Saturday, February 21, 2009

என்னவளே


என்னவளே இனியவளே
என் நெஞ்சுக்குள் புகுந்தவளே
கனிந்த உள்ளம் கொண்டவளே
கண் இமைபோல் என்னைகப்பவளே..

நேசத்தை தந்தவளே
என் உயிரில் கலந்தவளே
உனக்காக ஓர் உயில்
எழுதுகிறேன்..
அது காதலெனும் உணர்வோடு..

என்னவளே,
சொல்ல நினைத்த வார்த்தைகள்..
எனக்குள்ளே புதைத்து போனதால்
என் வலியும் எனக்கே உறவானது
என் காதலும் என்னிடமே
இறந்து போனது..

15 comments:

நட்புடன் ஜமால் said...

\\என்னவளே இனியவளே \\

என் அவளே
இனி அவளே

நட்புடன் ஜமால் said...

என்னவளே,
சொல்ல நினைத்த வார்த்தைகள்..
எனக்குள்ளே புதைத்து போனதால்
என் வலியும் எனக்கே உறவானது
என் காதலும் என்னிடமே
இறந்து போனது..\\

அற்புதமான உணர்வுகளை

அழகாய் வரிகளில் ...

புதியவன் said...

//என்னவளே,
சொல்ல நினைத்த வார்த்தைகள்..
எனக்குள்ளே புதைத்து போனதால்
என் வலியும் எனக்கே உறவானது
என் காதலும் என்னிடமே
இறந்து போனது..//

காதலின் வலியை சொன்ன விதம் அருமை...கவிதை நல்லா இருக்கு வியா...

வியா (Viyaa) said...

நன்றி ஜமால் அவர்களே..
என்னுடைய கவிதை வரியை ரசித்ததற்கும்
நன்றி..நன்றி

வியா (Viyaa) said...

புதியவன் உங்களுக்கும் நன்றி
என்னுடைய அனைத்து படைப்புக்கும்
தவறாமல் கருத்து சொன்னதிற்கு நன்றி..

VIKNESHWARAN ADAKKALAM said...

அசத்தலாக எழுதி இருக்கிங்க வியா... என்ன இப்போதெல்லாம் தொடர்பு கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்???

தேவன் மாயம் said...

என்னவளே இனியவளே
என் நெஞ்சுக்குள் புகுந்தவளே
கனிந்த உள்ளம் கொண்டவளே
கண் இமைபோல் என்னைகப்பவளே.//

அவள் இனியவள்தான்!

தேவன் மாயம் said...

என் காதலும் என்னிடமே
இறந்து போனது..//

சொல்லவந்த காதல் சோகமாய் முடிந்ததே!

வியா (Viyaa) said...

நன்றி விக்கி,இல்லை இப்பொழுது எல்லாம்
கொஞ்சம் பிஸி..நிங்க எனக்கு ஜிமெயில் வழி
தொடர்பு கொள்ளலாம்..

வியா (Viyaa) said...

தேவா அவள் என்றும் இனியவள் தான்..
இது போலவே எத்தனையோ காதல் சோகத்தில்
முடிந்து உள்ளது..

கார்க்கிபவா said...

காதல்.. ம்ம்.

//என் காதலும் என்னிடமே
இறந்து போன/

வலிக்கும் உண்மை

அ.மு.செய்யது said...

//என்னவளே,
சொல்ல நினைத்த வார்த்தைகள்..
எனக்குள்ளே புதைத்து போனதால்
என் வலியும் எனக்கே உறவானது
என் காதலும் என்னிடமே
இறந்து போனது.. //

அழகான வரிகள் வியா....வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

ஆனால் உங்கள் வலைதளத்தின் டெம்பிளேட் சற்றே இருட்டாக இருக்கிறது.

எளிதில் வார்த்தைக‌ளை க‌ண்டுண‌ர‌ முடிய‌வில்லை.


அது டெம்பிளேட்டின் குற்றமா இல்லை என்னுடைய மானிட்டரின் குற்றமா என்று என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை.

வியா (Viyaa) said...

கார்க்கி உண்மைதான் வலி..அதனை அனுபவிப்பதும்
ஒரு சுகம் தான்..நன்றி

வியா (Viyaa) said...

என் பிளாக்கர் இருட்டாக இருக்க..
முடிதளவு அதனை இன்னும் தெளிவாக செய்ய முயற்சி
செய்கிறேன்..உங்களது கருத்துக்கு நன்றி