Tuesday, January 20, 2009

என் டைரியில் சொல்ல மறந்த கதை..


ஏனோ தெரியவில்லை இன்று மனசு ரொம்ப வேதனையை இருக்கு. யாரிடமும் சொல்லி மனம் பாரத்தை இறக்கி வைக்கவும் முடியவில்லை. எவ்வளவு நாள் தான் என்னுலையே புட்டி வைப்பது. என் மனம் கவலைக்கு காரணம் என்ன என்று கேட்ட்களையே? ஒரே பதில் பாசம்.

எனக்கு தானே தெரியும் பாசத்தின் அருமையையும் அதன் ஆழத்தையும். எத்தனை முறை இதே பாசதிற்க்காக அழுதிருக்கிறேன். என்னுடன் இருக்கும் தாய் தந்தை,அண்ணன்,தங்கை,பாட்டி என அனைவருக்கும் நான் ஒரு உபயோக பொருளாக தான் தெரிகிறது இன்று வரை. யாரும் என்னை ஒரு மனம் கொண்ட பெண்ணாக பார்க்கவில்லை. அனைவருக்கும் முக்கியம் பணம். பணம் இருந்தால் மரியாதையை,புகழ்,பெருமை,சொந்தம்,நண்பர்கள் எல்லாம் தேடிவருவார்கள்,என்பது இவர்களின் எண்ணம். சும்மாவா சொன்னார்கள் "பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும்"என்று. இதனால்,எனக்கு பணத்தை விட பாசமே பெரியது:உயர்ந்தது.
சில
நேரம் பிற குடும்பங்களை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கும். வெளியில் சென்று சாப்பிடுவது,சிரித்து பேசுவது,பாசமாக அணைப்பது என இன்னும் பல விசயங்கள். இதில் எவற்றையும் நான் அனுபவித்தது இல்லை. என்னை போலவே எத்தனையோ பேர் பாசத்திற்காக ஏங்குகிறார்கள். எத்தனை ஜிவன் இது போலவே மனசுக்குள் பாரத்தை சுமக்கின்றது.

3 comments:

நான் said...

அன்பு, பாசம், நட்பு இவற்றின் மதிப்பு மரியாதை,அர்த்தம் மிகவும் ஆழமானது, இது கிடைக்காத வலியும் மிகவும் ஆழமானது, வருத்தபடாதீர்கள் எல்லாம் சரியாய்போகும்.

புதியவன் said...

வார்த்தைகள் முழுதும் விரக்தியா இருக்கு...?
நம்பிக்கையோடு இருங்க எல்லாம் சரியாகிவிடும்...

Anonymous said...

ஆம். நீங்கள் சொல்வது சரிதான். எதையும் கொண்டு வரவில்லை. எதையும் கொண்டு செல்லப் போவதும் இல்லை. இருக்கிற வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அது நாம் அனைவரையும் நேசித்து அன்பு செலுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். உங்களுக்கு நான் நட்புக் கரம் நீட்டுகிறேன். உங்களைப் போல் தான் நானும்.