Thursday, December 11, 2008

கோபம்



நீங்கள் மிகவும் கோவக்கரரா? ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வந்தது என்று எண்ணி பார்த்ததுண்டா? (இதோ உங்களுக்கு சில நிமிடங்கள்).. கோபம் என்பது என்ன? கோபம் என்பது சிந்தனை சமைக்கும் நிலை. எதிர்பார்ப்பு நிறைவேறாத பொது வரும் உணர்ச்சி. இத்தனைக்கும் கோபம் என்பது தேவையில்லாத ஒன்று! பிறகு ஏன் கோபம் எனும் உணர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிறது? மனவியல் ரிதியாக ஆராய்ந்தால் கோபம் என்பது ஒரு பழக்கம். ஒரு வேலையில் ஈடுபடும் பொழுது சிலருக்கு சிகரெட் பற்ற வைத்து கொள்ள வேண்டும். இந்த சிகரெட் எந்த விதத்திலும் அவர்கள் செயல்திறனை அதிகரிக்கவோ,வேலை சுமையை குறைக்கவோ உதவாது என்றாலும்,இது ஒரு பழக்கம். இது போல் நாம் எல்லாருக்கும் உள்ளும் கோபம் ஒரு பழக்கமாகி விட்டது. எந்த ஏமாற்றம் வந்தாலும் குழந்தை பருவத்திலிருந்து வளர்ந்து வரும் பழக்கம். ஏமாற்றத்தின் விளைவு சோகம்,கண்ணீர்,அச்சாம்,அவமானம் என்றெல்லாம் வெளிபட்டலும் அடிப்படை கோபம் தான். எல்லா உணர்ச்சிகளையும் போல கோபம் என்பதும் சிந்தனையின் விளைவுதான். சூழ்நிலை நமக்கு சாதகமாக இல்லாதபோது சிந்தனையை நேராக வைத்து கொள்பவர்கள் வெற்றியடைகிறார்கள். கோபம் வரவே கூடாத? உணர்ச்சிகள் யாருக்கும் மழுங்கவே கூடாது. உணர்ச்சி மலுங்கினால் மனம் நோயுற்றதை பொருள். அது வராமல் இருப்பது பயிற்சியினால் மட்டுமே முடியும். கோபப்படுவது பிரச்சனையவதில்லை. கோபத்தின் வெளிபாடு மட்டுமே பிரச்சனைகளை உருவாக்கும். நாம் கோவபடுவதினால் நிறைய பிரச்சனைகளை பார்த்து இருப்போம். பிறகு ஏன் இந்த கோபம். கோபத்தை நாம் திசை திருப்பலாம். அதற்காக நாம் நகைசுவை உணர்வை வளர்த்து கொள்வது,வாய் விட்டு சிரிப்பது,மற்றவர்களை நன்றாக கவனித்து புரிந்து கொள்ள முயல்வது,எல்லா காரியங்களையும் சிந்தித்து பின்னரே செய்வது போன்றே செயல்களை நம்மிடையே ஏற்படுத்தி கொள்ளலாம். கோபம் என்பது மனித குணம்தான். நான் முயன்றால்,நிச்ச்யம் கட்டுபடுத்தலாம்.

No comments: