Monday, March 9, 2009
ஆயிரம் எண்ணங்கள் 3
நம்பிக்கை என்னும் தெய்வம்
நாளை எப்படியும் விடியும் போது நாம் உயிருடன் இருப்போம் என்ற நினைப்பில் இன்று எத்தனை காரியங்களை ஒத்தி வைக்கிறோம்? வாழ்வு முழுக்க தினம் தினம் ஒவ்வொரு கணமும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் நடைபெறுகிறது. நம்பிக்கை என்பது வாழ்வில் வெற்றி பெற அவசியம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
முன்னேற நிச்சயமாய் முயற்சி தேவை. முயற்சிக்கு நம்பிக்கை தேவை. அது நம்மீதே முழுதாய் உருவாகும் வரை அந்த நம்பிக்கைக்கு ஒரு உருவம் தேவை. உலகளவில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரின் வெற்றிக்கு காரணமும் நம்பிக்கை தான். தங்கள் மீதும்,தங்கள் லட்சியங்கள்,செயல்கள் மீதும் வைத்திருந்த நம்பிக்கை தான் இந்த அளவிற்குத் தன்னம்பிக்கை வருவது எலோருக்கும் சாத்தியம். அதற்க்கு முதல் கட்டமாக மனதில் தெளிவு வேண்டும். கூடவே உறுதியும் வேண்டும். தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ள முதல் தேவை தன்னை உணர்தல் தான். குறைகளை,நிறைகளை,உணர்ச்சிகளை,ஆசைகளை முழுதாய் உணர்தல் தான். இது எளிதல்ல,ஆனால் முயன்றால் சாத்தியமே!
தன்னம்பிக்கை என்பது தோல்வியை ஏற்றுக் கொள்வதும்,தொடர்ந்து வெற்றியடைய முயல்வதுமே. சிலருக்கு தன்னம்பிக்கை இருந்து வெற்றிகளும் எளிதில் கிடைத்தால் ஆணவமாய் மாறிவிடுகிறது. தன்னம்பிக்கை என்பதின் அவசியம் எவ்வளவுதான் புரிந்தாலும் தோல்வியின் முன் மனம் உடைந்து விடுவது இயல்பு. தோல்வியை அளக்கவும் பயின்று கொள்ள வேண்டும். இது இயற்கை நியதி.
நம்பிக்கை தான் தெய்வம். தானாய் சிந்தித்து,துவண்டு படுக்காமல் இருந்தால் என்றும் வெற்றி நமது பக்கம் தான். முயற்சி திருவினையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
படம் மிக அழகு
படிச்சிட்டு வாறேன் ...
தெய்வம் என்பது நம்பிக்கை
\\தன்னம்பிக்கை என்பது தோல்வியை ஏற்றுக் கொள்வதும்,தொடர்ந்து வெற்றியடைய முயல்வதுமே\\
மொத்தமும் இதிலேயே அடங்கும்.
அருமையான பதிவு.
நம்பிக்கையுடன்.
Good Post
தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்கும் பதிவு
//தன்னம்பிக்கை என்பது தோல்வியை ஏற்றுக் கொள்வதும்,தொடர்ந்து வெற்றியடைய முயல்வதுமே//
சரியாக சொன்னீர்கள்
படிக்கும்போதே நம்பிக்கை வருது
வாழ்த்துக்கள்
வாழ்கையில் உண்மை, அமைதி, அன்பு ஆகிய மூன்று விளக்குகள் அணைந்தாலும் கூட நம்பிக்கை (Hope) என்ற நான்காவது மெழுகுவர்த்தி கொண்டு மற்ற மூன்றையும் ஒளியேற்ற முடியும். இதுதான் வாழ்க்கை என்பதை தெளிவாக பதித்துருக்கிறீர்கள்.
அருமை
நல்ல கருத்துகள் :)
அதீத அனுபவசாலி போல :)
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதை விளக்கும் நல்ல பதிவு. தொடர்க தங்கள் முயற்சிகள்.
நன்றி ஜமால்
தொடர்ந்து கருத்துக்கள் சொல்ல மறவா வேண்டாம்..
உங்களுடைய படைப்புகளும் அருமை!
நன்றி சிபி அவர்களே..
அபுஅக்ப்ஸர் உங்களுக்கும் எனது நன்றி
நவசுப்பேன் நிங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான்.
நம்பிக்கை இருந்தால் உலகத்தில் அனைத்தையும் அடையலாம்..
நன்றி ஆளவந்தான்..
அனுபவசாலி இல்லை..
இவை யாவும் நான் வாழ்கையில் கற்று கொண்ட பாடம்..
நன்றி அன்புமணி..
//
(Viyaa) said...
நன்றி ஆளவந்தான்..
அனுபவசாலி இல்லை..
இவை யாவும் நான் வாழ்கையில் கற்று கொண்ட பாடம்..
//
அதானே அனுபவம்..:)))
தொடர்ந்து எழுதுங்கள் :)
//தன்னம்பிக்கை என்பது தோல்வியை ஏற்றுக் கொள்வதும்,தொடர்ந்து வெற்றியடைய முயல்வதுமே.//
தன்னம்பிக்கை - நல்லதொரு விளக்கம்...
நன்றி புதியவன்..
Post a Comment