Sunday, January 25, 2009

இன்னும் என்னுள் தொடரும் நினைவுகள்


என்ன எழுதுறதுன்னு தெரியலை? அதனால் எனது சில தொடரும் நினைவுகள் உங்களுடன்..

மனித வாழ்கையில் மறக்க முடியாத பல விஷயங்கள் இருக்கும். சிலரின் மனதில் அந்த நட்பு,காதல்,இனிமையான உறவுகள்,சோகம்,கண்ணீர்,மகிழ்ச்சி என இன்னும் அழிக்கமுடியாத,என்றும் தொடரும் நினைவுகள் ஏராளம். என் இனிய வாழ்கையில் இதே மாற்றி நிறைய நினைவுகள்.

குறிப்பாக நான் கடந்து வந்த பள்ளிக்கூட நினைவுகள் மறக்க முடியாத சமர்ப்பணம். எனக்கு மட்டும் இல்லை,இன்னும் நிறைய பேருக்கு அது ஒரு கன காலம். உங்களுக்கு எப்படி? நண்பர்களுடன் அடித்த லுட்டி, ஊர் சுற்றியது, ஒன்றாக படித்து என நிறைய உண்டு. பள்ளியின் இறுதி நாள் என் வாழ்வில் இன்னும் ஒரு மறக்க முடியாத நாளாகும். அந்த பிரிவு என்னை அழ வைத்தது. மிகவும் வேதனையான நாள். திரும்பவும் நினைத்து பார்க்க கூட முடியாது அந்த நாள். கடவுளிடம் வாரம் கேட்டலும் கிடைக்காது அந்த பள்ளிக்கூட வாழ்க்கையும் இனிமையுடன் கொண்டதம் கலந்த அந்நாள்.

அப்படி எல்லாம் ஆட்டம் போட்ட நண்பர்கள் யாரும் இன்று எங்கே தான் போனார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் இந்த உலகம் மிகவும் சிறியது. பிரிந்த நண்பர்களை என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக சந்திப்பேன். அன்று மிண்டும் தொடரும் என் நினைவுகள்.

6 comments:

தேவன் மாயம் said...

அப்படி எல்லாம் ஆட்டம் போட்ட நண்பர்கள் யாரும் இன்று எங்கே தான் போனார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் இந்த உலகம் மிகவும் சிறியது. பிரிந்த நண்பர்களை என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக சந்திப்பேன். அன்று மிண்டும் தொடரும் என் நினைவுகள்.///

நம்புங்க.. நாங்கள் எல்லாம் போன பிறவியில் உங்களை பிரிந்த நண்பர்கள்தான்...

Anonymous said...

thanks for following my blog

gayathri said...

அன்று மிண்டும் தொடரும் என் நினைவுகள்.

nanraga thodaratum nenaivugal

VIKNESHWARAN ADAKKALAM said...

கவலையான பதிவுகளாகவே இருக்கே?

நான் said...

சிலவற்றை மறந்து விடுவது நல்லது
கலங்கவேண்டாம் வாழ்க்கை வெற்றிகரமாகவே உங்களுக்கு அமையும் வாழ்த்துகள்

Divya said...

thodaratum unga ninaivugalum.......natpukalum:))