Saturday, January 17, 2009

நிலா


இரவு நேரமானால்
உன்
வருகைக்காக மிகவும்
ஆவலாக
காத்திருப்பேன்
தெரியுமா?
உன்னை பார்த்து விட்டால்
என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
உனக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை..
நானும்
உன்னை போலவே
வளர்பிறை
போல் வளரவும்
முடியாமல்
;
தேய்பிறை
போல் தேய்யாவும்
முடியாமல்;
தினம் தொடர்கிறேன்
என்
வாழ்க்கையை
நிலாவே
!

3 comments:

தேவன் மாயம் said...

நிலவைப்போல்
வாழ்வு!
நல்ல சொற்களுடன்
கவிதை
அழகு!!!

தேவா...

புதியவன் said...

//வளர்பிறை போல் வளரவும்
முடியாமல்;
தேய்பிறை போல் தேய்யாவும்
முடியாமல்;//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...

நான் said...

வாழ்த்துகள் அருமை அழகு