

இந்த‌ உண‌ர்வுக‌ள் என‌க்கும் வ‌ருவ‌துண்டு.

//28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
~அன்பு. அன்புக்கு என்றுமே நான் அடிமை.//

க‌வ‌ன‌ம் தேவை.

//அன்பு வைத்தவர்களிடம் விரைவில் ஏமார்ந்து போவது. என்னை பற்றி இது நாள் வரை யோசித்ததில்லை.//

யாருன்னு சொல்லுங்க‌..அவ‌ரு வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிர்லாம்.

அ.மு.செய்யது said...

//காயத்திரி அக்கா. அருமையாக கவிதை எழுதுவர். அதில் எப்படியாவது நிஜம் கொஞ்சம் கற்பனை கொஞ்சம் கலந்திருக்கும். //

க‌தைய‌ல்ல‌ நிஜ‌ம் காய‌த்ரினு ஒரு பேர் வ‌ச்சிருவோமோ ??

கீழை ராஸா said...

நல்ல பதிவு...பிரபலமானவர்கள் பேட்டியை மட்டுமே படித்து வந்த என்னை போன்றோருக்கு இது ஒரு வித்தியாசப்பதிவு...

நட்புடன் சமால் ரெடியா...

சுந்தர் said...

பினாங் பத்தி ஒரு பதிவு போடுங்க

குடந்தை அன்புமணி said...

தங்களைப்பற்றி பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி! உங்கள் கவிதைகளின் மூலமாகவே தங்களை பற்றி தெரிந்து கொண்டிருந்தோம். இப்போது முழுமையாக தெரிந்து கொண்டோம். உங்களுக்கு பாட வருமா? சிறந்த பாடகியாக வர வாழ்த்துகள்!

புதியவன் said...

//வாழ்க்கை பயணம் என்பது மிகவும் அழகான பூக்களால் நிரம்பிய பாதை. அதனை முட்க்களால் சேத படுத்த வேண்டாம்.//

வாழ்க்கையைப் பற்றி சொல்லியிருப்பது அழகு...

S.A. நவாஸுதீன் said...

13. எனக்கு பிடித்த அதே நிறம்

14. ரோஜா எல்லோருக்கும் பிடிக்கும்.

15. இருவருக்கும் வாழ்த்துக்கள். விக்கியின் லிங்க் கொடுக்கவும் வியா. ஜமால், சீக்கிரம் வா மாப்ள

19. எப்போதும் சந்தோசமா சிரிச்சிகிட்டே இருங்க

30. நல்ல ஆசை

32. வாழ்க்கையை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க

வியா (Viyaa) said...

ஹஹஹ ஜமால் நல்ல ஒரு வாய்ப்பு..
விரைவில் உங்களை எழுதுங்கள்..நான் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

வியா (Viyaa) said...

தங்களின் வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் மீண்டும் நன்றி நட்புடன் ஜமால்..

வியா (Viyaa) said...

நன்றி சக்தி..
எப்பொழுது உங்களை பற்றி எழுத போகிறிர்கள்..
நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

வியா (Viyaa) said...

அமு செய்யுது, உங்களுக்கும் அது போன்று உணர்வு வருவதுண்டா..என்ன ஒரு ஒற்றுமை..
ஆட்டோவா..வேண்டாம் பேருந்து அனுப்பலாம்

வியா (Viyaa) said...

நிங்கள் சொல்வது நிஜம் அமு செய்யுது..வைத்துவிட்டால் போச்சு..காயத்திரி அக்கா ரெடி..

வியா (Viyaa) said...

கீழை ராஸா உங்களின் வருகைக்கு நன்றி..
ஜமால் அனைவரின் கேள்விக்கும் விரைவில் பதில் எழுதுவர்

வியா (Viyaa) said...

கண்டிப்பாக சுந்தர்..பினாங் மாநிலம் பற்றி ஒரு பதிவை விரைவில் போடுகிறேன்..

வியா (Viyaa) said...

கவிதை வழியாகவும் என்னை பற்றி புரிந்துக் கொண்டதிற்கு எனது நன்றி அன்புமணி. கொஞ்சம் பாட வரும்..பாடகியாகவா..?வாழ்த்துகளுக்கும் நன்றி

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்..உங்களை பற்றி எப்பொழுது சொல்ல போகிறிர்கள்..?

வியா (Viyaa) said...

நன்றி நவாஸ்..எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்க எனக்கும் ஆசை தான்..
முடிந்த அளவு முயற்சி செய்கிறேன்..
வாழ்க்கையை பற்றி எனக்கு உங்கள் அளவுக்கு தெரியாது..இன்னும் கற்றுக் கொள்ள நிறைய உண்டு..உண்மைதானே?

gayathri said...

hai da neeum naanum oru sila veshayathula onna irukom

mmmmmmm very gd sonna velaya oluga senji mudichita

unna pathi therkitathaluda santhosam da

gayathri said...

எனக்கு மிகவும் பிடித்த வித்தியசமான பெயரும் கூட.

mmmmmmmm enakum pudichi iruku da

gayathri said...

அ.மு.செய்யது said...
//காயத்திரி அக்கா. அருமையாக கவிதை எழுதுவர். அதில் எப்படியாவது நிஜம் கொஞ்சம் கற்பனை கொஞ்சம் கலந்திருக்கும். //

க‌தைய‌ல்ல‌ நிஜ‌ம் காய‌த்ரினு ஒரு பேர் வ‌ச்சிருவோமோ ??

enake erakanave rendu per iruku pa ithula 3 vathu oru name vakka poregala

gayathri said...

~24/05/2009 நள்ளிரவு. விதியை நினைத்து அழுதேன்.


:((((((((((((((((

வியா (Viyaa) said...

உண்மையாகவே அக்கா..சில விசயங்களில் ஒற்றுமை உண்டு..
கொடுத்த வேலையை செய்து முடித்து விட்டேன்..

வியா (Viyaa) said...

ஆமாவா காயத்திரி அக்கா..என் பெயர் என்றால் உங்களுக்கு பிடிக்குமா? நன்றி

வியா (Viyaa) said...

ஆமா காயத்திரி அக்கா..எப்படி சம்மதமா?

வியா (Viyaa) said...

விதியை நினைத்து அழுத நாட்களே அதிகம் அக்கா..என்ன செய்வது அழுது தான் மனதை ஆறுதல் படுத்த வேண்டும்..

Anbu said...

கலக்கல் பதில்கள் வியா

வியா (Viyaa) said...

nandri anbu..ungalathu kalakalana karuthugalukku..

gayathri said...

வியா (Viyaa) said...
ஆமா காயத்திரி அக்கா..எப்படி சம்மதமா?

ok da

வால்பையன் said...

சிம்பிளா இருந்தாலும் சிறப்பா இருக்கு!

வியா (Viyaa) said...

gayathiri akka..
appo enakkum ok..

வியா (Viyaa) said...

நன்றி வால்பையன்

sarathy said...

//வாழ்க்கை பயணம் என்பது மிகவும் அழகான பூக்களால் நிரம்பிய பாதை.//

உங்கள் தளத்திற்கு என் முதல்
வருகை.
நல்லா சொல்லியிருக்கீங்க..

ஆனால் ஏதோ ஒரு மெல்லிய
சோகம் இழையோடுகிறது சில
பதில்களில்...

வியா (Viyaa) said...

தங்களின் வருகைக்கு நன்றி சாரதி..
சோகங்கள்..கவலைகள் இல்லாமல் வாழ்க்கையா?

பனித்துளி சங்கர் said...

அனைத்தும் சிறப்பான பதில்கள் வாழ்த்துக்கள் தோழி !