தென்றல் மோதி பூக்கள் விழுவதில்லை
அலைகள் மோதி பறை காயப்படுவதில்லை
பறவை மோதி வானம் நகர்வதில்லை
ஆனால்
உன் பிரிவு என்னை விழவைத்தது..
நீ தந்த காயங்களும்,
கோபத்தில் எறிந்த வார்த்தை
கூட என்னை கண் கலங்க
வைத்தது இல்லை..
உன் பிரிவு என்னை கொல்கிறது
அன்றே பிரியா வேண்டும் என்று
தெரிந்திருந்தால் அப்பொழுதே அழுதிருப்பேன்
மொத்தமாக..
பிரிந்தவுடன் தான் தெரிகிறது
உன்னுடன் சேர்ந்தே இருப்பதே
சுகம்!
அலைகள் மோதி பறை காயப்படுவதில்லை
பறவை மோதி வானம் நகர்வதில்லை
ஆனால்
உன் பிரிவு என்னை விழவைத்தது..
நீ தந்த காயங்களும்,
கோபத்தில் எறிந்த வார்த்தை
கூட என்னை கண் கலங்க
வைத்தது இல்லை..
உன் பிரிவு என்னை கொல்கிறது
அன்றே பிரியா வேண்டும் என்று
தெரிந்திருந்தால் அப்பொழுதே அழுதிருப்பேன்
மொத்தமாக..
பிரிந்தவுடன் தான் தெரிகிறது
உன்னுடன் சேர்ந்தே இருப்பதே
சுகம்!
1 comment:
பிரிவின் வேதனை வார்த்தைகளில்...
கற்பனையாய் இருக்கும் பட்சத்தில்
பிரிவும் சுகமே...
அருமையான கவிதை...
Post a Comment